Tag Archive: குபேரன்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 27

[ 8 ] பொன்னகரின் தெரு வழியாக அர்ஜுனன் நடந்துசென்றான். அங்கு மாளிகைகள், காவல்மாடங்கள் அனைத்தும் பொன்னென மின்னின. செடிகளும் மரங்களும் பொன்னென்றிருந்தன. முகில்கள் பொன். அவற்றை எதிரொளித்த சுனைநீர்ப்பரப்பும் பொன். அங்கே மிதந்தலைந்த கந்தர்வரும் கின்னரரும் தேவரும் பொன்னுருவர். அளகாபுரியின் காவல் வீரரும் ஏவலாளரும் பொன்னுடல்கொண்டிருந்தனர். பொன்னென்றாகியது தன் விழியோ என்று அவன் ஐயுற்றான். நகரின் எவ்விழிகளும் அவன் உள்நுழைந்ததையும் ஊடுருவி கடந்து செல்வதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொருவர் விழிகளையும் அவன் உற்று நோக்குகையில் அறியாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92237

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 25

[ 5 ] தன் வடபுலப்பயணத்தில் பெருஞ்செல்வர் பன்னிருவரை அர்ஜுனன் சென்று கண்டான். ஒவ்வொருவரும் குபேரனை உணர்ந்திருந்தனர். அவனை குறைபடக் கண்டிருந்தனர். முழுமையாக எவரும் கண்டிருக்கவில்லை.  “முழுமையாக அவன் தன்னுருவை திருமகளுக்கு மட்டுமே காட்டுவான் என்கிறார்கள். பிறர் அவன் முழுவுருவைக்காணும் திறனற்ற உள்ளம் கொண்டவர்கள். செல்வம் சித்தம் மயக்குவது. பெருஞ்செல்வம் பித்தாக்குவது” என்றார் முதிய வைதிகர் ஒருவர். “செல்வமென குபேரன் கொண்டிருப்பதெல்லாம் திருமகளின் வலக்கையின் மலர்வரிகளுக்குள் அடங்கும்” என்றார். குபேரனின் ஒரு நிழலசைவைக் கண்டவர்கூட அக்கணத்திலிருந்து  தொடங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92192

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23

பகுதி மூன்று : பொருள்கோள் பாதை [ 1 ] வளர்பிறைக்காலம் முடிவுவரை அர்ஜுனன் ஜாதவேதனுடன்அவன் குடியில் வாழ்ந்தான்.. மைந்தனுடன் விளையாடி தன் உள்ளுருகி எழுந்த அமுது அனைத்தையும் அவனுக்கு ஊட்டி அவ்வின்பத்தில் கணம் கணம் என நிறைந்து திளைத்தான். ஒன்றுபிறிதொன்றைக் கண்டடைந்து நிறைத்து தானழிவதே உயிர்களுக்கு விண்ணென்றானது வகுத்தளித்த பேரின்பம் என்று அறிந்தான். ஜாதவேதன் தன் மைந்தன் உயிர்மீண்ட செய்தியை தன் நூற்குலத்தையும் குடியையும் சேர்ந்த நூற்றெட்டு அந்தணர்களுக்கு நேரில் சென்று அறிவித்தான். அவனுக்கு அமிர்தன் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92105

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை -6 அரங்குசொல்லி மெல்ல அரங்கின் மையத்தில் வந்து நின்று கைவிரித்து “ஆக, ஓர் அங்கத நாடகத்தில் ஒருபோதும் வரமுடியாத வஞ்சங்களும், பெருவிழைவுகளும், விளைவான முற்றழிவும் இந்நாடகத்தில் வரவிருக்கின்றன. இக்கவிஞன் எந்த முறைமைக்குள்ளும் அடங்காதவன். ஏனெனில் இந்த நாடகத்தை அவன் தனக்காகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறான். இதற்குமேல் இதில் எனக்குப் பங்கென ஏதும் இல்லை. இதோ நான் அணியறைக்குச் சென்று இந்தத் தலைப்பாகையை கழற்றி வைத்துவிட்டு என் உடைகளை அணிந்துகொண்டு என் இல்லத்திற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84896

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 33

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 4 தன் மாளிகையின் உப்பரிகையில் அமர்ந்து சித்ரரேகையுடன் பகடையாடி மகிழ்வது குபேரனின் கேளிக்கை. அரவும் ஏணியும் அமைந்த களத்தில் மானுடம், தாவரம், மலைகள் என்பனவற்றின் சடலங்களை கருக்களாக்கிப் பரப்பி காம குரோத மோகம் என்னும் மூன்று பகடைக் காய்களை ஆடும் அந்த ஆட்டம் முற்றிலும் நிகர் நிலையில் முடியவேண்டும் என்பது அளகாபுரியின் தெய்வ ஆணை. அது குலையுமென்றால் நிகர்நிலையழியும் . செந்நிறமும் கருநிறமும் பொன்நிறமும் கொண்ட காய்களை மாறி மாறி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79630

