Tag Archive: கும்பமேளா

கும்பமேளா – 4

ஜனவரி 13 அன்று மதியம்வரை ரிஷிகேஷிலேயே சுற்றினோம். கங்கைக்கரைக்குச் சென்று மீண்டும் குளிர்ந்துக்குளிர்ந்த நீரில் நீராடினோம். கொஞ்சம் தூங்கினோம். மாலை மூன்றரை மணிக்கு ஆட்டோ வருவதாகச் சொல்லப்பட்டிருந்தது. வந்தது நான்கரை மணிக்கு. எட்டுபேர் ஏறும் ஆட்டோ. அதில் ஏறி ஹரித்வார் கிளம்பினோம். கும்பமேளா ரிஷிகேஷில் இருந்தே ஆரம்பித்துவிட்டது போல் இருந்தது. ஒரு முடிவிலா பேரணிபோல மக்கள் 22 கிலோமீட்டர் அப்பாலிருந்த ஹரித்வாருக்கு மூட்டை முடிச்ச்சுகளுடன் நடந்தே சென்றுகொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் ஏழைத்தோற்றம் கொண்டவர்கள். பெரிய முண்டாசுகளில் வித விதமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7167

கும்பமேளா – 3

ரிஷிகேஷில் காலை ஆறுமணிக்கே விழித்து எழுந்து குளிக்காமல் பல் தேய்த்து காலையுணவை சாப்பிட்டபின் காத்திருந்தோம். முந்தையநாள் கிருஷ்ணன் கங்கையில் சறுக்குப்படகு பயணம் செய்யலாம் என்று ஏற்பாடு செய்திருந்தார். அவரே விசாரித்து விவாதித்து பேரம்பேசி தலைக்கு முந்நூறு ரூபாய் செலவில் செய்த ஏற்பாடு அது.  அந்நேரத்திலேயே மடத்தில் சூடான காலை உணவு கிடைத்தது. ஏழரைமணிக்குத்தான் ஓட்டை வண்டி வந்துசேர்ந்தது. அதன் பின்பக்கம் இருந்த திறந்த பெட்டியில் ஏராளமான தட்டுமுட்டு பொருட்கள். அவற்றுடன் நானும் யுவன் சந்திரசேகரும் அரங்கசாமியும் ஏறிக்கொண்டோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7161

கும்பமேளா – 2

ஹரித்வாருக்கு வந்திறங்கியபோது அதிகாலை மூன்று மணி. பனி கொட்டிக்கொண்டிருந்த ஒரு பொட்டல்வெளியில் விளக்கொளியில் புழுதிப்படலம் தங்கச்சல்லாபோல ஜொலித்துக்கோண்டிருந்தது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7156

கும்பமேளா – 1

சென்ற ஏப்ரல் பத்தாம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து நானும் நண்பர்களும் டெல்லிக்கு விமானத்தில் கிளம்பினோம்.  வசந்தகுமார், யுவன் சந்திரசேகர், அரங்கசாமி ,அருண் மற்றும் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணன். நான் ஒருநாள் முன்னதாகவே வந்து  சென்னையில் தங்கியிருந்தேன். சில சினிமா சந்திப்புகள். மற்றவர்கள் பத்தாம் தேதி காலையில்தான் வந்து சேர்ந்தார்கள். அனைவருமாக கிளம்பி மீனம்பாக்கம் சென்றோம். நான் அங்காடித்தெரு மனநிலையில் இருந்து முழுமையாக விலகியது விமானநிலையம் வந்த பின்னர்தான். அதுவரை தொலைபேசி அழைப்புகள் வந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7149

கும்பமேளா பயணம்

இந்தமுறை அரித்துவார் கும்பமேளாவுக்கு போகலாமென சட்டென்று ஓர் எண்ணம் வந்தது. அத்தனைபெரிய கூட்டம் என்றால் அந்த பயணம் ஓர் சகச யாத்திரையேதான்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6793

» Newer posts