Tag Archive: கிருத்திகா

பெண்களின் எழுத்து…

அன்புள்ள ஜெ, பெண்களின் சாதனைகளை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள் என்று இங்கே பலபேர் சொல்கிறார்கள். பெண்கள் வெற்றிபெறுவதெல்லாம் பாலியல் அடையாளம் மூலம் பெறும் வெற்றி மட்டும் என்று சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் கட்டுரையில் எழுதியிருந்தவற்றை எந்த அளவுக்கு புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. தங்களை பெண்ணிய ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பெண்கள் எழுதவே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்றுகூட சிலர் எழுதியதை வாசித்தேன். நீங்கள் சொன்னதென்ன என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56437

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1

பொத்தை என்ற நன்னீர் மீனைப்பற்றி கிராமங்களில் அடிக்கடி பேசப்படும். சப்பையான தாடைகொண்ட சிறிய வகை மீன். ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாக வாழக்கூடியது. அமைதியான தெளிநீரில் சிறிய கூட்டங்களாகப் புழுப்பிடிக்க வரும். பறவைகளாலோ மனிதர்களாலோ ஆபத்து அருகே வந்தது என உணர்ந்தால் மொத்த மீன்கூட்டமும் சிறு அம்புகள் போல சேற்றுப்பரப்பில் தைத்து வாலைச் சுழற்றி நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டுவிடும். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளுக்கு ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயர் ஊரில் உண்டு. கலக்குவது ஒரு ராஜதந்திர உத்தி. கலங்கலிலேயே வாழும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25545

யதார்த்தம் என்பது

குழும விவாதத்தில் கிருத்திகாவின் வாசவேஸ்வரம் பற்றி நான் இப்படி சொல்லியிருந்தேன். ஆன்மா தேங்கிப்போய் த் தீனி காமம் எனப் புலன் சுவைகளில் மூழ்கிப்போன ஒரு கிராமத்தின் சித்திரம் இது. அவ்வகையில் முக்கியமானது. ஆனால் சித்தரித்து என்ன நிகழ்த்துகிறார் என்றால் ஏமாற்றமே’ போகன் அதற்கு பதிலிட்டிருந்தார். ‘சித்தரித்து என்ன நிகழ்த்துகிறார் என்றால் ஏமாற்றமே என்கிறீர்கள்.’ எனக்குப் புரியவில்லை.ஒரு உச்சத்தை நோக்கிப் போகவில்லை என்கிறீர்களோ?சித்தரிப்பே போதாதா?’ கண்டிப்பாகப் போதாது. பொதுவாகத் தமிழிலே ஒரு நம்பிக்கை எழுபதுகளில் உருவாக்கப்பட்டது. வாழ்க்கையை நம்பகமாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19519

கிருத்திகா,சுகந்தி சுப்ரமணியம் நினைவஞ்சலி

  சமீபத்தில் மறைந்த தமிழ் படைப்பாளிகள் கிருத்திகா, சுகந்தி சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் லீனா மணிமேகலை மற்றும் அணங்கு பெண்ணிய வெளி சார்பில் ஒரு  அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடாகியிருக்கிறது. நாள்   : 28-2-2009 சனிக்கிழமை இடம்  : ஸ்பேஸஸ் கல்சுரல் செண்டர், எண் 1 எலியட்ஸ் சாலை பெசண்ட் நகர் சென்னை 90         தொடர்புக்கு  98410 43438, 94677 57356 நேரம்  : மாலை 4 மணி மு.கு.ஜகன்னாத ராஜா:அஞ்சலி கிருத்திகா:அஞ்சலி அஞ்சலி: எஸ்.சுகந்திசுப்ரமணியன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/1915

கிருத்திகா:அஞ்சலி

கன்யாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலின் அருகே உள்ள இரு ஊர்கள் இலக்கியத்தில் வகிக்கும் இடம் பற்றி பொதுவாசகர்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்? திருப்பதிச்சாரம், பூதப்பாண்டி. இரண்டுமே முக்கியமான கோயில் கிராமங்கள். இரண்டும் சோழர் காலத்தில் உருவான.தொன்மையான வேளாளர் ஊர்கள். வசதியான பெரிய வீடுகள் கொண்ட அழகிய தெருக்களும் தெருக்கள் நடுவே பெரிய கோயிலும் தெப்பக்குளமும் ஊரைச்சுற்றி ஆறும் வயல் வெளியும் கொண்டவை. சென்று பார்க்கும் எவருக்கும் அங்கே தங்கவேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்குபவை.   திருப்பதிச்சாரம் ‘திருவெண்பரிசாரம்’ என்ற தூய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1681