Tag Archive: காம்பில்யம்

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 2 உபப்பிலாவ்யத்தின் சிறிய கோட்டையை அணுக அணுக விஜயை விந்தையானதோர் எக்களிப்பை அடைந்தாள். தன்னுள் எழுந்துகொண்டிருப்பது உவகை என்றுகூட அவள் முதலில் அறியவில்லை. “மிகச் சிறிய கோட்டை, அது கோட்டைதானா?” என்றாள். அபயை “கோட்டை என்பது ஒரு பொதுப்புரிதல்தான், அரசி. காவலர்கள்தான் மெய்யான கோட்டை” என்றாள். விஜயை “இது ஒரு வேலி… வெறுமனே மண்ணை அள்ளிவைத்து கட்டியிருக்கிறார்கள்” என்றாள். “இது விராடர்களின் வட எல்லைக் காவலரண் மட்டுமே… காலப்போக்கில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105348

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 23

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 1 அபிமன்யூ காம்பில்யத்தின் கோட்டை முகப்பை நெருங்கும்போதே அவனுடைய துள்ளும் மீன் பொறிக்கப்பட்ட கொடி கோட்டை மேல் ஏறியது. கொம்புகள் முழங்க வீரர்கள் முகப்புக்கு வந்து புன்னகையுடன் வாழ்த்தி தலைவணங்கி வரவேற்றனர். புரவியிலிருந்து இறங்கி “முத்ரரே, எப்படி இருக்கிறீர்? நகர் நன்கு பொலிகிறதா? ஐம்புரிக்குழல் மங்கையர் நாள்தோறும் அழகு முதிர்ந்துகொண்டிருக்கிறார்களா?” என்றான். “அகவை முதிர்கிறார்கள். பிறிதொன்றும் நான் அறியேன்” என்றான் முத்ரன். அருகே நின்ற சம்பு “இது காடு, இளையவரே. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102709

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 43

பகுதி 10 : சொற்களம் – 1 கிருஷ்ணனின் திருமுகப்படைகள் துவாரகையிலிருந்து கடல்வழியாக தேவபாலபுரம் சென்று சிந்துவின் எதிர்ப்பெருக்கில் நுழைந்து மூலத்தானநகரி வந்து அங்கே ஒருநாள் ஓய்வெடுத்தபின் வண்டிச்சாலை வழியாக சப்தசிந்துவைக் கடந்து காம்பில்யத்தை பன்னிரண்டு நாட்களில் சென்றடைந்தன. தெற்கிலிருந்து மழைக்காற்று வடக்குநோக்கி வீசத்தொடங்கியகாலம் என்பதனால் பாய்களை விரித்ததுமே கலங்கள் சிந்துவின் எதிரொழுக்கின் அலைகள் மேல் தாவித்தாவி ஏறி முன்னால் சென்றன. கலங்களுக்குள் இருந்த அனைத்துப்பொருட்களையும் கட்டிவைக்கவேண்டியிருந்தது. “நூற்றுக்கணக்கான முறை நான் சிந்துவுடன் இணைந்து நடனமிட்டிருக்கிறேன்… அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72823

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 36

பகுதி 8 : நச்சு முள் – 5 அறைக்குள் பூரிசிரவஸ் வந்து “மூத்தவரே” என அழைத்த ஒலியில் கவசங்களுடன் படுத்துத் துயின்றுகொண்டிருந்த கர்ணன் எழுந்துவிட்டான். அதேவிரைவில் தன் ஆவநாழியை அணிந்து வில்லை எடுத்தபடி வெளியே ஓடினான். அவன் செல்வதற்குள் தன் அறையிலிருந்து துரியோதனனும் துச்சாதனனும் துச்சலனும் வெளியே ஓடிவந்தனர். போருடையிலேயே அவர்களும் துயின்றிருந்தனர். முதற்படகிலிருந்து எரியம்பு எழுந்தது. முதற்படகிலிருந்து அறிவிப்பாளன் கூவியசெய்தியை பிறகு சென்ற படகுகள் ஒவ்வொன்றாக ஏற்றுக்கூவின. “காம்பில்யத்தின் மூன்று உளவுப்படகுகள் ஆவசக்கரங்களால் அழிக்கப்பட்டன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72531

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 72

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 1 தெற்குப் பாஞ்சாலத்தின் தலைநகரான காம்பில்யத்தின் தெற்குவாயிலில் இருந்து கிளம்பிய ரதசாலை அரசகுலத்தின் மயானத்தைக் கடந்து வெவ்வேறு குலங்களுக்குரிய பன்னிரு பெருமயானங்களுக்கு அப்பால் சிறுபாதையாக மாறி கங்கையில் இறங்கிய சிற்றாறு ஒன்றின் நீர் ஊறி சதுப்பாகி கோரைப்புல் மண்டிக்கிடந்த தாழ்நிலத்தை அடைந்ததும் மறைந்தது. காற்று அலையடித்துச் சென்றுகொண்டிருந்த பொன்னிறமான புல்பரப்புக்குள் சேற்றில் பாதிப்பங்கு புதைந்து சற்றே சரிந்து அமைந்திருந்த சிறிய கற்கோயில் விண்ணிலிருந்து விழுந்ததுபோல நின்றது. அதன் மேல் பறவைகளின் எச்சம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68682

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 33

பகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 8 ] ஏழுநாட்கள் கங்கை வழியாக வணிகர்களின் படகில் பயணித்து துரோணர் பாஞ்சாலத்தின் தலைநகரமான காம்பில்யத்தை வந்தடைந்தார். உத்தரபதத்தில் இருந்து பெருகி அகன்று விரியத்தொடங்கிய கங்கை அங்கே மறுஎல்லை தெரியாத நீர்விரிவாக மாறியிருந்தது. அவர் ஏறிவந்த உமணர் படகு கங்கையில் சென்றுகொண்டிருந்த பெருங்கலங்களின் அருகே சென்றபோது அவற்றின் விலாக்கள் மலைப்பாறைகள் போல செங்குத்தாகத் தலைக்கும் மேல் எழுந்துமுற்றிலும் திசையை மறைத்தன. நூறு பாய்கள் எழுந்து புடைத்த கலங்கள் சினம் கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57151

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 37

பகுதி ஏழு : தழல்நீலம் [ 3 ] செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். மூன்று மாதகாலம் காட்டில் பெரும்பசியுடன் உண்டதனால் திரண்டுருவான கரிய உடலும் எரியும் சிறுவிழிகளும் தோளில் மூங்கில்வில்லும் அம்புமாக இளங்காலை வேளையில் அவன் நுழைந்த முதல் சிற்றூரின் பூசகன் திகைத்து எழுந்து நின்றான். மெல்லியதாடியும் மீசையும் கொண்ட முகமும் சிற்றிளம் முலைகளும் கொண்டிருந்த சிகண்டி அவனை நோக்கி ‘உணவு’ என ஆணையிட்டான். பன்றி உறுமல் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45029