முதற்கனல் நாவலின் முடிவை ஒட்டி சில சொற்களை முன்வைக்க விரும்புகிறேன். இவை சென்ற ஐம்பது நாட்களில் எனக்கு வந்த கடிதங்களுக்கு நான் அளித்த பதில்கள். நாவலின் உட்குறிப்புகளையோ கருத்துக்களையோ விவாதிக்க விரும்பவில்லை. அவற்றை வாசகர்கள் தங்களுக்குள், தங்கள் நண்பர்களுக்குள்தான் விவாதிக்கவேண்டுமென நினைக்கிறேன். வாசகர்கள் கேட்ட வினாக்களுக்கான பொதுவான பதில்களை மட்டும் இங்கே தொகுத்தளிக்கவிழைகிறேன். 1. இந்நாவலில் எவையெல்லாம் மகாபாரதத்தில் உள்ளவை, எவை என் கற்பனை? அவற்றை எப்படிக் கண்டுகொள்வது? அவ்வாறு கற்பனையில் விரித்தெடுப்பதற்கான விதிகள் என்னென்ன? இந்நாவலில் …
Tag Archive: கிருஷ்ணதுவைபாயன மகாவியாசன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/46568
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9
பகுதி இரண்டு : பொற்கதவம் [ 4 ] கங்கைநதி மண்ணைத்தொடும் இடத்தில் பனியணிந்த இமயமலைமுடிகள் அடிவானில் தெரியுமிடத்தில் இருந்த குறுங்காடு வேதவனமென்று அழைக்கப்பட்டது. அங்குதான் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசன் இருபதாண்டுக்காலம் தன் மாணவர்களுடன் அமர்ந்து வேதங்களை தொகுத்து சம்ஹிதைகளாக ஆக்கினார். அங்கே வேதநாதம் கேட்டுப்பழகிய சோலைக்குயில்கள் காயத்ரி சந்தத்திலும், மைனாக்கள் அனுஷ்டுப்பிலும், வானம்பாடிகள் திருஷ்டுப்பிலும், நாகணவாய்கள் உஷ்ணுக்கிலும், நாரைகள் ஜகதியிலும் இசைக்குரலெழுப்பும் என்று சூதர்கள் பாடினர். மலையில் உருண்டுவந்த வெண்கற்களினூடாக நுரைத்துச் சிரித்துப்பாயும் கங்கையின் கரையில் ஈச்சையோலைகளை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/44015
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8
பகுதி இரண்டு : பொற்கதவம் [ 3 ] அஸ்தினபுரியின் மன்னர் சந்தனுவின் ரதத்தில் ஏறி முதன்முதலாக பீஷ்மர் தன் ஏழு வயதில் உள்ளே வந்தபோதே அந்நகர மக்கள் அது தங்கள் குலமூதாதை ஒருவரின் நகர்நுழைவு என்று உணர்ந்தனர். சஞ்சலமேயற்ற பெரிய விழிகளும், அகன்ற மார்பும், பொன்னிற நாகங்கள் போன்ற கைகளும் கொண்ட சிறுவன் தன் தந்தையைவிட உயரமானவனாக இருந்தான். ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னும் அதுவரை அறிந்த ஞானம் அனைத்தையும் கொண்டுவந்து நிறுத்தும் பேச்சுடையவனாக இருந்தான். ஒரு கணமேனும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/44003