Tag Archive: காலன்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34

[ 11 ] இருளில் வெளியே இறங்கி குடில்முற்றத்தில் நின்று அப்பால் தெரிந்த திரௌபதியின் குடிலை தருமன் நோக்கிக்கொண்டிருந்தார். தொலைவில் எங்கோ ஒரு காட்டுநாயின் ஊளை கேட்டது. இருளிலும் காகங்கள் சிறகடித்துப் பறந்துகொண்டிருப்பதை கண்டார். அவற்றின் கருமை வானத்தின் கருமையை குறைத்துக்காட்டியது. இருட்டுக்குள் அங்கு அவர் நிற்பதை அவரன்றி வேறெவரும் அறியவில்லை. அவ்வெண்ணமே பெரும் கோட்டையென சூழ்ந்து பாதுகாப்பளித்தது. ஆனால் அதுவே அதை பொருளற்ற செயலாகவும் ஆக்கியது. என்ன எண்ணுகிறேன் இப்போது? இவ்விருளில் இப்படி நின்றபடி அவளையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89925/

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28

[ 9 ] பீமனும் அர்ஜுனனும் முன்னரே விதுரரின் குடில்முகப்பில் நின்றிருந்தனர். தருமனும் நகுலனும் அவர்களைப் பார்த்தபின் சற்று நடைவிரைவுடன் நோக்கு விலக்கி அணுகினர். “ஐவரையும் வரச்சொன்னார் அமைச்சர்” என்றான் நகுலன். தருமன் கேட்காமலேயே “நம்மை மட்டும்தான், அரசியை கூப்பிடவில்லை” என்றான். தருமன் தலையசைத்தார். வெயில் உடலிலிருந்து வியர்வையை ஆவியாக எழச்செய்தது. அன்றும் மழை இருக்கும் என்று தோன்றியது. ஆனால் வானம் ஒளிநிறைந்திருந்தது. அவர்கள் அவர் வருவதற்காகவே காத்திருந்தனர் எனத்தெரிந்தது. அவர் அருகே வந்ததும் சொல்லின்றி தலைவணங்கினர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89756/

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27

[ 7 ] விதுரர் நோயுற்றிருப்பதாக காலன் வந்து சொன்னபோது தருமன் ஆற்றங்கரையிலிருந்த ஆலமரத்தடியில் நகுலனுடனும் சகதேவனுடனும் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் காலையின் வழிபாட்டுச்சடங்குகள் முடிந்தபின்னர் ஆற்றங்கரைக்கு உடல்முகம் கழுவும்பொருட்டு வந்தனர். எதிரே கிருதன் வருவதை தருமன் கண்டார். “நேற்று நாம் பேசிக்கொண்டிருந்த இளையோன். நாம் சொன்ன சொற்கள் அவனை இரவு கண்துயில விட்டிருக்காது” என்று தருமன் புன்னகைத்தார். ஆனால் அவர்களைக் கண்டதும் கிருதன் மறுபக்கம் வழியாக விலகிச்சென்றுவிட்டான். அது தருமனை திகைக்க வைத்தது. “அவன் நம்மை தவிர்க்கிறானா?” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89744/

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22

[ 10 ]  புலர்காலைக்கு முன்னரே காலனுடன் நகுலன் வந்து தருமனை எழுப்பினான். மரவுரித்தூளியில் துயின்றுகொண்டிருந்த தருமன் எழுந்து இருளுக்குள் கையில் சிறு நெய்யகல்சுடருடன் நின்றிருந்த இருவரையும் நோக்கியதுமே நெஞ்சு பெருமுரசென அறையப்பட்டார். “என்ன ஆயிற்று?” என்றார். “விதுரர் இருக்குமிடம் தெரிந்துவிட்டது” என்று நகுலன் சொன்னதும் உள்ளம் அலை பின்வாங்கி குளிர்ந்து உறைந்தது. ஒரு கணத்திற்குள் தன்னுள் உறைந்துகிடந்த அத்தனை அச்சங்களையும் பேருருக்கொண்டு பார்த்துவிட்டார். “எங்கிருக்கிறார்?” என்றார் சீரான குரலில். எழுந்து உடையை சீரமைத்தபடி “உண்ணாநோன்பிருக்கிறாரா?” என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89660/

