Tag Archive: கிளி சொன்ன கதை

கிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு

கிளி சொன்ன கதை 1 கிளி சொன்ன கதை 2 கிளி சொன்ன கதை 3 கிளி சொன்ன கதை 4 கிளிசொன்ன கதை 5 கிளிசொன்னகதை 6 கிளிசொன்ன கதை:கடிதங்கள் கிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/7244/

கிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கடிதம் எழுதுகிறேன். தொடர்ந்து உங்கள் வலைதளத்தை படித்து வருகிறேன். மனம் நிறைவடையும்போது சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் உங்களுக்கு எதுவும் எழுதாமல் இருந்துவிட்டேன். உங்கள் அமெரிக்க பயணம் எங்களுக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கப்போவது எனக்கு மகிழ்ச்சி. நலமுடன் முடித்து வாருங்கள். கிளிசொன்ன கதையைப்பற்றி வந்த கடிதங்கள் அக்கதை சரியான முறையில் வாசகர்களை அடைந்திருப்பதை காட்டியுள்ளது. தமிழ் படிக்கும் இளம் வாசகர்கள் இருப்பதை காண்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இக்கதையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3664/

கிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, தாங்கள் நலமா. அமேரிக்கா எப்படி இருக்கிறது? நீண்ட நாள்களுக்கு பின் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். என்னை நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். இந்த சனி விடுமுறையில் தங்கள் கிளி சொன்ன கதையை படித்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பே தாங்கள் அதை பதிவேற்றம் செய்ய தொடங்கி விட்டாலும், அப்போது அதற்கு நேரம் இல்லை. கதை தலைப்பை பார்த்தவுடன் தாங்கள் எழுதிய குறுநாவலான “கிளி காலம்” போல இதுவும் தங்கள் பால்யத்தில் முளை விட்டிருக்கும் என்று நினைத்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3603/

கிளிசொன்ன கதை:கடிதங்கள்

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, தங்கள் வலை தளத்தினை ஏறக்குறைய கடந்த ஒரு வருடமாக படித்து வருபவன். பெரிதாக இலக்கிய அறிமுகம் இல்லாதாவன். ஒரு நண்பரின் பரிந்துரையின் பெயிரில் படிக்க துவங்கினேன். தற்போது அன்றாட வேலைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. பல முறை உங்களுக்கு எழுதலாம் என்ற எண்ணம் ஒரு வித தயக்கத்தினால் நிறைவேறாமல் போயிற்று. நீங்கள் எழுதும அனைத்தையும் தொடர்ந்து ஆர்வமாக படித்து வருகிறேன். அதிலும் குறிப்பாக தத்துவம் பற்றி நீங்கள் எழுதும் அனைத்தும் மிக்க ஆர்வமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3659/

கிளி சொன்ன கதை :கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இது கிளி சொன்ன கதை இல்லை. ஒவ்வொரு தாயும், மனைவியும் வழி வழியாக சொல்லி வந்த கதை.  தாயின் முந்தானையை பிடித்து கொண்டு பின்னாலயே அலைந்து திரிந்தவன் நான். இக்கதையை படிக்கும் பொழுது என்னுடைய சிறு வயது நினைவுகள் வந்து போயின. எனக்கு பிடித்த வரி,  “செத்து தெக்கோட்டு எடுத்தாலும் பாவிகள் நாலு கலமும் சட்டியும் கொண்டுவந்து சேத்து குழியில வைப்பாக. மேல போயி  அங்க உள்ள தேவன்மாருக்கும் கெந்தர்வன்மாருக்கும் அரிவச்சு வெளம்புண்ணு…”… உண்மை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3598/

கிளிசொன்னகதை 6

அனந்தனுக்கு திடீரென்று பசித்தது. மடைப்பள்ளி திண்ணையில் அச்சுதன் நாயரும் கருணாகரனும் சம்பாப் பச்சரிசியை பெரிய செம்பு நிலவாயில் போட்டு நீர் விட்டு கழுவி சல்லரியால் அள்ளி அள்ளி பனங்கடவத்தில் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுக்கு வரிசையாக சோறு மீன்குழம்பு என்று நினைவுகள் எழுந்தன. போத்தி மடைப்பள்ளிக்குள் பெரிய கோட்டையடுப்பில் சில்லாட்டையைக் கொளுத்தி ஊதி தீமூட்டினார். புகை அடங்கி கொழுந்து எழுந்ததும் புளியம்மாறுகலை அடுக்கிவிட்டு பித்தளை வார்ப்புருளியை இரு கையாலும் அசக்கி நகர்த்தி அடுப்பருகே கொண்டுவந்து ஒருபக்கத்தை உந்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3516/

கிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்

வணக்கம் குரு.,         கதை சொன்ன கிளி.! இன்று இல்லாமல் சற்று ஏமாற்றம் தான்.ஒவ்வொரு நாளும் கதையின் இறுதி வரியில் “மேலும்” கண்டவுடன் ஒரு சிறு மகிழ்ச்சியோடு ஒவ்வொரு வரியாக வாசிக்க துவங்குவேன். எனது ஆவல் என்னவென்றால்? அனந்தனின் 47வது வயது வரை நினைவில் உள்ளதை பகிர்ந்து! எழுதுவீர்கள் என்றால்,  அதுகிட்டதட்ட உங்களின் சுயசரிதை.அப்பாவின் பாத்திரத்தில் சற்று புனைவு இருக்க வேண்டும் என மனம் பதைக்கிறது! ஏனென்றால் அவ்வளவு கொடூரத்துடன் ஏற்கமுடியவில்லை (உண்மையாக இருப்பினும்).     …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3549/

கிளிசொன்ன கதை 5

மதியத்தில் நிழல்கள் மங்கி தரை இருண்டது. வடமேற்கே பேச்சிமலையிலிருந்து பெரிய மேகங்கள் நகரும் கல்கோபுரம்ங்கள் போல வரிசையாக ¦மிக மெல்ல நகர்ந்து ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு நுனிகள் மோதிக்கலந்து வந்து தலைக்குமேல் பரவி தென்மேற்கு நோக்கிச் சென்றன. அனந்தன் ஒட்டுத்திண்ணையில் குந்து அமர்ந்து வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். கீழே வள்ளியாறு தென்கிழக்காக தேங்காப்பட்டினம் நோக்கிச்செல்கிறது. மேலே மெகங்களும் அதே திசை நோக்கித்தான் செல்கின்றன. பெய்த மழைதான் ஆறு.பெய்யாமல் வானத்தில் பறந்து ஒழுகும் ஆறுதான் மேகம். நீரை தென்கிழக்கிலிருந்து ஏதோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3513/

கிளிசொன்ன கதை:மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ,   கிளி சொன்னகதையை கூர்ந்து படிக்கின்றேன், தினமும் காத்திருந்து. இன்றைக்கு என்னை ஏமாற்றிவிட்டீர்.  எனது நினைவுகள் சுழல்கின்றது. ஆனந்தனின் அண்ணன்மீது ஒருகண் வைத்திருக்கின்றேன். தற்ப்போதைக்கு இருகேள்விகள் :  1.ஓலன் என்றால் என்ன? 2. ஜம்பருக்கு ஏதேனும் பெயர்க்காரணம் உண்டுமா?   அன்புடன் கிறிஸ்   அன்புள்ள கிறிஸ்டோபர் ஓலன் என்றால் சேனைக்கிழங்கு, வாழைக்காய் போட்டு தேங்காய்பால் விட்டு பெரும்பயறு சேர்த்து வைக்கப்படும் காரமே இல்லாத கூட்டு. சோற்றில் சேர்த்து சாப்பிடலாம். காரமும் இருக்காது, புளிப்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3539/

கிளி சொன்னகதை:கடிதங்கள்

அன்புள்ள ஜெ ராமாயணக்கிளி கதையை நான் கேட்டதில்லை. ஆனால் இந்தக்கதை வாசிக்க நன்றாக இருக்கிறது. கிலி பழைய நினைவுகளில் சிரகடிச்சு பறக்க வைக்கிறது ஜெ.சுப்ரமணியம் அன்புள்ள சுப்ரமணியம், மழைக்காலமாகிய ஆடியில் கழுத்தில் கோடுபோட்ட பச்சைக்கிளி அதிகமாக கத்தும். அது இனப்பெருக்கக் காலம். அந்த கிளியை கேரளத்திலும் குமரிமாவட்டத்திலும்  ராமாயணக்கிளி என்று சொல்கிறார்கள். மலையாள சினிமாப்பாட்டில் நீங்கள் அதிகமாக கேட்டிருக்கலாம். கேரளத்தின் ஆதிகவியான துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன் ராமாயனத்தை கிளிப்பாட்டாக எழுதியிருக்கிறார். கிளி ராமனின் கதையைச் சொல்வதுபோன்றது அக்காவியம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3524/

Older posts «