Tag Archive: கும்பமேளா

கூடியிருந்து குளிர்தல்…

அன்புள்ள ஜெ, உங்களோடு வருவதாக இருந்த கும்பமேளா திட்டம் என் வகுப்புக்கள் காரணமாக ஒரு வாரம் தள்ளிப் போய்,  வசந்தபஞ்சமியை அடுத்த வசந்த பெளர்ணமி, நீராடல் மிக முக்கிய நிகழ்வு என்பதால்,  இந்த வாரம் திட்டமிட்டோம். நண்பர்கள் சிவாத்மா, சண்முகம் , அவர் மாமா முருகதாஸ், என நால்வரும் சென்று வந்தோம். சென்னையில் ரயில் ஏறும் போதே மனதில் உற்சாகம் நிறைந்து விட்டது. எதிர் இருக்கை பயணிகள் ஊர் ஊராக சென்று, “ஸ்ரீமத் பாகவத சப்தாஹம்”  செய்யும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118493

நீர்க்கூடல்நகர் – 7

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பியபின் ஒரு உளஓவியம் துலங்கி வந்தது, அங்கிருக்கையில் அதை உணர்ந்திருந்தேன், வந்தபின் விரித்து அறிந்தேன். கும்பமேளா பெரும்பாலும் அடித்தள மக்களின் விழா. அதாவது தங்கள் பொருட்களை துணியில் மூட்டைகளாகக் கட்டி தலையில் சுமந்தபடி பேருந்துகளில் வந்திறங்குபவர்களே மிகப்பெரும்பாலானவர்கள், பெட்டிகள் பைகள் கூட அவர்களிடமில்லை. இத்தனைக்கும் நூறுரூபாய் விலையில் பைகள் அங்கே விற்கப்பட்டன. அலகாபாத் நகரிலிருந்து மிகமிகக்குறைவானவர்களே கும்பமேளாவுக்கு வந்தனர். நடுத்தரவர்க்கத்தினர் குறைவு, பணக்காரர்கள் அரிதினும் அரிது.  பெரும்பாலான அலகாபாத் நகர்மக்களுக்கு கும்பமேளா ஒரு பொருட்டாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118161

நீர்க்கூடல்நகர் – 6

கும்பமேளா பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒருநண்பர் சொன்னார், சென்ற மூன்று மாதங்களாக கும்பமேளா பற்றி தேசிய ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும் அத்தனை செய்திகளுமே எதிர்மறையானவை என. எல்லா தகவல்களுடனும் ஓர் ‘அறிவார்ந்த’ விமர்சனமும் ஊடாடியிருக்கும். கும்பமேளா பற்றி இந்தியாவின் ‘படித்த’ வட்டத்தினரிடம் இருக்கும் உளப்பதிவுகள் எல்லாமே இப்படி ஆங்கில ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டவை. அங்கே கடுமையான நெரிசல் இருக்கும், ஆகவே சாவு உறுதி என்பது முதல் உளப்பதிவு. அங்கே கழிப்பறைகள் இருக்காது, மக்கள் எங்குபார்த்தாலும் மலமும் சிறுநீரும் கழித்து நாறடித்திருப்பார்கள், குப்பை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118129

நீர்க்கூடல்நகர் – 5

கும்பமேளாவைப்பற்றிய புராணக்கதைகள் பல. பெரும்பாலான கதைகள் தேவர்களும் அசுரர்களும் கடைந்து எடுத்த விண்ணின் அமுதம் நீரில் விழுந்தது, அத்தருணத்தில் நதிநீர் அமுதமாக மாறுகிறது, அதில் நீராடினால் பாவங்கள் அகலும் என்னும் நம்பிக்கையின் வெவ்வேறு வடிவங்கள். ஆனால் இந்தக்கதைகள் மிகமிக பிற்காலத்தையவை. சொல்லப்போனால் இந்தியாவில் பத்தாம்நூற்றாண்டுக்குப் பின்னர் பக்தி இயக்கம் பெரும் மக்களியக்கமாக ஆனபின்னர், எளியமக்கள் பல்லாயிரக்கணக்கில் இவ்விழாவில் பங்குகொள்ள வரத்தொடங்கியபின்னர், அவர்களின் புரிதலுக்காக உருவாக்கப்பட்டவை. ஆகவே பொதுவாக மிகமிக எளிமையானவை. வரலாற்றுரீதியாக கும்பமேளாவை இரண்டு கோணத்தில்தான் புரிந்துகொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118074

