Tag Archive: குருதி

குருதி [சிறுகதை]

சேத்துக்காட்டார் என்று சொன்னபோது ஊரில் எவருக்கும் யாரென்றே தெரியவில்லை. ‘சேக்கூரானா? மாடு தரகு பாப்பாரே?’ என்று கலப்பையும் கையுமாகச் சென்றவர் கேட்டார் சுடலை ‘இல்லீங்க..இவரு கொஞ்சம் வயசானவரு….’ என்றார் ‘வயசுண்ணா?’ ‘ஒரு எம்பது எம்பத்தஞ்சு இருக்கும்’ ‘இந்தூரா?’ ‘ஆமாங்க..’ ‘அப்டி யாரு நம்மூரிலே?’ மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘நமக்கு அவரு என்னவேணும்?’ என்றார் சுடலை அரைக்கணம் தயங்கிவிட்டு ‘நான் அவருகூட செயிலிலே இருந்தேன்’ என்றார் கலப்பைக்காரர் முகம் மாறியது. ‘நமக்கென்னாங்க தெரியும்…நானே குத்தகைக்கு எடுத்து ஓட்டிட்டிருக்கேன்…வரட்டுங்களா?’ என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34372

குருதி, நிலம் – கடிதங்கள்

திரு ஜெயமோகன், நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ‘குருதி’ கண்ணில் நீர் கோர்க்க படித்தேன். படித்து முடித்ததும் மனசெல்லாம் பாரமாக இருக்கிறது. இத்தனைக்கும் இந்த மாதிரியான எந்த கொடுமையையும் கண் எதிரே கண்டதில்லை. நான் சார்ந்த சமூகம் எனக்குத் தெரிந்து பெரிதாக மிதிபட்டதில்லை. குறைந்தபட்சம் எங்கள் குடும்பமாவது ஒரு நான்கு தலைமுறைகளாக ‘மிட்டா மிராசாக’ இருந்து வருகிறது. குந்தி தின்றதில் குன்று கொஞ்சம், இல்லை நிறைய அழிந்திருக்கிறது. ‘லே என்னலே சேத்துக்காட்டான்…சமுசாரி ஆயிட்டே போல… ‘ என்பார்கள். ‘ஏதோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34810

பிழை, குருதி-கடிதங்கள்

என் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய இனியன் ஜெயமோகனுக்கு, காலம் இதழில், உங்களின் “பிழை” கதை படித்தேன். அறம் தொகுதியில் இடம்பெற வேண்டிய படைப்பு, சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். தனி மனித வாழ்வின் அற்புதமான தருணங்களை அழகாகவும் கவிதையாகவும் சொல்லுகின்ற உங்களின் சாமர்த்தியத்தை வியந்து நிற்கிறேன். உங்களை நான் சந்தித்த வேளை நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று முகத்துக்கு நேரே சொன்னீர்கள். அறம் தொகுதியில் உள்ள கதைகளும் பிழை கதையின் ஒவ்வொரு வரியும் கடவுள் இருப்பதைத்தான் எனக்குக் காட்டுகிறது. ஒவ்வொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34808

குருதி,தீபம்,நீரும் நெருப்பும்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, குருதி கதை வரை உங்கள் சமீபத்திய கதைகளைப் படித்து விட்டேன். இந்த கதைகளை நான் இன்னொருவரிடம் சொல்வதென்றால் இருவரிகளில் சொல்லி விடலாம். இந்தக் கதைகள் நுண்நோக்கி வழியாகக் காண்பது போன்று இருந்தது. மிக மெதுவாக அதே சமயம் மிக இயல்பாக. உங்கள் பழைய கதைகளைத் திரும்ப திரும்ப வாசித்திருக்கிறேன், இன்னும் பல கதைகள் எனக்கு அந்தரத்தில்தான் நிற்கின்றன, ஆனால் இந்தக் கதைகள் அப்படி அல்ல. நிலம் கதையும் குருதியும் மண்ணில் தன்னை நிறுத்திக் கொள்ளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34805