Tag Archive: கிருதன்

வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51

51. குருதியமுது பேற்றுக்குடிலில் ஜெயந்தி நோவுற்று இரு கைகளாலும் மஞ்சத்தைப் பற்றியபடி முனகி தலையை அசைத்துக்கொண்டிருக்கையில் அவள் விரித்த கால்களுக்கு இருபுறமும் நின்று முழங்கால்களையும் பாதங்களையும் மெல்ல வருடியபடி தாழ்ந்த குரலில் “இன்னும் சில கணங்கள்தான், தேவி. எளிது, மிக எளிது. இன்னொருமுறை மூதன்னையரை எண்ணி உடலை உந்துக! மீண்டுமொருமுறை மட்டும்…” என்று சொல்லிக்கொண்டிருந்த வயற்றாட்டிகளில் ஒருத்தி திரும்பி மூக்கை சுளித்து “எரிமணம்” என்றாள். அவள் சொன்னதுமே பிறரும் அதை உணர்ந்தனர். கங்கைக்கரையில் அமைந்த சுக்ரரின் தவச்சாலையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96592

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 68

[ 11 ] காகவனத்தின் ஊர்மன்றில் தன் கையிலிருந்த முழவை மீட்டியபடி உக்ரன் பாடினான். அவன் முன் கம்பளியும் மரவுரியும் போர்த்தி அமர்ந்திருந்தவர்களின் கண்களில் மன்றெரி அனல்முனைகொண்டிருந்தது. காற்று குடில்கூரைகளை சீறவைக்க தழல் எழுந்து ஆடி குவிந்து பரந்து மீண்டும் எழுந்தது. அப்பால் அவர்களின் தொழுவங்களில் கன்றுகள் காதடித்து குளம்புவைத்து இடம்மாறி நிற்கும் ஒலி கேட்டது. காட்டின் சீவிடு ஒலி சூழ்ந்து நின்றிருக்க அவன் குரல் அதன் ஒரு பகுதியே என ஒலித்தது. “கல்பத்தின் தொடக்கத்தில் பிரம்மம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93726

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 67

[ 9 ]                  காகவனம் என்று அழைக்கப்பட்ட அந்தச் சிற்றூர் முன்னூறு மூங்கில் இல்லங்களும் நடுவே வட்டவடிவமான மன்றுமுற்றமும் கொண்டிருந்தது. ஊரை வளைத்துச் சென்ற முள்மர வேலிக்கு நடுவே கன்றுகள் சென்று வருவதற்கான வலப்பக்க வாயிலும் மானுடரும் வண்டிகளும் செல்வதற்கான இடப்பக்க வாயிலும் இருந்தன. வலப்பக்க வாயிலில் புகுந்த காலடிப்பாதை வளைந்து சென்று ஊரின் பின்புறம் இருந்த குறுமரங்களால் ஆன சோலையை அடைந்தது. அதற்குள் கன்றுகளைக் கட்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93702

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66

[ 7 ] விழிதெரியா வலையிழுத்து அதன் நுனியில் இருக்கும் சிறுசிலந்தி போலிருந்தது சண்டகௌசிகையின் சிற்றாலயம். அவர்கள் புலரி நன்கு எழுந்து ஒளிக்குழாய்கள் சரிவுமீண்டு வரும் வேளையில் சென்று சேர்ந்தனர். மூன்று நாட்கள் அடர்காட்டில் விழித்தடம் மட்டுமே எனத் தெரிந்த பாதையில் ஒற்றை நிரையென உடல் கண்ணாக்கி, தங்கள் காலடியோசையையே கேட்டுக்கொண்டு நடந்தனர். மலைப்பாறைகளில் ஏறி அனல்மூட்டி அந்தி உறங்கினர். விடிவெள்ளி கண்டதுமே எழுந்து சுனைகளில் நீராடி முந்தைய நாள் எச்சம் வைத்திருந்த சுட்ட கிழங்குகளையும் காய்களையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93657

