Tag Archive: குகைகளின் வழியே

பயணம்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , நலம் தானே ? நீண்ட நாட்களுக்குப் பின் ,கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன் . கடைசியாக , என் கோரிக்கையை ஏற்று ஊட்டி கவிதை அரங்கிற்கு இ மெயிலில் அழைப்பு அனுப்பியிருந்தீர்கள் . அப்போது கல்லூரி சுற்றுலா சென்றிருந்ததால் மூன்று நாட்களுக்குப் பின்தான் கடிதம் கண்டேன் . பின்னர் தங்களைப் பல முறை அலைபேசியில் அழைத்துப் பேச நினைத்தும் தங்களுடன் விரிவாக உரையாடும் மன நிலை வரவில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33986/

குகைகளின் வழியே – 15

இந்தப்பயணத்தில் முழுமையாகவே காரில் செலவழித்த நாள் இன்றுதான். சட்டிஸ்கரில் இருந்து ஜார்கண்ட் வழியாக ஒரிசாவுக்குள் நுழைந்து புவனேஸ்வர் பாதையில் சென்று இங்கே ஒரு நண்பரின் விருந்தினர் மாளிகைக்கு மாலையில் வந்து சேர்ந்தோம். அறுநூறு கிலோமீட்டர் காரிலேயே, நல்லவேளையாக பெரும்பாலான தூரத்துக்கு நல்ல சாலைதான். பகல் முழுக்க இந்தப்பயணத்தைப் பற்றி அதைத்தொடர்ந்து எழும் நினைவுகளைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். நான் என் நண்பர்களுடன் எப்போதும் சொல்லிவரக்கூடிய ஒரு விஷயம் உண்டு. இந்திய யதார்த்தம் என்பது நேரடியாக இந்தியாவில் சுற்றியலைவதன் மூலம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33951/

குகைகளின் வழியே – 14

அம்பிகாபூர் விடுதியில் காலையில் எழுந்து ஜோகிமாரா சீதா பாங்க்ரா குகைகளுக்குக் கிளம்பினோம். வழக்கம்போல வழியில் டீ சாப்பிட்டபின் எல்லா சாலைச் சந்திப்புகளிலும் வழிகேட்டு வழிகேட்டு சென்றோம். எங்களுடன் வந்த இருவருக்கு நன்றாகவே இந்தி தெரியும். சேலம் பிரசாத், ஓட்டுநர் நீல்கண்ட் இருவரும். ஆனாலும் வழி குழம்பிக்கொண்டே இருந்தது. ஏனென்றால் நாங்கள் செல்லும் குகைகள் வழக்கமாக அந்த ஊர்க்காரர்களே செல்லக்கூடிய இடங்கள் அல்ல. வழியில் ஒருவர் ஏறிக்கொண்டார். பத்திரிகை ஏஜெண்டும் துணிக்கடை உரிமையாளருமான தீபக் அகர்வால் வழிகாட்டிக் கூட்டிச்சென்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33925/

பஸ்தர்- விவாதம்

குகைத்தொடரின் மிக முக்கியமான கட்டுரை. பயணம் என்பதன் முக்கியத்துவம் அதன் நேரடித்தனத்தில் அது நம்முள் படிவதில் அது நம் பார்வையில் உருவாக்கும் தாக்கத்தில் இருக்கிறது. “இந்தப்பெரும் செல்வத்தின்மீது பஸ்தர் பழங்குடிகள் அமர்ந்திருக்கிறார்கள். மிகமிகக்குறைவான மக்கள்தொகையினர் அவர்கள். அந்த தேசியசெல்வத்துக்கு அவர்கள் முழுமையாக உரிமை கொண்டாடவேண்டும் என்று சொல்வதில் எந்தப்பொருளும் இல்லை. அத்துடன் அங்குள்ள மாபெரும் விளைநிலப்பரப்பை இன்றைய இந்தியா அப்படியே விட்டுவிடவேண்டும் என்பதிலும் பொருத்தப்பாடு இல்லை. இந்தியாவின் தொழில்துறையும் விவசாயமும் அப்பகுதியை நோக்கிப்படர்வதைத் தவிர்க்கமுடியாது. தவிர்ப்பதற்கு ஒரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33918/

குகைகளின் வழியே – 13

ராய்கர் விடுதியில் இரவு தங்கியிருந்தோம். நான் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தபோது நண்பர்கள் இரவுணவுக்குச் சென்றார்கள். அங்கே பிருந்தாவன் சத்ரி என்பவரின் உணவகத்தில் சாப்பிட்டார்கள். பிருந்தாவன் சத்ரி அவர்களைப்பற்றி விசாரித்திருக்கிறார். அவர்கள் குகைப்பயணம் வந்தவர்கள் என்று தெரிந்ததும் உற்சாகமடைந்து வீட்டில் இருந்து குழந்தைகளை எல்லாம் வரவழைத்து அறிமுகம் செய்திருக்கிறார். இனிப்பு கொடுத்து உபசரித்திருக்கிறார். மறுநாள் செல்லவேண்டிய இடங்களை விரிவாக அடையாளப்படுத்திக்கொடுத்து வேண்டுமென்றால் வழிகாட்டியாகத் தன் மகனையும் அனுப்பி வைப்பதாகச் சொன்னாராம். காலையில் நானும் நண்பர்களும் அவரது விடுதிக்குச் சென்று சாப்பிட்டோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33899/

