Tag Archive: கீதை உரை

கீதை உரை கடிதம் 2

அன்பு ஜெ இன்று கீதை பற்றிய உரை உங்களை தொடச்சியாக படிப்பவர்க்கு ஏற்றதோ என்று ஐயம். உங்களது கீதை பற்றிய வரலாற்று கட்டுரைகளில் விடுபட்டவற்றை நிரப்பியது போல் இருந்தது. இன்று உரை முடித்து வெளியே வரும்போது தான் கவனித்தேன். உரையை கேட்க வந்தவர்களில் 70 விழுக்காடு பேர் 50 வயதடைந்தவர்கள். வெளியே வரும் போது ஒரு முதியவர் “இவர் எங்கெங்கோ செல்கிறார். குழப்புகிறார்” என்றார். இன்னொருவர் “இவர்க்கு நல்ல அறிவு. அதெல்லாம் பிறப்புலயே வர்றது” என்றார். இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81659/

கீதை உரை கோவை -கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். நீங்கள் தற்சமயம் கோவையில் கீதைப்பேருரை ஆற்றி வருவதை வலைத்தளத்தின் மூலம் அறிந்தேன்.நேரில் வந்து கேட்பதற்கு பொருளாதார வசதியும்,சூழ்நிலையும் இடம் கொடுக்கவில்லை.உங்களின் எழுத்துக்களை சமீபகாலங்களாக வலைத்தளத்தில் படிப்பதே மற்றவர்களின் தயவினால்தான்.உங்களிடம் ஒரு வேண்டுகோள் சமீப காலங்களாக உங்களின் சொற்பொழிவுகள் எல்லாம் -கனடா,அமெரிக்காவில் ஆற்றியது உட்பட- “ஒலி” வடிவத்தில் தான் தங்கள் தளத்தில் வருகிறது,இதன் உரைநடை வடிவத்தை (கீதைப்பேருரை உட்பட) கொடுத்தால் மிகுந்த வசதியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.சற்று பரிசீலிக்கவும். நன்றி. அன்புடன், அ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81646/

இன்று முதல் கீதை உரை

கோவையில் இன்று மாலை ஆறுமணிக்கு கிக்கானி பள்ளி வளாகத்தில் கீதையுரை ஆற்றுகிறேன். நம் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் கடலூர்,சென்னை வெள்ளநிவாரணப்பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கீதை அந்தக் களத்திலேயே கிடைப்பதாக. பெரும்பாலானவர்கள் வரமுடியாத சூழலிலும் முன்னரே முடிவுசெய்தமையால் இதை நடத்திவிடலாமென நினைத்தோம். ஆர்வமுள்ளவர்கள் வரலாம். தொடர்ச்சியாக நான்கு நாட்கள். இத்தகைய உரையை நான் இதுவரை ஆற்றியதில்லை. உரை என் வெளிப்பாட்டு வடிவமும் அல்ல. ஆர்வமுள்ள முகங்கள் முன்னால் இருந்தால் என்னால் பேசிவிடமுடியுமென நம்புகிறேன். தத்துவவாதியாக ஆன்மீகவாதியாக என் தெளிவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81442/

கோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்

கோவையில் தொடர்ந்து நான்கு நாட்கள் கீதையைப்பற்றி ஓரு தொடர்சொற்பொழிவை ஆற்றவிருக்கிறேன் மிக எளிமையான ஒரு கேள்வியே இவ்வுரைக்கு ஆரம்பமாக அமைந்தது. அரவிந்தர், விவேகானந்தர் முதல் திலகர் வரை, காந்தி முதல் வினோபா பாவே வரை நவீன இந்தியாவின் சிற்பிகள் அனைவருக்குமே கீதை மகத்தான ஞானநூலாக ஆகி வழிகாட்டியது எப்படி? நாராயணகுரு, சகஜானந்தர் முதல் நித்யசைதன்ய யதி, முனி நாராயணப்பிரசாத் வரை வரை அது எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வந்த ஞானிகளின் குரலாக ஆக முடிந்தது? பாரதி, குவெம்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81438/

கோவையில் கீதை உரை

சென்றமுறை கோவையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது கீதையைப்பற்றி விவாதம் எழுந்தது. கீதை இந்துஞானமரபின் மையநூலாக ஆனவிதம், அதன் இன்றைய முக்கியத்துவம் பற்றி. அப்போது ஒரு நண்பர் பொதுவாக கீதையை முழுக்கமுழுக்க பக்திநோக்கில் பார்க்கும் பார்வையே எங்கும் பரவலாக உள்ளது என்றும் அதன் வரலாற்றையும், தத்துவத்தையும் பேசுவதேயில்லை என்றும் சொன்னார் என் கோவை நண்பர் நடராஜன் ’நாமே அதைப்பேச ஓர் அரங்கை உருவாக்கினால் என்ன?” என்றார். வேடிக்கையாக ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் ‘சரிதான் பேசித்தான் பார்ப்போமே’ என்னும் இடத்தைச் சென்றடைந்தோம்’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81434/