Tag Archive: குடுமியான் மலை

வழிகாட்டிகள்

    எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது எனது தந்தை வழிப்பாட்டி லக்ஷ்மிக்குட்டி அம்மா திருவட்டாறு ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்று அங்குள்ள முகமண்டபத்தின் சிற்பங்கள் ஒவ்வொன்றையாக சுட்டிக் காட்டி அவற்றில் எதையெல்லாம் நான் ரசிக்கவேண்டுமென்று கற்பித்ததை நினைவு கூர்கிறேன். ஒற்றை விரல்காட்டி நிற்கும் துவாரபாலகன் ‘இறை ஒன்றே’ என்றும் மறுபக்கம் உள்ளே நான்குவிரல் காட்டி நிற்கும் துவாரபாலகன் ‘அது இங்குள்ளது’ என்றும் சொல்கிறார் என்று அவர் சொன்னது அப்போதிருந்த அவர்களுடைய முகபாவனையோடு இன்றும் நினைவில் இருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91674

தஞ்சை:கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் நார்த்தாமலையின் படங்களை இங்கு http://picasaweb.google.com/strajan123/NORTHAMALAI#5151128734378499282 காணலாம். நார்த்தா மலைக்கு நாங்கள் 2005ம் ஆண்டு சென்றிருந்தோம். மதுரை மேலூர் தாண்டியதில் இருந்தே தொடர்ந்து குன்றுகள் குண்டுகள் வைக்கப் பட்டுப் பிளக்கப் பட்டுக் கொண்டேயிருந்தன. வரிசையாக பெரிய கரிய யானைகள் போல படுத்திருந்த குன்றுகள் எல்லாமே இடைவெளியின்றி வெட்டி எடுக்கப் பட்டுக் கொண்டிருந்தன. அதே வேகத்தில் அந்தக் குன்றுகள் வெடி வைக்கப் பட்டு பிளக்கப் பட்டிருக்குமானால் இன்று அனேகமாக வழியில் இருந்த எந்த குன்றுகளுமே காணமல் தரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8975

தஞ்சை தரிசனம் – 1

அக்டோபர் 16 அதிகாலை ஐந்தரை மணிக்கு அரசுப்பேருந்தில் திருச்சி வந்துசேர்ந்தேன். இப்போதெல்லாம் பேருந்துப்பயணம் எனக்கு திகில் பயணமாக ஆகிவிட்டிருக்கிறது. பயணங்களில் தூங்குவது வரை தாகமும் சிறுநீர் முட்டலுமாக அவஸ்தை. ஆகவே முந்தையநாள் இரவே அதிகமாக தூங்காமல், பகல்தூக்கத்தையும் ரத்துசெய்துவிட்டு, பேருந்தில் ஏறினேன். பத்துமணிக்கெல்லாம் நல்ல தூக்கம் வந்துவிட்டது. உள்ளூர சிந்தனை ஓடிக்கொண்டிருப்பதுபோல இருந்தது. அரைத்துக்கம் ஒருவகை போதைநிலை. காலையில் திருச்சி. நண்பர் இருவரும் அங்கே வந்திருந்தார்கள். நான் ஆட்டோவில் நண்பர்கள் ஓட்டலுக்குசெ சென்று என் அறையில் அரைமணிநேரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8901

புதுக்கோட்டை கடிதங்கள்

ஜெயமோகன் ஐயா, வணக்கம். தங்கள் புதுக்கோட்டை பயணம் தெரிந்து, கீழ்க்கண்ட வலை இணைப்பினை தெரிவிக்கிறேன். நன்றி, அன்புடன், நாஞ்சில் சுரேஷ். வணக்கம் ஜெயமோகன் சார். புதுக்கோட்டையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் நிறைய உள்ளன.குறிப்பாக ஆவுடையார் கோயில் என்னும் திருப்பெருந்துறை ஆலயம். நரியைப் பரியாக்கித் திரட்டிய பணத்தில் மாணிக்கவாசகர் உருவாக்கிய இவ்வாலயத்தின் கருவறையில் ஈசன் இல்லை. இங்குள்ள சிற்பங்களும் ஓவியங்களும் மிகச் சிறப்பானவை. ஒரே கல்லால ஆன சங்கிலி எல்லோரும் வியந்து பாராட்டக் கூடியது. மேலும் பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8802