Tag Archive: காவல்கோட்டம்

மின் தமிழ் பேட்டி 3

30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69820

பொதுப்பிரச்சினையும் புரிதலும்

ஜெ, பொதுப்பிரச்சினைகளில் எதுவும் சொல்வதில்லை என்பதை விளக்கியிருந்தீர்கள். அந்த விளக்கம் மிகத் தெளிவாக அப்பட்டமாக இருந்தது. அதில் எந்த சந்தேகமும் எவருக்கும் வர வாய்ப்பே இல்லையே. அதேபோல நீங்கள் பொதுப்பிரச்சினைகளில் திட்டவட்டமாகக் கருத்துச் சொன்னால் என்ன சிக்கல் வரப்போகிறதென நினைக்கிறீர்கள்? ஆனந்த் அன்புள்ள ஆனந்த், கீழே உள்ள கடிதத்தை வாசிக்கவும். ஜெ ஆசிரியருக்கு , உங்கள் கட்டுரை படித்தேன். நீங்கள் எந்த விஷயத்தையும் அதன் முழுப் பரிமாணத்தில் பார்ப்பவர். சமயத்தில் நீங்கள் சொல்ல வருவதை உடனடியாக என்னால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25885

காவல்கோட்டம் – கடிதம்

அன்புள்ள ஜெ, படிப்பது எனக்கு பிடித்தமான விஷயம். என்னுள் இருக்கும் நோய்க்குப் படிப்பதும் ஒரு வித மருந்தாகவே அமைகிறது. காவல்கோட்டம் பற்றிய என் கருத்துக்கள். ஒன்றரை ஆண்டு முன்பு காவல்கோட்டம் பற்றிக் கேள்விப்பட்டு இரண்டு பக்கங்கள் படித்தவுடன் ‘இத்தகைய நாவல் தமிழில் வந்திருக்கிறதே’ என்ற மகிழ்ச்சியுடன் என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் படித்தவுடன் அவர்களும் படித்து நல்ல நாவல் என்றே பாராட்டினர். நாங்கள் அப்பொழுது இணையக் குழாய்ச் சண்டையை அறிந்திருக்கவில்லை. 1. காவல் கோட்டம் எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25349

சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அக்காதமி விருது

இவ்வருடத்தைய சாகித்ய அக்காதமி விருது காவல்கோட்டம் நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சாகித்ய அக்காதமி விருது பெறும் எழுத்தாளர்களிலேயே இளம் வயதினர் சு.வெங்கடேசன். காவல்கோட்டம் அவரது முதல் நாவல் என்பது மட்டுமல்ல வெளிவந்த ஒரே இலக்கிய ஆக்கமும் கூட. எல்லா வகையிலும் முக்கியமான விருது. வெங்கடேசனின் காவல்கோட்டம் மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றியதும் அங்கே காவல்புரிந்து வந்த கீழக்குயில்குடி வட்டாரப் பிறமலைக்கள்ளர்கள் அதன் காவலுரிமையை இழந்து பின்னர் அதைப் பெறும் சித்திரத்தில் ஆரம்பிக்கிறது. மதுரையின் காவலர்களாகிய அவர்களே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23356