Tag Archive: கும்போதரன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35

பீமன் விசையுடன் நடந்து பாய்ந்து புரவியிலேறி அதை நாற்குளம்போசையுடன் விரையச்செய்தான். அவன் உளமறிந்ததுபோல் புரவி புதர்கள் மண்டிய பாதையில் தாவிச் சென்றது. சிறு ஓடைகளை தாவிக் கடந்தது. அதன் குளம்புகளில் பட்டு கூழாங்கற்கள் பறந்தன. பீமன் கடிவாளத்தை ஒரு கையால் பற்றியபடி பற்களைக் கடித்து உடற்தசைகளை இறுக்கி அமர்ந்திருந்தான். அங்கிருந்து விலகி செல்லச் செல்ல அவன் மெல்ல ஆறுதல் அடைந்தான். தன் அகம் அத்தனை அஞ்சியிருப்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான். எதன் பொருட்டு அஞ்சினேன் என தன்னையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121661

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-33

தூமவர்ணி அரைத்துயிலில் என விழிசொக்கி அமர்ந்திருந்த குட்டிக்குரங்குகளிடம் சொன்னது “சிதல்புற்றின் முன் அமர்ந்திருந்த கபீந்திரரிடம் வால்மீகி தன் கதையை சொன்னார். கபீந்திரர் அச்சொற்களை தன் விழிகளாலும் வாங்கி உள்ளமென ஆக்கிக்கொண்டார். ஆகவே இக்கதை இந்நாள் வரை இங்கே திகழ்கிறது. என்றும் திகழும்.” உண்மையில் ஒவ்வொரு அடிக்கும் நான் நம்பிக்கை இழந்துகொண்டிருந்தேன். அவ்வாறுதான் அது முடியுமென்றும் தோன்றியது. ஆனால் என் குடியின் எல்லை கடந்து நான் சென்றதும் என்னை நோக்கி களிக்கூச்சலிட்டபடி ஓடிவந்த மைந்தரைக் கண்டதும் நானே நூறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121609

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-31

தூமவர்ணி தன் கால்களை அகற்றி வைத்து மரக்கிளையில் அமர்ந்து தன்னைச் சுற்றி குழுமிய குட்டிக் குரங்குகளை இரு கைகளாலும் அணைத்து உடலோடு சேர்த்து அவற்றின் மென்தலையை வருடியபடியும் சிறுசெவிகளை பற்றி இழுத்தபடியும் கொஞ்சியபடி கதை சொல்லத் தொடங்கியது. கதையின் ஆர்வத்தில் குழவிகளின் வால்கள் நாகக் குழவிகளென நெளிந்தன. அந்த ஒன்றுதலை அப்பாலிருந்து கண்ட பிற குரங்குகள் அருகணைந்து செவிகூர்ந்து மரக்கிளைகளில் அமர்ந்தன. சற்று நேரத்தில் கதை சொல்லும் குரங்கைச் சுற்றி கூடின. மிக அப்பால் கும்போதரன் கிளையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121566

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-30

குருக்ஷேத்ரத்திலிருந்து தென்கிழக்கு நோக்கி செல்லும் காட்டுப்பாதையில் புதர்களை ஊடுருவியபடி பீமன் புரவியில் சென்றான். அவனது தலைக்குமேல் அன்னைக் குரங்கு ஒன்று “நில்! நில்!” என்று கூவியபடி கிளைகளிலிருந்து கிளைகளுக்கு வால் விடைத்துத் தாவி, ஊசலாடி அமர்ந்து, மீண்டும் துள்ளி கிளை நுனி பற்றி ஊசலாடி அமர்ந்தெழுந்து கூவியபடி உடன் வந்தது. “நில், மைந்தா! நில்!” என்று மீண்டும் அது கூவியது. பீமன் அதன் குரலைக் கேட்டாலும் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. தன்னுள் ஆழ்ந்து தோள்கள் தளர்ந்து உடல் முன்னால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121559