குறிச்சொற்கள் கிருபர்
குறிச்சொல்: கிருபர்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 33
பகுதி நான்கு : அன்னையெழுகை – 5
இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்படித்துறையில் நீர் தெரியாமல் படகுகள் செறிந்து நின்றிருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு கண்டான். காற்றில் பறந்த மேலாடையை உடலில் சுற்றிக்கொண்டு படகின் வடத்தைப் பிடித்து சற்றே...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57
அஸ்தினபுரியின் மேற்கே அமைந்திருந்த குறுங்காட்டில் விழிகளை முற்றிலும் இல்லாமலாக்கிய கூரிருளுக்குள் அஸ்வத்தாமன் முன்னால் செல்ல கிருபரும் கிருதவர்மனும் தொடர்ந்து சென்றனர். அஸ்வத்தாமன் செவிகளையும் தோலையும் விழிகளாக ஆக்கிக்கொண்டான். அவன் செல்லும் வழியை மட்டுமே...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47
தொலைவில் தெரிந்த பந்த ஒளியை முதலில் சாத்யகிதான் கண்டான். முதலில் அது மின்மினியின் அசைவெனத் தோன்றியது. அதற்குள் உள்ளமைந்த எச்சரிக்கையுணர்வு விழித்துக்கொண்டது. “யாரோ வருகிறார்கள்” என்று கூவியபடி அவன் எழுவதற்குள் திருஷ்டத்யும்னன் விசையுடன்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-44
துரியோதனனின் சிதையில் எரிந்த தீ தன் வெம்மையை தானே பெருக்கிக்கொண்டது. தழல்கள் ஒன்றன்மேல் ஒன்றென ஏறி வான் நோக்கித் தாவின. தீயின் இதழ்களுக்குள் துரியோதனனின் உடலை நோக்க விழைபவன்போல அஸ்வத்தாமன் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான்....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-43
குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டைச் சென்றடைந்தபோது அவர்கள் முற்றாகவே சொல்லடங்கி வெறும் காலடியோசைத் தொடராக இருளுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தார்கள். தெற்குக்காடு சீவிடுகளின் ஒலிகூட இன்றி அமைதியாக இருட்குவைகளின் பரப்பாக சூழ்ந்திருந்தது. கிருபர் தொண்டையைச் செருமி, குரல்கொண்டு “அங்கே...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-42
காலகத்தை அணுகுந்தோறும் கிருபர் நடைதளர்ந்தார். அஸ்வத்தாமன் வேறெங்கோ உளம் அமைய நடந்துகொண்டிருக்க கிருதவர்மன் நின்று திரும்பி நோக்கி மூச்சிரைக்க “விசைகொள்க, ஆசிரியரே. இருட்டி வருகிறது. அங்கே ஒளியில்லையென்றால் சென்றும் பயனில்லை” என்றான். “இந்த...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-41
நேர் எதிரில் வேடன் நின்றிருந்தான். அஸ்வத்தாமன் அவனைப் பார்த்துக்கொண்டு ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தான். அவன் அங்கே எங்கிருந்து வந்தான் என்று அஸ்வத்தாமன் வியந்தான். காற்றில் இருந்து பனித்துளியென முழுத்து எழுந்து வந்தவன் போலிருந்தான். அல்லது...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-33
காலகம் எப்போதுமே இளமழையில் நனைந்துகொண்டிருக்கும் என்று அஸ்வத்தாமன் அறிந்திருந்தான். இலைகள் சொட்டி இலைகள் அசைந்துகொண்டிருந்தன. அங்கே செறிந்திருந்த காட்டுமரங்களெல்லாம் பசுந்தழை செறிந்து காலடியில் இருளை தேக்கி வைத்திருந்தன. இருளுக்குள் நீர் சொட்டும் ஒலியில்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-32
கிருபரும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் மலைப்பகுதியில் ஏறியதன் களைப்புடன் நின்றனர். கிருதவர்மன் “பாஞ்சாலரே, நீங்கள் வழியை அறிவீர்களா?” என்று கேட்டான். “இல்லை, இவ்வாறு ஓர் இடம் உண்டு என்பதல்லாமல் வேறெதையும் அறிந்ததில்லை. அது இங்கிருக்கும்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-31
கிருபரின் சொல்மழை கிருதவர்மனை முதலில் நிலையழியச் செய்தது. அதை அவனால் புறக்கணிக்க முடியவில்லை. அந்தக் காட்டில் ஒலித்த ஒரே மானுடக் குரல். அதிலிருந்து அவனால் சித்தம் விலக்க முடியவில்லை. வேண்டுமென்றே முன்னால் விரைந்தால்...