Tag Archive: காஷ்மீர்

காஷ்மீரில் நிகழ்வது…

எந்த ஒரு விஷயத்தையும் நாளிதழ்களின் ஒற்றைவரிச்செய்திகள் வழியாகவே அறிந்துகொண்டு அரசியல் முன்முடிவுகளையும் பல்வேறு காழ்ப்புகளையும் கலந்து எழுதும் அரசியலெழுத்தாளர்களையே நாம் பெற்றிருக்கிறோம். எழுதும் விஷயத்தின் பின்புலத்தைப்புரிந்துகொள்வதோ, அதற்கென ஓர் எளியபயணத்தையாவது மேற்கொள்வதோ இங்கே மிக அரிது. இவர்கள் உருவாக்கியளிக்கும் சித்திரங்களை ஒட்டியே நம் சராசரி மனங்கள் தங்கள் அரசியல் பார்வைகளை உருவாக்கிக்கொண்டுள்ளன காஷ்மீர், வடகிழக்கு அரசியலைப்பற்றி இங்கு முன்வைக்கப்படும் பார்வைகள் மிகமிக உள்நோக்கம் கொண்டவை, பிழையானவை என்பதை நான் எப்போதுமே சொல்லிவந்திருக்கிறேன். அங்குள்ள நடைமுறைக்கும் யதார்த்தத்துக்கும் இவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66702

காஷ்மீர் கடிதம்

ஜெ.. ”நான் காஷ்மீர் பற்றி எழுதிய பயணக்கட்டுரையையே நீங்கள் படித்துப்பார்க்கலாம். ராணுவம் அல்லது அரசின் மக்கள்தொடர்பு கூற்றுக்களை அவற்றில் நான் எடுத்துக்கொள்ளவில்லை. அரசு-ராணுவ -குத்தகைதாரர் கூட்டின் ஊழல் எப்படி காஷ்மீர் பிரச்சினையை உயிருடன் வைத்திருக்கவேண்டிய கட்டாயம் கொண்டிருக்கிறது என்றும் அதில் விரிவாகவே எழுதியிருந்தேன்” உங்கள் பயணக் கட்டுரையின் இந்தப் பகுதியை எப்படியோ மிஸ் பண்ணியிருக்கிறேன். மன்னிக்கவும். ஆனால், நான் மீண்டும் வலியுறுத்துவது இதையே. அதில் உள்ள மத அடிப்படைவாதம் தெரியாமல் இல்லை. அது பெரும்பான்மை ஜனாநாயகத்தால் மெல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62374

காஷ்மீரும் காமெடி பூட்டோவும்

அன்புள்ள ஜெ காஷ்மீரை கைப்பற்றுவோம் என்று பிலாவல் புட்டோ பேசியதற்கு எழுதப்பட்டது இந்த எதிர்வினை. இதன் நடையும் பகடியும் அபாரம். விழுந்துவிழுந்து சிரித்தேன் என்று சொன்னால் க்ளீஷே இல்லை. உண்மை முதலில் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.26 வயது.ஒருமாதிரியான வயது. எனக்கும் நானும் இதேமாதிரி இளமையாகவும் மடத்தனமாகவும் இருந்தது நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்த அளவுக்கு இல்லை http://www.indiatimes.com/news/india/indian-bloggers-stinging-response-to-bilawal-bhuttos-claim-for-kashmir-goes-viral-175389.html எஸ் இமையச்சாரல் காஷ்மீரும் இந்துவும் காஷ்மீர் கடிதம் காஷ்மீரும் ராணுவமும் காஷ்மீர் இன்னொரு கடிதம் ஜனநாயகத்தின் காவலர்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/62618

காஷ்மீர் இன்னொரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களின் நீலம் மனநிலையை மாற்றும் எந்த உரையாடலும் வேண்டாம் என்ற நிலையில்தான் இருந்தேன். ஆனாலும் இந்த காஷ்மீர் பற்றி இராணுவ அவலங்களை பற்றி கடிதத்தை கண்டே இந்த கடிதம். எனக்கு சாதாரணமாகவே ஒரு கட்டுகோப்பான இயக்கங்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அது கம்யூனிசமானாலும் ஆர்எஸ்எஸ் ஆனாலும் சரி. அதுவே இராணுவம் என்றால் சற்று அதிக்கப்படியான மரியாதைதான். அவற்றின் அங்கத்தினர்கள் சாமான்ய மனிதர்களின் உந்துதள்களை மீறிய வாழ்வை வாழ்வதனாலேயே அவர்களுக்கு சற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61848

காஷ்மீர்- கடிதம்

ஜெ.. உங்களுக்கு வந்த இந்துவின் லிங்க் படித்தேன். அந்தச் செய்தியில் எல்லாத் தரப்பும் எழுதப்பட்டிருக்கிறது. பெய்ஜிங் தரப்பு மட்டுமல்ல. இது போன்ற பேரிடர்களின் போது, அரசின் செயல்பாடுகளை மீடியாக்கள் எழுதும்போதே, அதன் எதிர் தரப்பும் குறைபாடுகளும் மீடியாக்களின் பக்கங்களில் வருவது சரியே. மீடியா, அரசு செல்ல முடியாத இடங்களுக்கும் மீடியா செல்ல முடியும் என்பதும், குறைபாடுகளை, அவை பெரியதாக இருந்தால் களைவதற்கும் உதவியாகவே அவற்றைப் பார்க்க முடியும் என்பதுமே அவற்றின் பயன்கள். கடந்த காலங்களில் கற்ற பாடங்களைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61706

