Tag Archive: காலச்சுவடு

சுராவும் சுஜாதாவும்

அன்புள்ள ஜெ சுந்தர ராமசாமி காலச்சுவடு இதழைத் தொடங்கும்போது நீங்கள் அதனுடன் நெருக்கமான தொடர்பில் இருந்திருக்கிறீர்கள். சுஜாதாவுக்கு காலச்சுவடு இதழின் முதல் இதழை சு.ரா அனுப்பி கருத்து கோரினார் என்று இணையத்தில் ஒரு விவாதம் நிகழ்கிறதே அதைப்பற்றி உங்கள் தரப்பு என்ன? சுந்தர்ராஜன் அன்புள்ள சுந்தர்ராஜன், காலச்சுவடு முதலில் சுந்தர ராமசாமி பொறுப்பில் வெளிவந்தபோது அதனுடன் மிகநெருக்கமான தொடர்பில் இருந்தேன். அதற்காக நிறைய பணியாற்றினேன். அதில்வெளிவந்த பிளாக்குகள் [படங்கள்] நான் சேகரித்து அளித்தவை. பலரை சந்தித்து எழுத்துக்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100334

சிற்றிதழ் என்பது…

வழக்கமாக தமிழகத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கங்களே பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையங்களாக இருக்கும். அவை மாலையுணவு, அரட்டை, சினிமா, சில்லறை கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியவற்றையே பண்பாட்டுச் செயல்பாடுகளாகக் கொண்டிருக்கும். இலக்கியம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை பரவலாக உள்ள அரசியல் செயல்பாடுகளின் பகுதியாக ஒலிக்கும் கூக்குரல் உற்பத்தி மட்டுமே. அவற்றுக்கு அப்பால் உள்ள இலக்கியம் சிந்தனை ஏதும் அவர்களுக்கு தெரிந்ததாகவே இருக்காது. விதிவிலக்காக, மலேசியாவில் நவீனத் தமிழிலக்கியத்தின் ஒரு தொடக்கம் நிகழ்கிறது என்பதை பலவகையாகப் பதிவு செய்திருக்கிறேன். நவீன், யுவராஜ்,பாலமுருகன் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79870

அச்சிதழ்கள்

அச்சு இதழ்கள் முன்னைவிட இப்போது நிறைய வருகின்றன. மின்னூடகம் வந்தபின் அச்சு ஊடகங்கள் குறையும் என்னும் எண்ணம் பரவலாக இருந்தது, ஆனால் அது பொய் என இவை காட்டுகின்றன. ஆனால் இவை தற்காலிகமாக நிகழ்பவையா என்றும் ஐயமாக இருக்கிறது. கல்குதிரை, சிலேட் ,மணல்வீடு போன்ற சீராக வெளிவராத சிற்றிதழ்கள் ஒருவரிசை. உயிர்மை , காலச்சுவடு, தீராநதி போன்ற நடுத்தர இதழ்கள் இன்னொரு பக்கம். அமிர்தா, அந்திமழை, ஆழம், நற்றிணை, உயிர் எழுத்து போல மேலும் ஜனரஞ்சகமாக, மேலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78538

இரு சந்தேகங்கள்

ஜெமோ இரண்டு சந்தேகங்கள். முதல்சந்தேகம் மாதொரு பாகன் நாவலுக்கு எழுந்த எதிர்ப்பை நீங்கள் சரியாகவே கண்டித்திருக்கிறீர்கள். உங்கள் ஆணித்தரமான குரல் வரவேற்புக்குரியது. ஆனால் சில மாதங்களுக்கு முன் உங்கள் கட்டுரையின் ஒரு வரி இதேபோன்ற எதிர்ப்பைச் சந்தித்தது. உங்கள் சொந்த ஊரிலேயே. அதுவும் முழுக்கமுழுக்க இதேபோன்ற நிகழ்வுதான். இதேபோல சாதியக்குழுக்களும் உதிரி இந்த்துவக் குழுக்களும்தான் அதைச் செய்தார்கள். நீங்கள் மிரட்டப்பட்டதாக எழுதியிருந்தீர்கள். நீங்கள் மிரட்டப்பட்டபோது அதை ஃபேஸ்புக்கில் பலர் எழுதியிருந்தனர். சொல்லப்போனால் சில இந்துத்துவர்கள் கண்டித்திருந்தனர். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69051

