Tag Archive: கிருஷ்ணவபுஸ்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 3 துவாரகையின் அரசப் பேரவை நீள்வட்ட வடிவில் நீள்வட்ட சாளரங்களுடன் உட்குவைக் கூரை கவிந்த கூடத்தின் நடுவே பித்தளைச் சங்கிலியில் ஆயிரம் நாவெழுந்த அகல்விளக்குச் செண்டு தொங்க மின்னும் நீர்ப்பரப்பு போன்ற வெண்சுண்ணத் தரையுடன் அமைந்திருந்தது. கடற்காற்று அலையடிக்கச் செய்த திரைச் சீலைகளின் வண்ணநிழல் தரைக்குள் அசைய அது அலை பாய்ந்தது. யாதவர்களின் பன்னிரு பெருங்குலத்து மூத்தோர், அயல்வணிகர், நகரத்து ஐம்பெரும் குழுவின் தலைவர்கள், எண்பேராயத்து முதல்வர்கள், பெருங்குடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76878

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 1 திருஷ்டத்யும்னன் புரவியை இழுத்து சற்றே முகம் திருப்பி தொலைவில் விடிகாலையின் ஒளியற்ற ஒளியில் எழுந்து தெரிந்த துவாரகையின் பெருவாயிலை நோக்கினான். அதன் குவைவளைவின் நடுவே மாபெரும் கருடக்கொடி தளிரிலைபோல படபடத்துக் கொண்டிருந்தது. அதன் நீள்அரைவட்டம் வெட்டி எடுத்த வான்துண்டு நிலைஆடி போல தெரிந்தது. எதையும் காட்டாத ஆடி. ஒவ்வொருமுறையும் போல அவன் அக்காட்சியில் தன்னை இழந்து அங்கு நின்றிருந்தான். கடிவாளம் இழுக்கப்பட்ட குதிரை தலையைத் திருப்பி மூக்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76793

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 8 கைகளை மார்பின்மேல் கட்டியபடி தலைதூக்கி புகைத்திரைக்குள் நீர்ப்பாவை போல ஆடிக்கொண்டிருந்த கிருஷ்ணவபுஸை நோக்கி நின்ற இளைய யாதவரை திருஷ்டத்யும்னன் நோக்கினான். அவர் சுருள்குழலில் அந்தப்பீலி கைக்குழந்தை விழிபோல திறந்திருந்தது. அங்கு நிகழ்ந்த எதையும் அறிந்திராததுபோல. வானிலிருந்து குனிந்து நோக்கும் அன்னையை நோக்கி அக்குழந்தை கைகளை உதைத்துக்கொண்டு நகைசிந்தி எழமுயல்வதுபோல. இளைய யாதவர் திரும்பி தன் பின்னால் நின்ற முதல் படைத்தலைவனிடம் “இப்பெண்களை கலங்களுக்கு கொண்டு செல்லுங்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76874

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 41

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 7 கங்கையின் காற்றில் படகின் பாய்கள் கொடிமரத்தில் அறையும் ஒலி கேட்டது. அது அலையோசை என நெடுநேரம் திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டிருந்தான். படகுகள் பொறுமையிழந்து நின்றிருப்பதுபோல தோன்றியது. பலராமர் “இளையோனே, நாம் போருக்கெழுகிறோம் என்றால் நல்ல உணவுக்குப்பின் செல்வதல்லவா நன்று?” என்றார். “இது போரே அல்ல. அரைநாழிகைகூட இந்த ஊர் நம் முன் நிற்க முடியாது” என்றான் திருஷ்டத்யும்னன். இளைய யாதவர் “அரைநாழிகை நேரம் போரிடுவதற்கும் மூத்தவருக்கு உணவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76774

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 6 காசியின் எல்லையைக் கடந்து கங்கையின் மையப்பெருக்கை படகு அடைந்தபோது திருஷ்டத்யும்னன் முதிய யாதவவீரரின் உதவியுடன் படகில் புண்பட்டுக் கிடந்த இரண்டு வீரர்களை இழுத்து உள்ளே கொண்டுவந்து படுக்க வைத்தான். முதிய வீரர் அவர்களின் புண்களை திறம்பட கட்டிக்கொண்டிருந்தார். அவர் சுற்றிக் கட்டிக் கொண்டிருக்கும்போதே கண்விழித்த ஒரு வீரன் “கன்று மேய்கிறது” என்று சொல்லி பற்களை இறுகக் கடித்து கழுத்தின் தசைகள் சற்று அதிர உடலை இழுத்து பின்பு தளர்ந்து தலைசாய்த்தான். அவர் மேலே நோக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76763

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 39

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 5 கிருஷ்ணவபுஸின் துறைமுகத்திலிருந்து பன்னிரண்டு போர்ப்படகுகள் கொடிகள் பறக்க, முரசு ஒலிகள் உறும வருவதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவை காட்டுப்பன்றிக்கூட்டம் போல அரைவட்ட வளையம் அமைத்து மூக்கு தாழ்த்தி செவி விரித்து கூர்மயிர் சிலிர்த்து தங்களுக்குள் என உறுமியபடி வருவதாகத் தோன்றியது. சாத்யகி “அனைத்துப் படகுகளிலும் வில்லவர் நிறைந்திருக்கிறார்கள் பாஞ்சாலரே. நம்மால் அவர்களை எதிர்கொள்ள முடியாது. திரும்பிவிடுவோம்” என்றான். திருஷ்டத்யும்னன் “பார்ப்போம்” என்று சொல்லி படகின் விளிம்பை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76734

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 38

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 4 கிருஷ்ணவபுஸின் அருகே கங்கைக்குள் முன்னும்பின்னும் சென்றுகொண்டிருந்த படகில் நாள் முழுக்க காத்திருந்த போது நேரத்தின் பெரும்பகுதியை திருஷ்டத்யும்னன் துயிலிலேயே கழித்தான். படகின் மெல்லிய அசைவு துயிலுக்கு உகந்ததாக இருந்தது. படுத்ததுமே உடல் எடைகொள்வதுபோல துயில் வந்து படர்ந்து விரிப்பலகைமேல் அவனை வைத்து அழுத்தியது. அவன் குறட்டைவிட்டு துயில அருகே சாத்யகி ஒரு கணமும் நிலை கொள்ளாது உள்ளறைக்கும் அகல்முற்றத்துக்குமாக அலைந்து கொண்டிருந்தான். பலமுறை திருஷ்டத்யும்னன் படுத்திருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76706