Tag Archive: கிரிதரன் ராஜகோபாலன்

பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்

உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்) புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பும், தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக் படித்தேன். சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு இங்கிலாந்தில் நார்விச் நகரத்துக்கு வந்தேன். கடந்த பத்து வருடங்களாக லண்டன் காப்பீடு மற்றும் வங்கி சார்ந்த தகவல் தொழில்நுட்பத்துறையின் மென்பொருள் கட்டுமானம் சார்ந்த வேலையில் இருக்கிறேன். மனைவி மற்றும் இரு மகள்கள். இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்? வாசிப்புப்பழக்கம் அப்பாவிடமிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129150

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

2006ஆம் ஆண்டு முதல் இணையத்தில் எழுதி வருகிறேன். அதற்குச் சில ஆண்டுகள் முன் கைப்பிரதியாக எழுதி வைத்திருந்த கதைகளையும் மொழிபெயர்ப்புகளையும் தட்டச்சு செய்து என் வலைப்பக்கத்தில் பதிந்தேன். அடுத்தடுத்து, வலசை, வார்த்தை, சொல்வனம், பண்புடன், திண்ணை, பதாகை, தமிழினி, அரூ போன்ற இதழ்களில் சிறியதும் பெரியதுமாகபுனைவுகள் எழுதினேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகுஅச்சில் வெளியாகும் முதல் புத்தகம் இது. வளர்ப்பு நாயைப் போல நாளின் கடமைகள் விலகியதும் வாசல் வந்து வரவேற்று, சோம்பித் திரிந்த நேரத்தில் என் மீது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129152

6. நிர்வாணம் – ரா.கிரிதரன்

[மீண்டும் புதியவர்களின் கதைகள் ] சின்ன மணிக்கூண்டுக்கு பக்கத்தில் சண்டே மார்க்கெட் கூட்டத்தில் புத்தனை மீண்டும் பார்த்தேன். அதற்கு முன்தினம்தான் வேகமாக சைக்கிளில் கடந்து கூப்பிட்ட குரலுக்கு நில்லாமல் போய்விட்டான் புத்தன். இன்று, அது போல சைக்கிளை விரட்டிக்கொண்டிராமல் மார்க்கெட் விளக்கு கம்பத்துக்கு அருகே நின்றுகொண்டிருந்தான். நேற்று போலில்லாமல் இன்று அவனை சந்தித்தே ஆகவேண்டும் எனும் உந்துதல் குறைவாகத்தான் இருந்தது. நெருக்கமானவரிடம் சிறிது காலம் பேசாமல் இருந்துவிட்டால்கூட மீண்டும் பழைய குதூகலம் வந்துவிடாது போலும். ஊர் திரும்பியதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40447

ஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை – கிரிதரன் ராஜகோபாலன்

————— முதல் பகுதி ————— இந்த கட்டுரை ‘ஜெயமோகன் சிறுகதைகள்’ (உயிர்மை வெளியீடு) என்ற புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம். பின்புலம் ——— இந்த சிறுகதைகள் பின்நவீனத்துவமும் புதிய முயற்சி எழுத்துகளும் தளும்பிய காலத்தில் எழுதப்பட்டது .ஆனால் பின்நவீனத்துவ பாணியில் எழுதப்பட்டவை அல்ல.கதை சொல்லும் உத்வேகமே இதன் யுத்தி.இந்த பின்புலத்தை புரிந்துகொள்வது எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலிருக்கும் மொழியின் ஆதாரமான தகவல்தொடர்பை பல தடங்களில் மெருகேற்றுகின்றன. மொத்தம் 36 கதைகள் அடங்கிய தொகுப்பு இது.இவற்றில் பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/460