Tag Archive: கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு

திராவிட இயக்கம் மேலிருந்த தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ராஜநாராயணன் பேட்டி கி.ராஜநாராயணனிடம் சமஸ் திறமையாக வார்த்தை பிடுங்கியிருக்கிறார். எப்போதுமே பெரியவர் சாமர்த்தியமாக பேசக் கற்றவர். இப்போதும் கேட்டவருக்கு என்ன தேவை என புரிந்துகொண்டிருக்கிறார். அதை பேட்டி என்பதை விட மனுவை வாசித்துக்காண்பித்து கையெழுத்து வாங்குவது என்று சொல்லலாம்.  கிரா கொஞ்சம் மழுப்பி, ஊடே கொஞ்சம் தன் கருத்தையும் சொல்லி, கடந்து சென்றிருக்கிறார். கி.ரா கூடுமானவரை சி.என்.அண்ணாத்துரை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. கடைசியாக சமஸே ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119621/

இலக்கியத்தில் இன்று …

  சீன ஞானமரபின் சிறப்பான பங்களிப்பாகக் கருதப்படுவது யின் – யாங் என்ற அவர்களின் இயங்கியல் கருதுகோள். அதை எளிதில் விளக்கமுடியாது. ஒன்றை ஒன்று நிரப்பக்கூடிய ஒன்றை ஒன்றுசெயல்படச்செய்யக்கூடிய ஒன்றை ஒன்று விளக்கக்கூடிய இரு எதிரீடுகள் என்று சொல்லலாம். இரவுபகல் போல. ஆண்பெண் போல. மின்சாரத்தில் நேர் எதிர் போல. எல்லாவற்றுக்கும் சீனர்கள் அதைபயன்படுத்துகிறார்கள். அதாவது நன்மை உள்ளுறையாத தீமையோ தீமை உள்ளுறையாத நன்மையோ இல்லை. வீழ்ச்சி இல்லாத எழுச்சி இல்லை. அறம் இல்லாத மறம் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8066/

மின்தமிழ் பேட்டி 4

38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடைபெறும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன? நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா? (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் சாய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை). பதில் இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம்தேவை என்று க.நா.சு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73137/

மின் தமிழ் பேட்டி 3

30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69820/

வசைபட வாழ்தல்

  வணக்கம் சார், தமிழ் எழுத்துலகில் உள்ள வன்மங்கள் இப்பொழுதுதான் புரிகிறது.உங்களுக்கு நேர்ந்தமையால்… இது என்னுடைய நேரடி அனுபவமாகவே உணர்கிறேன். நான் உங்களைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் பெரிய விவாதத்துக்கு உள்ளானது இப்பொழுதுதான்.நீங்கள் இதை மிக மன விரிவுடன் எதிர்கொள்ளும் விதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு பலியின் தலை மீது கால் வைத்து வளர்ந்து கொண்டு இருக்கும் வாமனன் தான் ஞாபகத்துக்கு வருகிறான்.அவன் வளர்ச்சி முன் பலி, இந்த உலகு, விஸ்வம் எல்லாமே சிறியதாக மாறிக்கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31835/

வாழும் கரிசல் – லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்

கிராமங்களை நினைக்கும்போதெல்லாம் எனக்கு குளத்துக்கரை மரம் நினைவுக்கு வரும். கிராம வாழ்க்கை எப்போதுமே நிஜமும் நிழலுமானது. வாழ்க்கை ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்க கூடவே வாழ்க்கையைப்பற்றிய கதைகளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. என்ன ஆச்சரியமென்றால் நிஜம் விரைவிலேயே மறைந்துபோகிறது. கதைகள் மட்டும் அழியாமல் எஞ்சுகின்றன. சொல்லப்போனால் கிராமம் என நாம் சொல்வது அந்த கிராமத்தின் நில அளவை விட, மக்கள் எண்ணிக்கையை விட பிரம்மாண்டமான கதைகளின் குவியலைத்தான். கிராமம் முடிவிலாது பொருட்களை அளிக்கும் மந்திரவாதியின் தொப்பி. கிராமியக்கதைத் தொகுதியின் சிறியபகுதியே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27828/

