Tag Archive: குசை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 32

பகுதி ஆறு : பூரட்டாதி [ 1 ] படைப்பின் ஊழ்கத்திலிருந்து கண்விழித்தெழுந்த பிரம்மனின் பாலைநிலம் விரிந்தது என்றும் அங்கே மிக எளிய ஒற்றைப்புல்லிதழ் மட்டுமே எழுந்து நின்றிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. “ஒரு புல்லில் என்ன நிகழும்?” என்ற எண்ணம் பிரம்மன் உள்ளத்தில் எழுந்தது. “நீ ஆயிரமாண்டுகள் எந்தத் தடையும் அற்றவளாகுக!” என்று அவர் அருளுரைத்தார். குசை என்னும் அந்தச்சிறுபுல் அக்கணம்முதல் பெருகலாயிற்று. அங்கே பெரும்புல்வெளி ஒன்று எழுந்து விரிந்தது. அதில் தும்பிகளும் வண்ணத்துப்பூச்சிகளும் ஈக்களும் கொசுக்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87260

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35

பகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 10 ] தங்கள் பன்னிரு குழந்தைகளுடன் மாலையொளியில் விண்ணில் உலா சென்ற சுதாமன் என்னும் மேகதேவதையும் அவன் மனைவி அம்புதையும் கீழே விரிந்துகிடந்த பூமாதேவியைப் பார்த்தனர். உயிரற்று செம்பாறையின் அலைகளாகத் தெரிந்த பூமியைக் கண்டு அம்புதை “உயிரற்றவள், தனித்தவள்” என்றாள். “இல்லை அவள் ஆன்மாவில் சேதனை கண்விழித்துவிட்டது. உயிர் எழுவதற்கான பீஜத்துக்காக தவம்செய்கிறாள்” என்று சுதாமன் சொன்னான். “தேவா, அந்தத் தவம் கனியும் காலம் எது?” என்று அம்புதை கேட்டாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57222