Tag Archive: கிறித்தவம்

இந்துமதத்தைக் காப்பது…

ஒருதெய்வ வழிபாடு அன்பு ஜெ, சில நாட்களுக்கு முன்பு எனது அரேபிய நண்பர்களுடன் பேசும்போது பேச்சுவாக்கில் ஜப்பான், ஜெர்மன் போன்ற  தேசங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சினை மக்கள் தொகைதான். ஒன்று நிறைய இருப்பதினால் மற்றொன்று இல்லாததினால் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.  அப்போது ஒரு அரேபிய நண்பன் உடன் சொன்னான் “இப்போது இஸ்லாமியர்” ஆப்ரிக்கா மற்றும் சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு இடம்பெயர்கிறார்கள். கூடிய விரைவில் அங்கும் மக்கள் தொகை பெருகி இஸ்லாமியர்களால் நிரம்பும் என்றான். இத்தகைய “இஸ்லாமிய உலக” கனவு அன்று மட்டும் அல்ல மேலும் பல சந்தர்ப்பங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117063

அ.மார்க்ஸின் ஆசி

ஜெ, பேராசிரியர் அ.மார்க்ஸ் உங்களை அவன் இவன் என்று ஒருமையில் எழுதி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். நீங்கள் இஸ்லாமிய, கிறித்தவ மக்கள் மேல் காழ்ப்பை வளர்ப்பதாகவும் உங்கள் படைப்புகளை வாசித்தால் எவருக்கும் சிறுபான்மையினர் மீது வெறுப்பே உருவாகும் என்றும் சொல்லியிருந்தார். நான் உங்கள் படைப்புகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். உண்மையில் பின் தொடரும் நிழலின் குரல் வாசித்தபின்னர்தான் ஏசு என்ற வடிவம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. தொடர்ந்து கிறிஸ்துவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் தீவிரமாக எழுதிவரக்கூடியவர் என்றுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74140

ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே

நகைச்சுவை ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே என்று நிறுவும்பொருட்டு பிரபல தோமாகிறித்தவ ஆய்வாளரும் அதன் நிறுவனருமான முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரையின் சுருக்கத்தை இங்கே அளிக்கிறோம்.முனைவர் ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் ஏற்கனவே தொல்காப்பியம், எட்டுத்தொகை பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள்,ஐஞ்சிறு காப்பியங்கள், கம்பராமாயணம்,பெரியபுராணம், திருவிளையாடல்புராணம், அரிச்சந்திரபுராணம், நளவெண்பா, கலிங்கத்துப்பரணி, கச்சிக்கலம்பகம்,நாலாயிர திவ்வியபிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், மீனாட்சியம்மைபிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமிபிள்ளைத்தமிழ், கூளப்பநாயக்கன் காதல், விறலிவிடுதூது, பாரதியார் பாடல்கள் ஆகியவை கிறித்தவ இலக்கியங்களே என்பதை ஐயம்திரிபற அமெரிக்காவில் விளக்கி அங்குள்ள துரைத்தனத்தார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/621

நவீனகுருக்கள்,மிஷனரிகள்

வணக்கம் ஜெ. நலமா? பத்திரிக்கைத் துறையில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலம் தங்களது எழுத்துகள் பரிச்சயம். மூன்று வருடங்களாக வாசித்து வருகிறேன். கார்ப்பரேட் சாமியார்கள் தொடர்பாக சமீபத்திய கேள்விக்கான தங்களின் பதில் கண்டேன். எனக்கும் சில சந்தேகங்கள் … தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். சிறு வயது முதலே கோயில் ஆன்மீக நம்பிக்கைகள் என வளர்ந்து வந்தவன் நான் – விவரமேதுமறியாமலேயே.தேவாரம் திருவாசகம் ஓதுவது எங்கள் வீட்டில் வழக்கமான ஒன்று. கல்லூரிக் காலத்தில் ஆசனங்கள், யோக முறைகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22995

கார்ல் சகனும் அரவிந்தரும்

இன்று உங்கள் தளத்தில் ஒரு கட்டுரையில் காணப்பட்ட ஒரு சுட்டியில் இருந்து கார்ல் சாகன் கட்டுரைக்குச் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பத்தி எனக்கு அரவிந்தரின் சாவித்திரியை நினைவுபடுத்தியது: ‘ஆனால் கிறித்தவத்தின் மனிதாபிமான தத்துவ எல்லைக்கு மேல் நகர கார்ல் சகனால் முடியவில்லை என்பது உண்மையில் புரிந்துகொள்ளச் சிரமமான ஒன்று. நாவல் எல்லியில் குவிந்து அவள் கண்டடைந்த இறுதி தரிசனத்தை அடைந்து முழுமை பெறுகிறது. அது கிறிஸ்துவின் மனிதநேயம் மட்டும்தான் – தொடும்போது அது அதுவரை நாவல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22670

யோகமும் கிறித்தவமும்

அன்பின் ஜெ.எம்., யோகக் கலை பற்றிய தவறான கிறித்துவப் பார்வை ஒன்றை இன்று தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. மனம் வருந்துகிறது. அத்வைதத் தத்துவத்தை இதை விட அவலமாக்கி விட முடியாது… அந்த ஆற்றாமையை உங்களுடன் பகிர விழைகிறேன். இனி..அந்தப் பதிவு.. யோகா – ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம் –  எம்.ஏ.சுசீலா அன்புள்ள சுசீலா, அந்தக் கட்டுரை வாசித்தேன். கிறித்தவ நோக்கில் அது சரியான கட்டுரைதான். யோகம் என்பது ஒரு வெறும் பயிற்சி அல்ல. அதன் பின் ஒரு விரிவான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20651