Tag Archive: காவல் கோட்டம்

காவல்கோட்டமும் தோழர்களும்

அன்புள்ள ஜெமோ, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த மாதவராஜ் காவல்கோட்டத்தைப் பிரித்து மேய்ந்திருப்பதை வாசித்தீர்களா? அதற்கு தமிழ்ச்செல்வன் அளித்துள்ள அங்கீகாரத்தையும் நீங்கள் வாசிக்கலாம். உங்கள் மேலான கருத்து என்ன? பிகு: நீங்கள் அந்த நாவலை எடிட் செய்ததாக ஒரு பேச்சு அடிபடுகிறதே… சங்கர். சு.வெங்கடேசன் அன்புள்ள சங்கர், காவல்கோட்டத்தைப் பற்றிய என்னுடைய மேலான கருத்தை விரிவாக எழுதிவிட்டேன், அந்நாவல் வெளிவந்தபோதே. வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டேன். என்னுடைய எல்லாக் கருத்துக்களும் மேலானவையே, கொஞ்சம் படித்துப் பாருங்கள். மாதவராஜ் விமர்சனம் எழுதவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25268/

காவல்கோட்டம் 5

காவல் கோட்டத்தில் இலக்கிய இடம்   காவல்கோட்டம் தமிழில் இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நாவல்களில் முதன்மையானது என்று சொன்னேன். புனைவு மூலம் ஒரு மாற்று வரலாற்றை உருவாக்கி வரலாறேயாக வரலாற்றுக்குள் நிலைநாட்டுவதில் முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறது இந்த நாவல். வரலாற்று அனுபவம் என்பது சிடுக்கும் சிக்கலும் உத்வேகமுமாக வாழ்க்கை கட்டின்றிப் பெருக்கெடுப்பதைப் பார்க்கும் பிரமிப்பும் தத்தளிப்பும் கலந்த மனநிலைதான்.   வரலாற்றை ஒருபோதும் ஒரு கட்டுக்கோப்பான வடிவ உருவகத்திற்குள் நிறுத்திவிட முடியாது. அதேசமயம் அதில் ஒரு கட்டுக்கோப்பைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4672/

சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், கடிதங்கள்

ஜெ,   காவல்கோட்டம் என்ற நாவலை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கடுமையான விமரிசனம் வழியாகவே கேள்விப்பட்டேன் .  ஒரு பெரிய நாவல் நன்றாக இல்லை என்று சொன்னாலே வாங்கவேண்டாம் என்று தோன்றிவிடுகிறது. ஆகவே வாங்கவில்லை. [நீங்களும் இதேபோல பல நூல்களை கடுமையாக கிழித்திருக்கிறீர்கள் இல்லையா?] இத்தனை நாள் கழித்து நீங்கள் எழுதியிருக்கும் விமரிசனம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் விமரிசனத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அத்துடன் சு.வெங்கடேசன் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நூலுக்கான தகவல்களை அளித்தார் என்று எழுதிய நீங்கள் உடனே ‘ஜகா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4669/

காவல்கோட்டம் 4

வரலாற்றை சாராம்சப்படுத்துதல்   ‘ஒரு வரலாற்று நாவல் வரலாற்று வாதத்தை உருவாக்குகிறது, பின்னர் அந்த வரலாற்று வாதத்தை மீறிச் செல்கிறது’ என்று ஒரு விமரிசனக் கூற்று உண்டு. வரலாறு என்பது தன்னிச்சையான நிகழ்வுகளின் தொகை. தொடர் நிகழ்வுகள், உதிரி நிகழ்வுகள் என்று வரலாறு முழுக்க அர்த்தமற்ற நிகழ்வுகள்தான் பரவிக் கிடக்கின்றன. அவற்றைப் பார்க்கும் மானுடப் பிரக்ஞை அவற்றுக்கு இடையே ஒரு காரியகாரணத் தொடர்பினை உருவகித்துக் கொள்கிறது. அந்தத் தொடர்புக்கு வழிவகுக்கும் ஒரு மையத்தை உருவகித்துக் கொள்கிறது. பிறகு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4665/

