Tag Archive: கிறிஸ்டோபர்

மீன்குருதி படிந்த வரலாறு

[ 1 ] 2008 ஜூன் 13 ஆம் தேதி நாகர்கோயில் கார்மல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு நிகழ்ச்சி ஒருங்கமைக்கப்பட்டிருந்தது. நண்பர் வறீதையா கன்ஸ்தண்டீன் அதன் ஒருங்கிணைப்பாளர். நெய்தல் என்னும் அமைப்பின் நிகழ்ச்சி. கடலோர மக்களை எழுதச்செய்வதற்கான ஒரு முயற்சியின் தொடக்கம் அது. அதில் நான் பேசினேன். எழுதப்போகிறவர்கள் என்னும் தலைப்பில் நான் அதில் பேசியது பிரசுரமாகியிருக்கிறது. அந்த உரையில் எழுத்துக்கான அடிப்படை மனநிலைகளை உருவாக்கிக்கொள்வது, எழுதுவதற்கான சில பயிற்சிகள், எழுத்துக்கு எதிரான சில போக்குகளைச் சுட்டிக்காட்டியிருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80890

கடலாழம் – கடிதங்கள்

கிறிஸ்டோபர் பல மாதங்களுக்கு முன்னால் அவர் வீட்டில் நடந்த ஒரு மீன் குறித்த சம்பவத்தோடு ஒரு கடிதம் எழுதி இருந்தார். என் பிள்ளைகள் மீன் வாசமே பிடிக்கவில்லை என்று சொல்லக்கூடாது என்று முடித்து இருந்தார். அந்தக் கடிதத்தின் இறுதியில் நீங்கள் கிறிஸ்டோபரின் எழுத்தை மிக பாராட்டி தொடர்ந்து எழுதச் சொல்லி இருந்தீர்கள். இவர் அதே கிறிஸ்டோபர்தான் என்று நினைக்கிறேன். கடலாழம் பயன்படுத்திய மொழி பழகாததால் துவக்கத்தில் சிரமம் தந்தது. வார்த்தைகளை கற்பனையாக்கிப் பார்க்கும் இடம் எனக்கு சிரமமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40877

கடலாழம் – கடிதங்கள்

கடலாழம் கதை நன்றாக வந்திருக்கிறது… உரையாடல்கள் எல்லாம் செறிவாக இருக்கிறது.. தொய்வில்லாமல் படிக்க முடிகிறது. விவரிப்புகளில் நிறைய குட்டி குட்டி வாக்கிய அமைப்புகள்.. அது நல்லதுதான்.. ஆனால் சில விவரிப்புகளாவது நீண்டு சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கடல் சார்ந்த கதைகள் எல்லாமே எனக்கு பிடிக்கும்… அந்த உலகத்தில் இன்னும் நிறைய எழுதப்படாத விஷயங்கள் இருக்கிறது.. உங்கள் கதை அந்த இடைவெளியை நிரப்புகிறது..வாழ்த்துக்கள் கிறிஸ். இன்னும் விரிவாக எல்லா கதைகளை பற்றியும் விரைவில் எழுதுகிறேன்… அர்விந்த் ஜெ, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40867

3. கடலாழம் – கிறிஸ்டோபர்

மீண்டும் புதியவர்களின் கதைகள் தைமாசி சீசன். கடலில் அலை அதிகமில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் ஆறுபோல் கிடந்தது. இன்று காலை பத்து மணிவரை தாக்குப் பிடிக்கவேண்டும். பத்துமணி என்பது ஒரு நம்பிக்கை. இன்னும் இரண்டு மூன்று மணி நேரம். நான் அவர்கள் மூவரையும் பார்ப்பதையே தவிர்த்திருந்தேன். அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. பிளைவுட் எனக்குச் சொந்தமானது. மொத்தம் மூன்று லட்சம் செலவானது. சுசுகி 9.9 ஹார்ஸ்பவர் வெளிப்பொருத்து என்ஜின். எஞ்சின் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. மீனவர் சங்கத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40441