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20

[ 7 ] மைத்ரேயர் தன் மாணவர்களுடன் கிளம்பிக்கொண்டிருந்தபோது குடிலுக்குள் யுயுத்ஸு பாய்ந்து நுழைந்து “தந்தை வந்துகொண்டிருக்கிறார்” என்றார். நான் திகைத்து “எங்கே?” என்றேன். “இங்குதான்… சஞ்சயன் அழைத்துவருகிறான். இடைநாழியை கடந்துவிட்டார்” என்றார். நான் உள்ளே சென்று அங்கே வழித்துணைக்காவலர்களிடம் பேசிக்கொண்டிருந்த கனகரிடம் “அமைச்சரே…” என்று மூச்சிரைத்தேன். அவர் திகைத்து “என்ன?” என்றார். “பேரரசர் வந்துகொண்டிருக்கிறார். இடைநாழியை கடந்துவிட்டார்” என்றேன். இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. மைத்ரேயரிடம் பேரரசர் அவரைப் பார்க்க வருகிறார் என்று எப்படி சொல்வது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89555/

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19

[ 5 ] “மைத்ரேயரைப் பார்க்க அமைச்சர் விதுரர் சென்றபோது கனகரும் அடைப்பக்காரனாக மூங்கில்கூடையுடன் நானும் உடன்சென்றோம்” என்று காலன் சொன்னான். “மைத்ரேய மாமுனிவர் புஷ்பகோஷ்டத்திற்குப் பின்னாலிருந்த குறுங்காட்டுக்குள் முனிவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைக் குடிலில் தங்கியிருந்தார். மாமுனிவரான பராசரரின் வழிவந்தவர் அவர் என்று அறிந்திருந்தேன். அவர்களுக்கு வேதத்தைவிட புராணங்களே மெய்யறிதலின் பெருந்தொகை என்றனர். அவருடன் அவரது எட்டு மாணவர்களும் வந்திருந்தனர்.” நாங்கள் செல்லும்போது அவர் அன்றைய வகுப்பு முடிந்து மாணவர்களுடன் அளவளாவிக்கொண்டிருந்தார். விதுரர் முனிவரின் தாள்பணிந்து முகமனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89538/

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18

[ 3 ] ஐதரேயப்பெருங்காட்டை வகுந்தோடிய பிரக்ஞாதாரா என்னும் நீர்நிறைந்த காட்டாற்றின் கரைக்கு காலையில் தருமனும் தம்பியரும் நீராடச் சென்றனர். கருக்கிருட்டு மறையத்தொடங்கியிருந்தது. இலைகளினூடாகத்தெரிந்த வானில் ஒளிநனைவு ஊறிக்கொண்டிருந்தது. அங்கு வந்தபோதிருந்த இறுக்கத்தை அங்கிருந்த பசுமையும், அக்குடில்களில் இருந்த அழகும் மெல்ல இல்லாமலாக்கிவிட்டிருந்தன. ஐதரேயமரபு ஏழு அரசர்களால் புரக்கப்படுவது. எனவே அங்கே எதற்கும் குறையில்லாமலிருந்தது. நாளும் நெய்யுடனும் கனிகளுடனும் மாணவர்கள் ஊர்களிலிருந்து தேடிவந்துகொண்டிருந்தனர். மண்ணுக்கு அடியில் சுட்டசெங்கற்களை அடுக்கி காரை இடையிட்டுக் கட்டப்பட்டிருந்த கலவடிவமான களஞ்சியங்களில் ஒன்பதுவகை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89531/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை -6 அரங்குசொல்லி மெல்ல அரங்கின் மையத்தில் வந்து நின்று கைவிரித்து “ஆக, ஓர் அங்கத நாடகத்தில் ஒருபோதும் வரமுடியாத வஞ்சங்களும், பெருவிழைவுகளும், விளைவான முற்றழிவும் இந்நாடகத்தில் வரவிருக்கின்றன. இக்கவிஞன் எந்த முறைமைக்குள்ளும் அடங்காதவன். ஏனெனில் இந்த நாடகத்தை அவன் தனக்காகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறான். இதற்குமேல் இதில் எனக்குப் பங்கென ஏதும் இல்லை. இதோ நான் அணியறைக்குச் சென்று இந்தத் தலைப்பாகையை கழற்றி வைத்துவிட்டு என் உடைகளை அணிந்துகொண்டு என் இல்லத்திற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84896/