அப்பாவுக்கு மூன்று கவிதைகள்

பழைய கடிதங்களுக்காக தூசு படிந்த கோப்புகளை துழாவிக்கொண்டிருந்தேன். இக்கவிதைகள் அகப்பட்டன. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன். எல்லாமே  மிக அந்தரங்கமான கவிதைகள். அன்றைய கொந்தளிப்பை மட்டுமே அவை வெளிப்படுத்துகின்றன. அப்பாவும் அம்மாவும் தற்கொலைசெய்துகொண்ட நாட்களின் குற்றவுணர்ச்சியை, தூக்கமின்மையை, தனிமையை இவ்வரிகள் மூலம் கடந்துசெல்ல முயன்றிருக்கிறேன். இக்கவிதைகள் மூன்றுக்கும் முக்கியமான பொது அம்சம் உண்டு. நான் இவற்றை சுந்தர ராமசாமிக்கு எழுதிய தனிப்பட்ட கடிதங்களில்தான் எழுதினேன். மூன்றாம் கவிதை மட்டும் அவர் நடத்திய காலச்சுவடு இதழில் 1988ல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2756

அசோகமித்திரனை அவமதித்தல்

அசோகமித்திரனின் காலச்சுவடு பேட்டி பற்றி பலர் என்னிடம் சொன்னார்கள். அதில் அவர் வெண்முரசுவை ‘கிழித்துவிட்டார்’ என ஃபேஸ்புக்கில் பலர் மகிழ்ந்தார்கள் என்றார்கள். அவர் தமிழில் என்னை புகழ்ந்ததுபோல எவரையும் புகழ்ந்ததில்லை. ஆகவே ஒரு படைப்பை முற்றிலும் நிராகரித்தாலும் அதுவும் நியாயமே. ஆனால் அதில் அவர் தன் மனைவிக்கு அது புரியவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார். நற்றிணை யுகனைச் சந்தித்தபோது குமுறினார். நற்றிணை அசோகமித்திரனுக்கு அனுப்பிய பதிப்புரிமைத் தொகைக்கான காசோலைகளின் ரசீதுகளைக் காட்டி ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்திருக்கிறேன், நான் பணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63610

தமிழும் திராவிடமும்

திண்ணை இதழில் ஆய்வாளர் அ.கணேசனும் தி.ராமச்சந்திரனும் எழுதியிருக்கும் கட்டுரை தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் முக்கியமான ஒன்று. ஆ.இரா.வேங்கடாசலபதி காலச்சுவடு இதழில் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றுக்கான பதில் அது. சென்ற பல ஆண்டுகளாகத் தமிழில் முன்வைக்கப்பட்டு வரும் ஒரு கருத்து தமிழகம் மீது பிராமண- வைதீக ஆதிக்கம் மேலோங்கியிருந்தமையால் ‘தன்னியல்பாக’ ‘அடித்தள மக்களால்’ உருவாக்கப்பட்ட ஒர் அரசியலெழுச்சிதான் திராவிட இயக்கம் என்பது. திராவிட இயக்கம் தமிழைக் காக்கவே செயல்பட்டது என்னும் மாயை. இதற்கு மாறானவற்றை எழுதவோ பேசவோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22479

காலச்சுவடுக்கு தடை

காலச்சுவடு இதழுக்கு நூலகத்துறை அளித்துவந்த ஆணையை வாய்மொழி உத்தரவின்பேரில் ரத்துசெய்து வந்ததாக காலச்சுவடு இணையதளத்தில் இருந்து என் வாசகர் ஒருவர் அனுப்பிய சுட்டிமூலம் http://www.kalachuvadu.com/issue-104/page53.asp அறிந்துகொண்டேன். நெடுநாட்களாகவே நான் காலச்சுவடை படிப்பதில்லை. அரவிந்தன் என்பவர் அதன் ஆசிரியராக இருந்த நாட்களில் அனேகமாக எல்லா இதழிலும் என்னைப்பற்றி வெளிவந்த அவதூறுகளும், வசைகளும் காரணமாக என் மனநிலையைப் பேணும்பொருட்டு தவிர்த்துவிட்டேன். வைக்கம் முகமது பஷீர் என்னுடைய கட்டுரை ஒன்றை அவர்கள் கோரி வெளியிட்ட இதழும் காந்தி பற்றிய இதழும் எம்.எஸ் கொண்டுவந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/618

காலச்சுவடு நூறாவது இதழ்

காலச்சுவடு நூறாவது இதழ் வெளியாகிறது. தமிழிலக்கிய சூழலில் இது ஒரு முக்கியமான சாதனை. தமிழில் சிற்றிதழியக்கம் என்பது எப்போதுமே பொருளாதாரச் சிக்கல்கள் நிர்வாகத்திறனின்மை ஆகிய இரண்டு அடிப்படைகளைக் கொண்டே இயங்கி வந்துள்ளது. சந்தா அனுப்பினால் இதழ் வரும் என்ற உறுதியை அளிக்கும் இதழ்கள் மிகக் குறைவாகவே இருந்திருக்கின்றன. மிகச்சிறந்த நிர்வாகத்திறனும் தெளிவான இதழியல் நோக்கும் கொண்ட கண்ணனின் மேற்பார்வையில் காலச்சுவடு அடைந்த வெற்றி ஒரு சமகால வரலாறு. அவ்விதழில் அவரது கனவும், சலியாத தொடர் உழைப்பும் முன்னெடுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/384