Tag Archive: குடிப்பழக்கம்

நமக்குள் இருக்கும் பேய்

நண்பர்களே, இந்த மேடையில் நான் வந்து நிற்பதற்கான காரணம் என்ன? ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் என்ற அமைப்பு குடிநோயாளியாக இருந்து திருந்தியவர்களுக்காக உருவாக்கபப்ட்டது. குடிகாரர்கள் குடிகாரர்களிடம் பேசும் அமைப்பு. நான் ஒரு முன்னாள் குடிகாரன் என்று சொன்னபிறகுதான் இங்கே பேசவே ஆரம்பித்தார்கள். நான் இன்றுவரை குடித்ததில்லை. மதுவகைகளின் வாசனைகளையும் நிறங்களையும் கூட என்னால் சொல்லிவிட முடியாது. அப்படியானால் இங்கே எனக்கு என்ன இடம்? நண்பர்களே, நான் என் நண்பர்களிடம் இப்படிச் சொல்லிக்கொள்வதுண்டு. ‘நான் ஒரு குடிக்காத குடிகாரன்’ அதைத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/14390

தமிழகக் கிராமங்கள்

அன்புள்ள ஜெயமோகன், நலமா? உங்களின் கிராமக் கழிப்பறைகள் பற்றிய கட்டுரை படித்தேன். தமிழகத்தின் இன்றைய கீழ்நிலை குறித்து தொடர்ந்து எழுதி வரும் ஒருசிலரின் நீங்களும் ஒருவர். தமிழ்நாட்டில் தொடர்ந்து பயணிக்கும் உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களில் தொனிக்கும் உண்மை மிக ஆழமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வெற்றுக் கூச்சலே இன்றைக்கு வெற்றிக் கூச்சல் என்னும் நிலையில் பொது நல அக்கறை குறித்துத் தமிழ்நாட்டில் பேசுவது மிக, மிக அருகிப் போன ஒரு விஷயம். இன்னும் ஒரு பத்தாண்டுகளில் அப்பட்டிப்பட்டவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56649

புறப்பாடு – வறுமை – கடிதம்

அன்புள்ள ஜெ சார், புறப்பாடு குறித்த எனது மனப்பதிவுகளை பகிர்ந்து கொள்ள இந்த கடிதத்தை எழுதுகிறேன். அதற்கு முன்னரே ஒரு disclaimer: நான் வாசிப்பின் ஆரம்பத்தில் இருக்கும் மிக மிக ஒரு எளிய வாசகன் மட்டுமே. நீங்கள் எழுத்தினூடாக மறைபொருளாக சொல்லும் விஷயங்களில் பல என் தலைக்கு மேல் தாண்டிச் செல்வதே வழக்கம் :-) ஆனாலும் தொடர்ந்து வாசிப்பவன் என்ற தகுதியிலும், படித்ததின்பாற் தோன்றியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலிலும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40647

குடி- கடிதங்கள்

அன்பின் ஜெ குடியை பற்றி மிக சிறப்பான கட்டுரை.நலம் தொகுப்பில் இது தொடர்பாக மற்றொரு சிறப்பான கட்டுரை வாசித்தது நினைவுக்கு வருகிறது .இங்கு தினமும் குடியால் வாழ்வை இழக்கும் ஒருவரை ஏனும் நான் சந்திக்கிறேன் .குடி இழிவானது என்று அனேக மனிதர்களுக்கு புரிந்தும் இருக்கிறது ஆகினும் அவர்களால் அதிலிருந்து வெளிவர இயலவில்லை .இதை வைத்தே நிச்சயம் இது வெறும் பழக்கம் சார்ந்தது மட்டும் அல்ல என்று புரிந்துகொள்ளலாம் . டாஸ்மாக் விற்பனை கடந்த ஆண்டு 14,000 கோடி எட்டியுள்ளதாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16720

குடி-கடிதங்கள்

அன்புள்ள ஜெ நமக்குள் இருக்கும் பேய் –நான் சமீபத்தில் படித்த சிறந்த கட்டுரை( மேடையில் நீங்கள் ஆற்றிய உரையாக இருப்பினும்). பொதுவாக இது போன்று வரும் சிறப்பு விருந்தினர்கள் ஒன்று எல்லோருக்கும் தெரிந்த நீதிபோதனை விஷயங்களையே சொல்வர்.(குடி குடியைக் கெடுக்கும்) அல்லது புரியாத விஷயங்களைக் கூறி பயமுறுத்துவர்.குறிப்பாக மருத்துவர்கள்–(லிவர் சிர்ரோஸிஸ் ஹெப்பாட்டிக் என்கெஃபலோபதி யை உண்டாக்கும்). ஆனால் ஒரு கலைஞனுக்கு நுண்ணறிவு அதிகம்.அவன் கூர்ந்து அவதானித்ததை நன்கு விளக்கும் ஆற்றலும் பெற்றிருந்தால் எந்தத் தளத்திலும் மிகச் சிறப்பான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16711