Tag Archive: குகைகளின் வழியே

ஒளியை அறிய இருளே வழி .

ஆசிரியருக்கு , ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு வானொலி குரல் பதிவு அறைக்கு சென்றிருந்தேன் , இறுக்கமான கதவுகளால் ஆன ஒரு குளிரூட்டப் பட்ட கண்ணாடி அறை. உள்ளே சென்று எனது நண்பரிடம் பேசிய முதல் வாக்கியத்திலேயே சற்று துணுக்குற்றேன் , எனது குரல் அன்னியமாக முற்றிலும் வேறு மாதிரி ஒலித்தது, அதுதான் எனது அசல் குரல் , இதுவரை அதை நான் கேட்டதில்லை. மேஜையில் ஒரு பேனா வைக்கப் படும்போதும் ஒலித்த ‘டக்’ ஒலி விநோதமாகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34318/

குகைகளின் முடிவில்

நேற்று முழுக்க ஒரே மூச்சாகப் பயணம் செய்து ஏலூரு வந்துசேர்ந்தோம். அங்கே ராமச்சந்திர ஷர்மாவின் நண்பர் ஏற்பாடு செய்திருந்த அறையில் தங்கினோம். காலையில் எழுந்து மீண்டும் ஐநூறு கிலோமீட்டர் பயணம் செய்து சென்னை. சென்னையில் இருந்து ரயிலில் நாகர்கோயில் இதுவரை மேற்கொண்ட பயணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது இது. இதுவரை சென்ற பயணம் மண்மீது ஊர்தல். இது மண்ணுக்குக் கீழும் இருந்தது. பயண முடிவில் ஒரு தையல் ஊசிபோல நாங்கள் மண்ணை மேலும் கீழும் சென்று தைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34162/

குகைகளின் வழியே – 22

இந்தப் பயணம் குகைகளைப் பார்ப்பதற்காக திட்டமிடப்பட்டது. இந்தியாவிலேயே மிகப்பெரிய குகை அல்லது பிலம் பெர்ரா குகை. அதைக் கடைசியில் பார்ப்பதாக கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். ஆகவே அனந்தபூரில் இருந்து காலையில் கிளம்பி பெர்ரா குகைகளுக்குச் சென்றோம். காலை ஒன்பதுக்கே சென்றுவிட்டோம். குகையை பத்து மணிக்குத்தான் திறந்தார்கள். பெர்ரா என்றால் ஒரிய மொழியில் துளை என்று பொருள். பொரா என்பார்கள். இந்த குகை அரக்கு மலைச் சமவெளியின் விளிம்பில் உள்ளது. மலை மிக ஆழமாக இறங்கிச் சென்று ஆழத்தில் ஓடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34152/

குகைகளின் வழியே – 21

முச்சுந்தில் இருந்து திரும்பும் வழியில் டுடுமா அருவிகளைப் பார்த்தோம். சாலையில் நின்றபோது இரண்டு அருவிகள் மலையுச்சியில் இருந்து வானத்தின் விழுவது போல இறங்கி ஆழத்திற்குள் செல்வது தெரிந்தது. நான் இந்தியாவில் பார்த்த அருவிகளில் அவைதான் மிக உயரமானவை. ஆனால் பள்ளத்தாக்கிலிருந்து பிரம்மாண்டமான ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. கீழே விழும் அருவிகள் அங்கே பாறைகளில் நுரைத்தோடுகின்றன போலும் என நினைத்தோம் காரை நிறுத்திவிட்டுப் படிகளில் இறங்கிச்செல்ல ஆரம்பித்தோம். ஏறத்தாழ ஆயிரத்தைநூறு அடி ஆழத்திற்கு இறங்கிச்செல்லும் அந்தப் பள்ளத்தாக்குக்குள் செல்லப் படிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34125/

குகைகளின் வழியே – 20

நேற்றிரவு ஜேய்ப்பூர் வந்து அறைதேடினோம். எல்லா அறைகளும் ஆட்களால் நிறைந்திருந்தன, ஏதோ சில திருமணங்கள். ஜேய்ப்பூருக்கு வந்து தேடியபோதும் அறைகள் கிடைக்கவில்லை. கடைசியில் ஜேய்ப்பூரின் பழைய அரண்மனைக்கு அருகே ஒரு ஓட்டலில் அறை கிடைத்தது. மதுமதி ஓட்டலும் ஒரு பழைய அரண்மனைக் களையுடன் இருந்தது. நேர்முன்னால் அரண்மனையின் பெரிய கோட்டை சுவர் இடிந்து கிடந்தது. காலையில் கிளம்பி கொரபுட் வழியாக ஆந்திரம் நோக்கி வர ஆரம்பித்தோம். வழியில் ஒருவரிடம் வழி விசாரித்தோம். அவர் ஒரு தபால்அதிகாரி. அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34119/