காவல்கோட்டம் 3

ஆக்கல் அழித்தலின் ஆட்டம் ‘கட்டிடங்கள் கண்ணால் பார்க்கத்தக்க வரலாறு’ என்று கிப்பன் பிரபு அவரது ‘ரோமப் பேரரசின் வீழ்ச்சியும் சரிவும்’ என்ற புகழ்பெற்ற நூலில் சொல்கிறார். கட்டிடங்களை உருவாக்கிய அந்த சமூக அமைப்பின் இயல்பு எதுவோ அது அந்தக் கட்டிடங்களிலும் இருக்கும். அவர்களின் குறியீடுகள் அக்கட்டிடங்களில் உறைந்திருக்கும். அக்கட்டிடங்களில் புழங்கிய மனிதர்களின் நினைவுகள் அக்கட்டிடங்களையே காலப்போக்கில் குறியீடுகளாக ஆக்கியிருக்கும். ஆகவேதான் போர்களின்போது கட்டிடங்கள் சிதைக்கப்படுகின்றன. நெடுங்கால வரலாறு உள்ள தேசங்களின் கட்டிடங்கள் ஒவ்வொரு வரலாற்றுக்காலகட்டத்திலும் அழித்து அழித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4645/

காவல் கோட்டம் 2

2. வரலாற்றில் வண்ணம் சேர்த்தல்   வரலாற்று நாவல் என்பது என்ன? முகங்களாக ஆக்கப்பட்ட வரலாறு என்று அதைப்பற்றி கூறலாம். வரலாறு என்ற வரைபடத்தை மரங்களும், மிருகங்களும், மக்களும் வாழ்க்கையும் ததும்பும் நிலமாக மாற்றுவதே வரலாற்று நாவலின் கலை. சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ ஏன் ஒரு தோல்வி என்றால், அந்நாவல் இந்தச் சவாலில் வெல்ல முடியவில்லை என்பதே. தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ ஏன் வெற்றிகரமான நாவல் என்றால் மொத்த வரலாற்றையும் நாமே சென்று வாழ்ந்து விட்டு மீளக்கூடிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4633/

காவல்கோட்டம் 1

வரலாற்றை மீள எழுதுதல்   வரலாற்றுப் புனைக்கதை என்றால் என்ன என்பதை நான் இவ்வாறு வரையறை செய்து கொள்கிறேன். வரலாறு என்பது ஒரு மாபெரும் மொழிபு (Narration) அந்த மொழிபு தொடர்ச்சியாக பல்வேறு மனிதர்களால் பல்வேறு காலகட்டமாய் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது. அத்தனை மனிதர்களையும் அவர்களுக்குப் பொதுவானதாக இருக்கக்கூடிய ஒரு தர்க்க அமைப்பு உள்ளது. அந்தத் தர்க்க அமைப்பின் விதிகளின்படியே வரலாற்று உண்மைகள் நிரூபிக்கப்படுகின்றன. வரலாற்று உண்மைகள் பொய்ப்பிக்கவும் படுகின்றன.   அந்த விதிகளைப் பற்றிய விவாதமே ‘வரலாற்றெழுத்தியல்’ என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4612/

காவல் கோட்டம்,எஸ்.ராமகிருஷ்ணன்

  அன்புள்ள ஜெயமோகன், காவல்கோட்டம் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைக்கு வந்துள்ள மறுப்பை கவனித்தீர்களா? உங்கள் மதிப்புரையை எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட முறையில் உங்கள் கருத்துக்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. http://www.keetru.com/literature/essays/manimaran.php சிவராம் அன்புள்ள சிவராம், காவல்கோட்டம் நான் இன்னும் வாசிக்கவில்லை. என் மனநிலை வாசிப்பு எல்லாமே இப்போது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில எழுத்துக்களில் மாட்டிக்கிடக்கிறது. இது என் வழக்கம். ஒரு குறிப்பிட்ட சூழலில் உள்ள எழுத்துக்களை தொடர்ச்சியாக வாசித்தபின்னர்தான் விடுபடுவேன். காவல்கோட்டம் குறித்த எஸ்.ராமகிருஷ்ணனின் விமரிசனத்தைப்பற்றித்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1918/