நீர்க்கூடல்நகர் – 4

காலை எழுந்தது ஆறு மணிக்கு. ஆனால் டீ கிடைக்க ஏழுமணியாகும். வெந்நீர் சூடு செய்து ஒவ்வொருவராகக் குளித்துமுடிக்க ஒன்பது மணி. அதன்பின்னரே கீழே இட்லியும் தோசையும் கிடைக்கும். அந்தத் தள்ளுவண்டிக்கடைக்காரர் இந்திக்காரர். ஆனால் இட்லி பெரும்பாலும் இட்லிபோலவே இருந்தது. அதேசமயம் வடை தமிழகத்தைவிட சிறப்பானது. தமிழகத்தில் உளுந்துவடை அல்லது மெதுவடை என்னும் உணவுப்பொருளை அழித்தேவிட்டனர். எங்குபோனாலும் இட்லியுடன் கொண்டுவைப்பார்கள். “எடு! எடு!” என கதறவேண்டியிருக்கும். எண்ணைக்காறலுடன் சோடாஉப்பின் நுரைத்தன்மையுடன் இருக்கும் அந்தப்பொருளை ஒரு அர்த்தமில்லாத சடங்குக்காகவே தமிழர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118027

நீர்க்கூடல்நகர் – 3

அலஹாபாத் என்னும் பிரயாக்ராஜுக்கு அந்திக்குள் சென்றுசேர்வதென்று திட்டம். ஆனால் அதற்கு இருநூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவு. ஐந்துமணிநேரத்தில் போய்விடலாம்தான். ஆனால் காலை என்பது பன்னிரண்டு மணி என கணக்கு. ஒருவழியாக ஒன்பது மணிக்கு எழுந்து சொக்கிய கண்களுடன் பார்த்துவிட்டு பொழுது விடிய இன்னும் கொள்ளைநேரம் இருக்கிறது என்று திரும்பப்படுத்துக்கொள்ளும் மனநிலை. ஆனால் உச்சிப்பொழுதிலும் இதமான இளவெயில்.கொஞ்சம் நிழல் இருந்தால்கூட அங்கே குளிர். வட இந்தியாவிற்கு பொதுவாக இருக்கும் ஒரு வெறிச்சிட்ட தன்மையை சாலையில் பார்த்துக்கொண்டே சென்றோம். மஞ்சள்மலர்கள் நிறைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117995

கும்பமேளா – 8

ஏப்ரல் பதினாறாம் தேதி காலை ருத்ரபிரயாகில் கண்விழித்தேன். குளிரே இல்லை. ஜன்னல்வழியாகவே அளகநந்தாவும் மந்தாகினியும் தழ்விக்கொள்வதை பார்க்க முடிந்தது. அபாரமான ஒரு தனிமையுனர்ச்சி ஏற்பட்டது. அல்லது இழப்புணர்ச்சி. மாபெரும் மன எழுச்சியுடன் அங்கே வந்திருக்கிறேன். ஆனால் அந்த இடத்தை என்னால் கொஞ்சம்கூட அடையாளம் காண முடியவில்லை. நான் வந்தது வேறு எங்கோ என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். வெளியே இறங்கி தனியாக ஒரு சுற்று சுற்றினேன். அப்போது ஓரளவு தெளிவாகியது. நான் 1986ல் வந்தபோது ஆழமான நதிக்குமேல் ஒரு பாலம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7196

கும்பமேளா – 6

பிரம்மாண்டமான வரிசை நெரிந்து நெரிந்து சென்று கொண்டே இருந்தது. பின்பு தற்காலிகப்பாலங்களில் ஏறி மறுபக்கம் சென்று படித்துறைக்கு திறந்தது. அங்கே மக்கள் திரள் ஒரு வண்ணக்குளம் போலிருந்தது. பூஜைகளின் போது மலர்க்குவியல்கள் கொட்டப்பட்ட குளத்தில் பலவண்ணங்களில் அவை படலமாக அலைபாய்வது போல. அந்தக்குளம் நோக்கி ஓடை போல எங்கள் வரிசை சென்றிறங்க அதேபோல இன்னொரு ஓடை வழிந்து வெளியேறியது. மக்கள் குரல்கள் இணைந்து பேரொலி எழுந்துகொண்டே இருக்க கொஞ்ச நேரத்தில் அந்த ஒலி நம் காதுக்குப் பழகி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7171

கும்பமேளா – 7

கோயிலூர் மடத்தில் பொறுப்பில் இருந்த ஆச்சியிடம் சொல்லி கார் ஏற்பாடு செய்துகொண்டு ஏப்ரல் 15 அன்று காலை ஏழு மணி வாக்கில் கிளம்பினோம். கங்கை கரை வழியாகவே பயணம் செய்து முடிந்தவரை நதியில் குளித்துக்கொண்டே  ருத்ரப்பிரயாகை வரை சென்று அங்கே தங்கிவிட்டு மறுநாள் குளித்துக்கொண்டே திரும்பி வருவதுதான் திட்டம். கங்கை சீக்கிரமே பாதாளத்துக்குள் சென்றுவிட்டது. காலை ஒளியில் வெண்ணிறமான  உருளைக்கற்கள் நடுவே நீலபளிங்கு வழிவாக தளதளத்துச் சென்றது. மேலிருந்து பார்க்கையில் அலைகள் கண்களை மின்னல்களால் நிரப்பின. அவற்றில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7183

கும்பமேளா – 5

சாப்பிட்டுவிட்டு ஹர் கி போடி படித்துறைக்கு இறங்கிச்சென்றோம். அதுதான் கும்பமேளா என்ற மானுடப்புயலின் மையம்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7168

Older posts «