Tag Archive: காமிகர்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44

[ 17 ] ஜராசந்தனும் பீமனும் காற்றில் சறுக்கி நழுவியிறங்குபவர்கள் போல மிகமெல்ல மற்களத்திற்குள் புகுந்து கால்களை நிலைமண்டியில் ஊன்றி கைகளை கடகபாகமாக விரித்து ஒருவர் உடல்மேல் ஒருவர் விழி ஊன்றியிருக்க அசையாமல் நின்றனர். புழுதியில் அடிமரம்போல் ஊன்றியிருந்தன நரம்போடிய கால்கள். இரையை முறுகப்பற்றி இறுக்கிக் கொண்டிருக்கும் மலைப்பாம்பு போலிருந்தன தசைகள். களிற்றேறின் முற்றிய திமில் என தோள்கள் சிலிர்த்தசைந்தன. காற்றில் இரைநோக்கும் நாகமுகங்கள் போல கைகள் மெல்ல துழாவின. தொடைகளில் இழுபட்ட வில்நாண். இடையில் இழுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87585

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43

[ 16 ] புலரி எழும் முதற்பொழுதிலேயே மகதமக்கள் ராஜகிருஹத்தின் பெரிய செண்டுவெளி நோக்கி வரத்தொடங்கினர். அன்று கருக்கிருட்டிலேயே பன்னிருநாட்களாக சரடறாது பெய்த மழை ஓய்ந்து காற்று வீசத்தொடங்கியது. கிளை சுழன்ற மரங்கள் இறுதித் துளிகளையும் உதிர்த்து தழைகொப்பளிக்க சீறின. விடியலில் இறுதிக் காற்றொன்று வந்து நகரை சுழற்றி எஞ்சிய நீர்த்துளிகளையும் அள்ளிச் சென்றது. தேன் நிறத்தில் விடிந்தது. நெடுநாட்களுக்குப்பிறகு பறவை ஒலிகளால் காலை விழவு கொண்டது. மழை நின்றபோது தாங்கள் இருந்த கனவிலிருந்து அறுபட்டு ஒவ்வொருவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87593

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 41

[ 12 ] நாகவேதம் முழங்கிக்கொண்டிருந்த வேள்விச்சாலையிலிருந்து பிறர் நோக்கை கலைக்காது எழுந்து வெளியே சென்ற ஜராசந்தனின் நடை மாறுபட்டிருப்பதை அனைவரும் கண்டனர். காமிகர் அவனுடன் பணிந்தபடியே ஓடி அருகணையாமல் ஆணைகளுக்காக செவி காத்தார். ஜராசந்தனின் வலத்தோள் எழுந்து வலக்கால் சேற்றில் அழுந்தப்பதிந்திருந்தது. குடைக்காரன் அவனை அணுக அஞ்சி அகலே நின்று தயங்க அவன் மழைப்பீலிகளை ஊடுருவி நடந்தான். சைத்யகத்தின் நாகதெய்வமான அர்ப்புதனின் ஆலயத்தின் முகப்பில் அவன் நின்று மூன்றுதலை நாகம் படமெடுத்த முடிசூடி நின்றிருந்த நாகதேவனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87550

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28

[ 9 ] ராஜகிருஹத்தில் ஜராசந்தன் தன் புலவர்அவையில் நூலாய்ந்துகொண்டிருக்கையில் ராஜசூய வேள்விக்காக இந்திரப்பிரஸ்தத்தில் கொடிஏறிய செய்தி வந்தடைந்தது. ஓசையற்ற காலடிகளுடன் அவனை அணுகிய அமைச்சர் காமிகர் மெல்ல குனிந்து செவியில் அச்செய்தியைச் சொல்ல முகத்திலும் விழிகளிலும் இருந்த புன்னகை சற்றும் நலுங்காமல் அதைக் கேட்டு தலையசைத்து அவர் செல்லலாம் என்று கைவிரித்தபின் எதிரே அமர்ந்திருந்த உசிநார நாட்டுப் புலவரிடம் “சோமரே, நந்தி என்று வெள்ளெருது ஏன் சொல்லப்படுகிறது?” என்றான். சோமர் “அது தன் அழகால் உள்ளத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87163