பூமணியின் நிலம்

பூமணியும் அவருக்கு முன் கி.ராஜநாராயணனும் எழுதி உருவாக்கிய கரிசல் நிலத்தை நான் முதன்முதலாகப் பார்த்தது ஒன்பதாம் வகுப்பு மாணவனாக எட்டயபுரத்தில் பாரதி விழாவுக்குச் செல்லும்போதுதான். பாரதியார் பற்றிய பேச்சுப் போட்டியில் பரிசு பெற்றிருந்தேன். அதுவரை நான் தமிழ்மைய நிலத்திற்குள் வந்ததில்லை. நான் பார்த்திருந்த இரு பெரு நகரங்கள்’ திருவனந்தபுரமும் நாகர்கோயிலும்தான். அதாவது நான் அறிந்ததெல்லாம் நீர்வளம் மிக்க நிலம் மட்டுமே. ஆரல்வாய் மொழி தாண்டிப் பணகுடியை அடைந்தபோது நான் ஆழமானதோர் மன எழுச்சிக்கு ஆளானேன். நிலம் எப்படிப்பட்டதாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22826/

கரிசலின் ருசி – பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்

ருசி என்று நம்மால் கூறப்படுவது உண்மையில் என்ன? நான் கனடாவில் பயணம் செய்தபோது மாறி மாறிப் புதிய உணவுகளையும் பழக்கமான உணவுகளையும் உண்டு வந்தேன். புதிய உணவுகள் எனக்கு ஆர்வத்தையும் கிளர்ச்சியையும் உண்ணும்போது ஓர் அதிர்ச்சியையும், அன்னியத்தன்மையையும், பிற்பாடு ஒருவிதமான அடைதல் உணர்வையும் அளித்தன. பழைய உணவுகள் நிறைவுணர்வைத் தந்தன. உண்மையில் இவை இரண்டும் ஒன்றோடொன்று கலந்ததே சுவையனுபவமாக இருந்தது. நான் விரும்பிய புது உணவுகளில் பழைய, பழகிய உணவுகளின் சுவைச்சாயல் இருந்தது. பழகிய உணவுகளில் சற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22822/

ஆர்.கே.நாராயணன், மீண்டும்

டியர் ஜெயமோகன், உங்கள் ப்ளாக் பார்த்துகொண்டிருந்த பொழுது , நீங்கள் ஆர்.கே.நாராயண் பற்றி எழுதி இருந்ததை கவனித்தேன். பழைய பதிவு போல் இருந்தது. இருந்தாலும் அதைப் பற்றி உங்களுக்கு எழுத வேண்டும் என்று இதோ எழுதுகிறேன். ஆர்.கே.நாராயண் பற்றி உங்கள் கருத்து வெறும் நுனிப் புல்லாகவே உள்ளது.அவருடைய swami and friends பற்றிய உங்கள் விமர்சனம் சுமார். அவரை தேவன்,p.g.wodehouse போன்றவர்களுடன் ஒப்பிடுவது சற்று நெருடலாக உள்ளது. தேவன் போன்றவர்கள் humour என்பதை உருவாக்கி எழுதுபவர்கள், அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21359/

சு.வேணுகோபால், ஒரு கடிதம்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் . 2 /9 /10 . அன்று மதுரை பாத்திமா கல்லூரியில் அறக்கட்டளை சொற் பொழிவாக தாங்கள் முன்வைத்த அதிர்வுகளின் எதிரொலி அல்ல இது . “எதிர் ” ஒலி . யின்-யாங் என உலகில் எதுவும் முழுமையாக தனியானதல்ல. முரண்களின் இணைவே என்ற சீனா தரிசனத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு சு .வேணுகோபாலின் ‘தொப்புள்கொடி ‘ என்ற கதையையும் இணையாக கி . ரா . வின் ‘பேதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8134/