Tag Archive: குருஷேத்ரம்

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-24

யாதவரே, நான் தவிர்க்கமுடியாத இடத்தை உருவாக்கிவிட்டு சாத்தன் அமர்ந்திருந்தார். “காவிய ஆசிரியன் என்பது தீயூழ் என எவரும் சொல்லி கேட்டதில்லை. காலத்தை வென்று வாழ்பவன் அல்லவா அவன்?” என்றேன். “ஆம், முதற்கவிஞன் கொல்லப்பட்ட அன்றிலை நோக்கி விடுத்த விழிநீர்த்துளியின் ஈரம் இன்னமும் காயவில்லை என்பார்கள். தலைமுறைகளைக் கடந்து, காலப்பெருக்கைத் தாண்டி நிலைகொள்கிறதென்றால் அது எத்தனை பெரிய துயர்!” என்றார். என் உள்ளம் நடுங்கியது. “அத்தகைய பெருந்துயர் எனக்கும் காத்திருக்கிறது என்கிறீர்களா?” என்றேன். அவர் அதற்கு நேரடியாக மறுமொழி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108356/

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–2

பகுதி ஒன்று : பாலைமகள் – 2 “சரஸ்வதிக்கு தெற்கே திருஷத்வதிக்கு வடக்கே இக்‌ஷுமதிக்கு கிழக்கே அமைந்துள்ளது குருஷேத்ரம் என்பது தொல்நூலோர் கூற்று” என்றார் பிரஜங்கர். “சரஸ்வதி இன்றில்லை. பயோஷ்ணி பழைய சரஸ்வதியின் தடத்தில் ஒழுகுவது என்கிறார்கள். இக்‌ஷுமதி மிக அப்பால் அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் நடுவே ஓடுகிறது. அன்றிருந்த குருஷேத்ரம் மிக விரிந்த ஒரு நிலம். அது நகரங்களும் ஊர்களும் கழனிகளும் மேய்ச்சல்நிலங்களுமாகச் சுருங்கி இன்றிருக்கும் வடிவை அடைந்து ஆயிரமாண்டுகளாகியிருக்கும்.” தேவிகை தலையாடையை நன்றாக முகத்தின்மேல் இழுத்துவிட்டுக்கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104505/

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–1

பகுதி ஒன்று : பாலைமகள் – 1 அஸ்தினபுரிக்கு வடமேற்கே கள்ளிப்புதர்களும் முள்மரங்களும் மண்டி மானுடரில்லா செம்மண்வெளியாகக் கிடந்த தொல்நிலமாகிய குருஷேத்ரத்தின் வடமேற்கு எல்லையில் இருந்த புண்டரீகம் என்னும் சிறிய சுனையில் நீராடுவதற்காக சிபிநாட்டரசி தேவிகை தன் தோழியரான பூர்ணையுடனும் சுரபியுடனும் வந்தாள். சிபிநாட்டிலிருந்து கொடியடையாளங்கள் இல்லாத எளிய பயணத்தேரில் ஏழு சிந்துக்களை கடந்து அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்து எல்லையிலமைந்த சாயாகிருகம் என்னும் சிற்றூரின் காவல் மாளிகையில் இரவு தங்கி அங்கிருந்து முதற்புலரியில் கிளம்பி குருஷேத்ரத்திற்குள் நுழைந்தாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104460/

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3

பகுதி ஒன்று : வேள்விமுகம் [ 3 ] குருவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச்சேர்ந்த ஜனமேஜயன் தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை. அவன் தீர்ப்பதற்குரிய சிக்கல்களேதும் எஞ்சவில்லை. அவன் சித்தமோ எரிதழல் காற்றை உணர்வதுபோல காலத்தை ஒவ்வொரு கணமும் அறிந்துகொண்டிருந்தது. ஆகவே அவன் பகடையாட்டத்தில் ஈடுபாடுகொண்டவனாக ஆனான். ஏணியும் பாம்பும் கொண்ட வரைபடத்தின் கட்டங்களில் மானுடவாழ்க்கையின் அனைத்து விசித்திரங்களும் உறைந்திருப்பதை சிறிது சிறிதாக அவன் காண ஆரம்பித்தான். ஒரு பகடையை புரளவைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43847/