குகைகளின் வழியே – 12

இந்தப்பயணத்தில் முக்கியமான சிக்கல்கள் சில உள்ளன. குகைகள் நடுவே உள்ள நெடுந்தூரம். அதை நிரப்புவதற்காக வழியில் உள்ள வேறு இடங்களை சேர்த்துக்கொள்ளவேண்டியிருந்தது. தூரங்களைக்கூட நாங்கள் தமிழகக் கணக்குப்படி மானசீகமாக கணித்திருந்தோம். ஆனால் சட்டிஸ்கரில் ஐம்பது கிமீ என்பது இரண்டுமணிநேர பயணம். தமிழகக் கணக்குக்கு இரு மடங்கு. ஆகவே எல்லா கணிப்புகளும் தவறின. புதிய இடங்களைப்பார்ப்பதற்காக வழியை கொஞ்சம் மாற்றும்போது ஒருநாளையே இழந்துவிட நேர்ந்தது மேலும் குகைகள் பெரும்பாலும் புகழ்பெற்ற சுற்றுலா இடங்கள் அல்ல. அவை அடர்கானகத்துக்குள் இருந்தன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33871/

குகைகளின் வழியே – 11

இன்று காலை தாமதமாகவே எழுந்தோம். நேற்று மீண்டும் ஜக்தல்பூர் வந்து அதே விடுதியில் தங்கினோம். நல்லவேளையாக பஜனை முடிவுற்றுவிட்டது. நன்றாகத் தூங்கி எழுந்து ஜக்தல்பூரில் உள்ள பழங்குடி அருங்காட்சியகம் செல்லலாம் என்று எண்ணினோம் ஆனால் காலை பத்துமணிக்குத்தான் அருங்காட்சியகாம் திறக்கும் என்றார்கள். காலையுணவை முடித்துவிட்டு வந்தோம். நாங்கள் தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னதனால் ஒன்பது மணிக்கே திறக்க காவலர் ஒப்புக்கொண்டார் சட்டிஸ்கரின் பழங்குடிப்பண்பாட்டை மிகச்சிறப்பாகச் சொல்லக்கூடிய அருங்காட்சியகம் இது. ஆறு அறைகளிலாக பழங்குடிகளின் வாழ்க்கை சார்ந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33844/

குகைகளின் வழியே – 10

இந்தியாவில் பழங்குடிகள் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்று சட்டிஸ்கர். கிட்டத்தட்ட 12 சதவீதம் வரை பழங்குடியினர் இங்கிருக்கிறார்கள். இதில் பஸ்தர் மாவட்டத்தில் பெரும்பான்மையினர் பழங்குடியினரே. கிட்டத்தட்ட எழுபது சதவீதம். சொல்லப்போனால் நகரங்கள் தவிர பிற இடங்களில் எல்லாமே பழங்குடியினரே இருக்கிறார்கள். அரசின் கணக்குப்படி இங்கே பஸ்தர் மாவட்டத்தில் மேகர், காண்டா, சமர், பைர்வா, காசி, சிதார், டோமர், சாடர் என கிட்டத்தட்ட நூறு பழங்குடி இனங்கள் இருக்கிறார்கள். பழங்குடியினரை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் வரும் சித்திரம் இதுதான். தென்னகப்பழங்குடிகள் ஆப்பிரிக்கச்சாயல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33834/

குகைகளின் வழியே – 9

கைலாஷ் குகையைப் பார்த்தபின் தீர்த்கர் என்ற அருவிக்கு மாலை நான்கு மணிக்குச் சென்று சேர்ந்தோம். காலையில் குகைகளுக்குச் செல்லும்போது அந்த அருவியை மலைவிளிம்பில் நின்று பார்த்தோம். மிக உயரமான அருவி அது என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அதைப் பார்க்கத்தான் வேண்டுமா என்று விவாதித்தோம். நம் திட்டத்தில் உள்ளது குகைகள் அல்லவா என்பது எங்கள் எண்ணம். ஆனால் எங்கள் திட்டத்தில் இருந்த ஒரு குகைக்குப் பயணிகளை அனுமதிப்பதில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே தீர்த்தகர் அருவிக்குச் செல்லலாம் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33808/

குகைகளின் வழியே – 8

நான் சின்னப்பையனாக இருந்தபோது பார்த்த படம் ஜகதலப்பிரதாபன். மறந்துபோன அந்தப்படம் திரும்பத்திரும்ப நினைவுக்கு வந்தபடியே இருந்தது, நேற்று நாங்கள் வந்து தங்கிய ஊரின் பெயர் ஜக்தல்பூர். சிறியவிடுதி. ஆனால் மூன்று அறைகள் கிடைத்தன, வசதியானவை. என்ன பிரச்சினை என்றால் இரவெல்லாம் பக்கத்து வீட்டு மாடியில் ஒரு சேட் ராமகதை பஜனை ஏற்பாடு செய்திருந்தார். உச்சகட்ட ஓசை. இரு குழுக்கள் மாறி மாறி, விடிய விடிய கட்டைக்குரலில் ஜால்ரா, ஆர்மோனியம், தபலா சகிதம் ஒலிபெருக்கியில் பாடினார்கள். தலையைத் துண்டால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33794/

Older posts «

» Newer posts