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27

[ 7 ] விதுரர் நோயுற்றிருப்பதாக காலன் வந்து சொன்னபோது தருமன் ஆற்றங்கரையிலிருந்த ஆலமரத்தடியில் நகுலனுடனும் சகதேவனுடனும் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் காலையின் வழிபாட்டுச்சடங்குகள் முடிந்தபின்னர் ஆற்றங்கரைக்கு உடல்முகம் கழுவும்பொருட்டு வந்தனர். எதிரே கிருதன் வருவதை தருமன் கண்டார். “நேற்று நாம் பேசிக்கொண்டிருந்த இளையோன். நாம் சொன்ன சொற்கள் அவனை இரவு கண்துயில விட்டிருக்காது” என்று தருமன் புன்னகைத்தார். ஆனால் அவர்களைக் கண்டதும் கிருதன் மறுபக்கம் வழியாக விலகிச்சென்றுவிட்டான். அது தருமனை திகைக்க வைத்தது. “அவன் நம்மை தவிர்க்கிறானா?” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89744

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26

[ 5 ] கோபாயனர் சினம்கொண்டிருப்பதை உள்ளே நுழைந்ததுமே தருமன் அறிந்துகொண்டார். அவர் அருகே நின்றிருந்த மாணவன் பணிந்து அவரை அமரும்படி கைகாட்டினான். அவர் அமர்ந்துகொண்டதும் வெளியேறி கதவை மெல்ல மூடினான். அவர்களிருவரும் மட்டும் அறைக்குள் எஞ்சியபோது கோபாயனர் பெருமூச்சுடன் உடலை எளிதாக்கிக்கொண்டார். சினமின்றி இயல்பாகப் பேசவேண்டுமென அவர் எண்ணுவதை காணமுடிந்தது. எதுவானாலும் முதற்சொல் அவரிடமிருந்தே எழட்டும் என தருமன் காத்திருந்தார். “இன்றுகாலை கிருதன் என்னும் இளையோன் இங்கு வந்து என்னிடம் உரையாடிச் சென்றான்” என்று உணர்ச்சியற்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89720

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25

[ 3 ] கோபாயனரின் சொற்கூடத்திலிருந்து வெளிவந்து நின்ற தருமன் எண்ணங்களால் எடைகொண்ட தலையை உதறுவதுபோல அசைத்தார். “இவ்வழி, மூத்தவரே” என்று அழைத்த நகுலனை நோக்கி பொருளில்லாமல் சிலகணங்கள் விழித்தபின் “ஆம்” என்றார். அவர்கள் மழைச்சாரல் காற்றில் பீலிவிசிறிகள் போல அலையலையாக வந்து தழுவிய குளிர்ந்த முற்றத்தில் இறங்கி உடல் குறுக்கியபடி நடந்தனர். தன் குடில்முன் வந்ததும் தருமன் நின்றார். இளையவர்கள் அவரை வணங்கி விடைபெற்றனர். குடிலுக்குள் சென்று தனிமையை உணர்ந்ததுமே திரௌபதியின் உறுதிதான் அவர் நெஞ்சில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89707

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 48

பகுதி பத்து : அனல்வெள்ளம் [ 1 ] அஸ்தினபுரியின் வரலாற்றில் அதற்கிணையானதொரு மழைக்காலமே வந்ததில்லை என்றனர் கணிகர். ஆறுமாதகாலம் மழை பிந்தியதுமில்லை. வந்தமழை மூன்றுமாதம் நின்று பொழிந்ததுமில்லை. புராணகங்கையில் நீர் ஓடியதைக் கண்ட எவருமே அஸ்தினபுரியில் வாழ்ந்திருக்கவில்லை. நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்பு அதில் நீர்பெருகியதை கணிகர்நூல்கள் குறிப்பிட்டன. அப்போது ஆமை ஒன்று அஸ்தினபுரியின் மாளிகைமாடத்தின் மீது ஏறியது என்றன. மழை பொழியத் தொடங்கி ஒரு மாதமானபோது நாணல்களுக்குள் வாழும் எலிகளைப்போல மனிதர்கள் மழைத்தாரைகளுக்குள் வாழக்கற்றுக்கொண்டனர். தவளைகளைப்போல நீரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48442