காஷ்மீரும் இந்துவும்

அன்புள்ள ஜெ நேற்று இரவுதான் நீங்கள் காஷ்மீர் பற்றி எழுதியிருந்ததைப் பார்த்தேன். இன்றுகாலையே தி இந்து அளித்திருந்த தலைப்புச்செய்தியை வாசித்து திகைத்தேன். இந்து எதை எழுதும் என்று முன்னரே ஊகித்து எழுதியதுபோல இருந்தது . எல்லாவகையிலும் தந்திரமான செய்தி. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு மழுங்கலான ரிப்போர்ட் மாதிரி இருந்தது. ஆனால் உள்ளடக்கம் மூன்று. ஒன்று காஷ்மீரில் உண்மையில் ரிலீஃப் நடவடிக்கை ஏதும் பெரிதாக இல்லை. இரண்டு, அந்த மக்கள் அரசாங்கம் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். மூன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61698

வெள்ளநிவாரணத்துக்கு கற்களால் பதில்- காஷ்மீர்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். ஏற்கனவே காஷ்மீரில் ராணுவத்தின் மீது கல்லெறியும் சம்பவங்களின் பின்னணியில் உள்ள அரசியலைப் பற்றி தங்களின் “இமயச் சாரல்” தொடர் கட்டுரைகளில் விளக்கி இருந்தீர்கள்.ஆனால் தற்சமயம் காஷ்மீர் மாநிலமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு,அதில் சிக்கிய மக்களை ராணுவம் உயிருடன் மீட்க போராடி வரும் நிலையில்,அவர்களை பணி செய்யவிடாமல் இந்த சூழ்நிலையிலும் கல்லெறியும் கயவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்,இது பற்றி எந்த முற்போக்கு சமூக ஆர்வலர்களோ ,ஊடகங்களோ கண்டு கொள்வதில்லையே ஏன்? இது சம்பந்தமாக “First …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61669

இமயச்சாரல் – 18

எங்கள் பயணத்திலேயே முக்கியமான கோயில் நாங்கள் ஆறாம் தேதி காலையில் பார்த்த மார்த்தாண்டன் ஆலயம்தான். மார்ட்டண்ட் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இவ்வாலயம் மார்த்தாண்டனாகிய சூரியனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தைப்பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் நேரில் சென்று பார்த்தபோது பிரமித்துப்போனோம். இன்று மையக்கருவறை இடிந்த நிலையில் உள்ளது. முகப்புக்கோபுரவாயிலும் இடிந்து நிற்கிறது. ஆனால் இவ்வாலயத்தின் மகத்தான கட்டமைப்பை கற்பனையில் விரித்துக்கொள்ள முடிந்தது. கிரேக்கபாணி காந்தாரக் கலையின் சாயல் அழுத்தமாக விழுந்த ஆலயம் இது. உருண்ட தூண்கள் நிரைவகுத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60371

இமயச்சாரல் – 17

காலையில் அனந்தநாக் மாவட்டத்தில் இருந்து காக்கிபொரா என்ற இடத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம். அங்கிருக்கும் ஆலயம் பழமையானது என்று தொல்லியல் துறை சொன்னது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் மாவட்டத்தின் தொல்பொருள் துறை உண்மையில் பெரிய அளவில் எந்த ஆய்வையோ தகவல் சேகரிப்பையோ செய்யவில்லை. ஆகவே பெரும்பாலான ஆலயங்களைப்பற்றி ஒற்றை வரி குறிப்புகளே உள்ளன. அங்கு சென்றால் கூட அங்கிருக்கும் அறிவிப்புப்பலகையில் அந்த ஆலயத்தில் என்னென்ன இருக்கிறது என்ற குறிப்பு மட்டுமே இருக்கும். தோராயமாக 10 அல்லது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60301

இமயச்சாரல் – 16

ஜம்மு செல்லக்கூடிய வழியில் அவந்திபுரம் உள்ளது. ஸ்ரீநகருக்கு முன் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் பகுதியின் தலைநகரமாக விளங்கியது அவந்திபுரம். அந்நகரம் முதலாம் அவந்தி வர்மனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்டிருக்கலாம். அவந்திவர்மனின் வம்சம் ஐநூறாண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் சமவெளியை ஆண்டிருக்கிறது. காஷ்மீரின் பொற்காலம் என்று அதைச் சொல்லலாம். அதற்கு நிரூபணமாக, காஷ்மீர் சமவெளி முழுக்க நிறைந்திருப்பவை பிரமிப்பூட்டும் பேராலயங்கள். இந்த ஆலயங்கள் அப்பகுதியில் அன்று விளங்கி வந்த மாபெரும் பண்பாட்டுச்சிறப்பை சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாலயங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60262

Older posts «