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 3 வடதிசையை பொன்னுக்குரியது என்றனர் கவிஞர். வடதிசைக் காவலனாகிய குபேரனின் பெருநகர் அளகாபுரி. பொன்னொளி பெருகி பொலிவு கொண்டது. பொன்மாடங்கள் மீது பொற்தழல் என கொடிகள் பறப்பது. அங்குள்ள புழுதியும் பொன்னே. அங்கு தன் அரசி சித்ரரேகையுடனும் மைந்தன் நளகூபரனுடனும் இனிதிருந்து ஆண்டான் குபேரன். ஒழியாத கருவூலம் கொண்டவன். எண்ணிமுடியாத செல்வங்களின் மேல் அமர்ந்திருப்பவன். ஆடகப் பசும்பொன்னில் முற்றிய கதிர்மணியில் பழுத்த இலைகளில் அடிமரத்தின் வைரத்தில் அடிவானத்து ஒளியில் கைம்மகவின் கால்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79619

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 2

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை – 2 அகன்றுவிரி எழினி உவகைச் சொல்முளைத்த இதழ் என பிரிந்தகல உள்ளே ஏழடுக்கு நிலைவிளக்கு ஐம்பது நெய்த்திரிகளுடன் மலர்ச்செண்டு போல நின்றிருந்தது. இருபக்கமும் கரவெழினிக்கு அப்பால் அமர்ந்திருந்த இசைச்சூதரின் தண்ணுமையும் முழவும் மணியும் வர்கோலும் தாளத்துடன் முழங்கின. இருபக்கங்களிலிருந்தும் ஆணும் பெண்ணுமென இருஆட்டர் சமன்நடையிட்டு வந்து நிலைவிளக்கின் வெளிச்சத்தில் நின்று கைகூப்பி இடை வளைத்து அரங்கை நடனமுறைப்படி வணங்கினர். ஆட்டன் மான்தோல் ஆடை அணிந்து சடைமுடிக்கற்றைகள் சூடி நீண்டதாடியுடன் முனிவர்கோலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75444

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 53

பகுதி 11 : முதற்தூது – 5 கிருஷ்ணன் அவைநுழைவதற்கு இரண்டுநாழிகைக்கு முன்னரே அவைகூடி முறைமைகளும் அமைச்சுப்பணிகளும் நடந்து முடிந்திருந்தன. அவனும் பலராமரும் சாத்யகியும் வந்தபோது கனகர் அவர்களை வரவேற்று சிற்றவையை ஒட்டிய விருந்துக்கூடத்தில் அமரச்செய்தார். “பேரமைச்சர் சௌனகர் அரசருடன் அவையமர்ந்திருக்கிறார் யாதவரே. தங்களை அவர் வந்து சந்திப்பார்” என்று சொல்லி கனகர் தலைவணங்கினார். “அவையில் என்ன பேசப்படுகிறது?” என்று பலராமர் உரத்த குரலில் கேட்க சாத்யகி திடுக்கிட்டான். கனகர் குழப்பம் கொண்டு கிருஷ்ணனை நோக்கியபின் மெல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73320

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 21

பகுதி நான்கு : அனல்விதை – 5 கங்கைக்கரையில் இருந்த சிறு நகரான கல்மாஷபுரிக்கு மழைமூட்டம் கனத்திருந்த பின்மதியத்தில் பத்ரர் துணையுடன் வணிகர்களாக மாறுவேடமிட்டு பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் வந்து சேர்ந்தார். அங்கநாட்டைக் கடந்ததும் கங்கை மேலும் மேலும் அகன்று மறுகரை தெரியாத விரிவாக ஆகியது. அதன் நீல அலைவிரிவில் பாய் விரித்துச்சென்ற வணிகப்படகின் அமரமுனையில் நின்று துருபதன் கரையை நோக்கிக்கொண்டிருந்தார். பத்ரர் அருகே வந்து “இன்னும் நான்குநாழிகைநேரத்தில் கல்மாஷபுரி வந்துவிடும் என்றனர் அரசே” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64985

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12

பகுதி மூன்று : புயலின் தொட்டில் [ 2 ] சந்திரகுலத்து அரசன் யயாதியின் இரண்டாவது மைந்தனாகிய துர்வசு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் தன் தந்தையால் குலமிழந்து நாடு துறக்கும்படி தீச்சொல்லிடப்பட்டான். அச்சொல்லைக் கேட்டதும் கண்ணீருடன் அரண்மனையைவிட்டு வெளியே வந்து சந்திரபுரியின் கோட்டைவாயிலில் நின்றான். ஒரேசொல்லில் அன்றுவரை அவனிடமிருந்த அனைத்தையும் தந்தை திரும்பப்பெற்றுவிட்டதை உணர்ந்தான். அரசும் குலமும் குடும்பமும் கனவெனக் கலைந்து மறைந்தன. வானேறிச்செல்லவோ பாதாளத்துக்குச் செல்லவோ அவனுக்கு மனமிருக்கவில்லை. ஆகவே நான்குதிசைகளும் அவன் முன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45861