குகைகளின் வழியே – 19

குப்தேஸ்வர் குகைகள் ஒரிசாவில் ஜேய்ப்பூர் அருகே உள்ளன. எங்கள் பயணத்திட்டத்தில் இது முக்கியமான இடம். ஆனால் அங்கே செல்வது அப்படி ஒரு கஷ்டமான நிகழ்வாக இருக்குமென நினைக்கவில்லை. வட ஆந்திரா, சட்டிஸ்கர் இரண்டுக்கும் அருகே இருப்பதனால் இப்பகுதியின் காடுகள் மாவோயிஸ்டுகளின் ஊடுருவல் உள்ள பகுதிகள். ஆகவே சட்டிஸ்கரில் கண்ட அதே சூழ்நிலையே இங்கும் நீடித்தது. எங்கும் முட்கம்பி வேலி போடப்பட்ட துணை ராணுவப்படை, எல்லைக் காவல்படை முகாம்கள். உடைக்கப்பட்ட பாலங்கள், பாழடைந்த சாலைகள். [குப்தேஸ்வர்] காலையில் கிளம்பி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34088/

குகை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார் , வணக்கம், விஷ்ணுபுரம் விழாவில் என் மகனுடன் வந்து தங்களை சந்தித்தது மிக்க சந்தோசமாக இருந்தது,அஜிதன் எங்கள் அருகில் அமர்ந்திருந்தான் .அவனிடமும் பேசிக்கொண்டிருந்தோம், மகிழ்ச்சி. தங்கள் இந்தியப்பயணம் கட்டுரை உங்களுடன் வந்து உணரும் உணர்வுகளை உருவாக்கி வருகிறது .குறிப்பாக இந்தியாவில் ஒரு நயாகரா ஒரிசாவில் புத்த சிலைகள் குறித்த தங்கள் அனுபவங்கள் பற்றிய குறிப்புகளை முழுமையாக உள்வாங்க முடிந்தது .மனதில் பயணம் மேற்கொள்ள தீராத ஆர்வம் .நான் தொழில் நிமித்தமாக அஜந்தா அருகில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34099/

குகைகளின் வழியே – 18

இந்த பயணத்தொடரின் மிக நீளமான, மிகக் களைப்பான பயணம் இது. நேற்றிரவு பாலுகாவ்ன் என்ற ஊரில் தங்கியிருந்தோம். அங்கே வந்துசேரவே இரவு பத்து மணி ஆகிவிட்டது. புவனேஸ்வரில் இருந்து நேராகக் கீழ்நோக்கி வந்துகொண்டே இருந்த பயணத்தில் அந்த சிற்றூரின் விடுதியில் தங்கினோம். காலை எழுந்ததும் அருகிலேயே இருந்த சிலிகா ஏரிக்கு ஒரு படகுப்பயணம் செல்லலாம் என்று கிளம்பினோம். சிலிகா இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி. கடலின் கைக்குழந்தை என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள் பகல் முழுக்க நீண்டதோர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34065/

குகைகளின் வழியே – 17

பயணத்தின் மிகக்களைப்பான நாட்களில் ஒன்று. காலையில் எழுந்ததுமே புவனேஸ்வருக்குள் நுழைந்தோம். நகரின் நடுவிலேயே இரு முக்கியமான  குன்றுகள் உள்ளன. கண்டகிரி, உதயகிரி என்ற இரு பாறைக் குன்றுகளும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து ஒரு மாபெரும் பூகம்பத்தால் இரண்டானவை என்பது தொன்மம். இவ்விரு மலைகளும் சமணக்குகைகளால் நிறைந்தவை. கிட்டத்தட்ட தேன்கூடு. கண்டகிரியில் எழுநூறுக்கும் மேற்பட்ட குடைவரைகள் இருந்துள்ளன. பூகம்பத்தால் அப்பகுதியே இடிந்து சரிய, இப்போது முப்பது குகைத்தொகுதிகள் எஞ்சியிருக்கின்றன. உதயகிரியில் பதினைந்து. கண்டகிரி என்றால் உடைந்த மலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34044/

குகைகளின் வழியே – 16

புவனேஸ்வர் அருகே மூன்று முக்கியமான பௌத்தமையங்கள் உள்ளன. புஷ்பகிரி, ரத்னகிரி, லலிதகிரி ஆகிய மூன்று குன்றுகளும் முன்பு மூன்று மாணிக்கக் கற்கள் என்று சொல்லப்பட்டன. மூன்றையும் இணைத்து ஒடிசாவின் அரசு ஒரு பௌத்தத் தாழ்வாரம் என அறிவித்துள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் சுற்றுலா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தோஷாலி என்ற பேரில் முதல்தரமான சுற்றுலா விடுதிகள் கட்டப்படுகின்றன. அற்புதமான கட்டிடங்கள் அவை. சுற்றுலா மையங்களும் மிகச் சிறப்பாக பராமரிக்கப் படுகின்றன. நாங்கள் முதலில் சென்றது புஷ்பகிரிக்கு. புஷ்பகிரி கிமு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33989/

Older posts «