இலியட் பற்றி ஜெயமோகனின் கருத்துகள் தொன்மங்களின் ரசிகனான என்னைக் கவர்ந்தன. பிரியமும் அகிலிசும் சந்திக்கும் காட்சி ஜெயமோகன் வார்த்தைகளில் பிரமாதமாக இருந்தது. ஆனால் இலியட், ஒடிசி இரண்டும் – உண்மையைச் சொல்லப் போனால் இந்தியப் பாரம்பரியம் இல்லாத எந்தத் தொன்மமும் – என் மனதைத் தொடவில்லை. இது என் பிரச்சினையா,இந்தியர்களுக்கு மட்டும்தான் இப்படியா, கிரேக்கர்களுக்கு இலியட்தான் மனதைத் தொடும் தொன்மமாக அமையுமா என்று தெரியவில்லை. அதுவும் இதைப் போன்ற வீர கதைகள் – குறிப்பாக பியோவுல்ப் உள்ளிட்ட ஸ்காண்டிநேவியத் தொன்மங்கள்எல்லாமே ஜெயமோகன் சொல்வது போல …
Tag Archive: காவியம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/17740
ஊட்டி காவிய முகாம் (2011) – 1
கம்பராமாயணம், ரகுவம்சம், இலியட் குறித்த உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் ஊட்டி காவிய முகாம் துவங்கிவிட்டது. இங்கே சில புகைப்படங்கள். உரைகளின் ஒலிவடிவம் விரைவில் வெளியாகும் முகாம் அரங்கு மாலை நடை மாலை நடை நாஞ்சில் நாடன் கம்பராமாயண உரை கவிஞர் தேவதேவன் உணவு இடைவேளையில் ஒரு உரையாடல் ஜெயமோகன் ஊட்டி காவியமுகாம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/17069
சில கவியியல் சொற்கள்
கவிதையைப்பற்றி பேசும்போது பொதுவாக நாம் மனப்பதிவுகளை நம்பியே பேசுகிறோம். அதுவே இயல்பானது, நேர்மையானது. ஆனால் அதில் புறவயத்தன்மையை நம்மால் உருவாக்க முடிவதில்லை. ஏனென்றால் நம்முடைய அனுபவம் எப்போதுமே நம்முடைய அக அனுபவமாகவே எஞ்சி நிற்கிறது. கவிதையைப்பற்றிய கோட்பாடுகளும் கலைச்சொற்களும் கவிதையை புறவயமாக பேசுவதற்கு உதவியானவை என்றவகையில் மிக முக்கியமானவை.. அவற்றை நம் வரையில் தெளிவாக வரையறுத்துக்கொள்வதென்பது கவிதையைப்பற்றிய எந்த பேச்சும் வெறும் பேச்சாக அமையாமல் தடுக்கும் இன்று நாம் கவிதையைப்பற்றி பேசும் பெரும்பாலான பேச்சுக்கள் மேலைக்காவிய இயலை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/9322