Tag Archive: காமம்

எம்.டி.எம் விளக்கம்

நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் ‘காமமும் சாத்வீகமும்’ என்ற பதிவில் என்னுடைய தொடர்புடையதும் தொடர்பற்றதுமான மூன்று டிவீட்டுகளை ஒன்றிணைத்து வாசகர் அனுப்பிய கடிதமொன்றிற்கு பதிலளித்திருப்பதை வாசித்தேன். அதில் உங்கள் கட்டுரைக்கு தொடர்புடையது முதல் ஆற்றல் (காமம்) சாத்வீக ஆற்றலாக அடையாளம் காணப்படவேண்டும் என்ற என்னுடைய டிவீட் மட்டுமே. எம் டி முத்துக்குமாரசாமி விளக்கம் http://mdmuthukumaraswamy.blogspot.in/2014/07/blog-post_25.html

Permanent link to this article: https://www.jeyamohan.in/58354

காமமும் சாத்வீகமும்

ஜெ, உங்கள் நண்பர் எம்.டி.முத்துக்குமார சாமி இப்படி எழுதியிருந்தார் ஜெயமோகனின் இந்தக் கட்டுரை (‘முதலாற்றல்’ http://www.jeyamohan.in/?p=5239 ) சாத்வீகத்தை முதலாற்றலாக அடையாளம் காணத் தவறுகிறது. சாத்வீகத்தின் ஆற்றலை பரிசோதிப்பதையே கலையும் வாழ்வுமாய் கொண்டவனுக்கு அந்தரங்கங்கள் ஏது? சாத்வீக கவிதைகளும் யாருக்கும் பிடிப்பதாக தெரியவில்லை; சாத்வீக உறுதிப்பாடு எடுத்தபின்பு எனக்கு வரும் விகடதுன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. உங்கள் கட்டுரை மீதான இவ்விமர்சனத்துக்கு என்ன பதில் சொல்வீர்க்ள்? கண்ணன் அன்புள்ள கண்ணன், எம்.டி.எம் என் நண்பர் என் கோணத்தில்தான். அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58206

அனல்காற்று எழும் காமம்

அன்புள்ள ஜெ, அனல்காற்றை வாசித்து முடித்து, அது என்னுள் நிகழ்த்திய ஊசலாட்டங்கள் நிதானத்திற்கு வருமுன்னரே இதோ இந்தக் கடிதத்தைத் தட்டச்சுகிறேன். நுட்பம்என்கிற சொல்லுக்கானப் பொருளை முழுதாய் உணர்ந்ததைப் போலுள்ளது. கதையில் வரும் இரு மையப் பாத்திரங்களின் மனதி ஆழத்தில் சென்று சிந்தித்ததையொத்த நுட்பத்தைப் பல இடங்களின் விவரிப்பில் காணமுடிந்து. ஏற்கனவே வந்த ஒரு கடிதத்தில் சொன்னது போல கூடுவிட்டுக் கூடுபாய்ந்து எழுதினீரோ என்று வியக்காமல் இருக்கமுடியவில்லை. இந்தக் கதையில் வருவன போன்ற நிகழ்வுகள், அதிதீவிர உணர்ச்சி பொங்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56398

காந்தி காமம் ஓஷோ

ஓஷோ தன் உரைகளில் மனதின் இரட்டை நிலைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் காந்தியை இழுக்கிறார் என்றே தோன்றுகிறது. மனம் நிச்சயமாக ஒருவழிப்பாதை இல்லை என்று ஏராளமான விளக்கங்களைக் கொடுத்துள்ளார். இந்தியாவின் பழமைவாத ஒழுக்கம் என்பது எப்பொழுதும் மனதின் ஒருவழிப்பாதையைப் பற்றி மட்டுமே பேசி வந்துள்ளது. ஒரே ஆணை வாழ்நாளெல்லாம் பூஜித்து வருவது, ஒருவனுக்கு ஒருத்தி, எத்தனையோ பொய் சொல்ல வேண்டிய தருணங்களிலும் வற்புறுத்தி உண்மையே பேசுவது, கோபம் பொத்துக்கொண்டு வரும் போதெல்லாம் அதை அடக்கி வைப்பது, சாந்தமாகப் பேச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27222

ஆலயங்களில் காமம்

அன்புள்ள அய்யா, கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும், குழப்பத்தையும் தருகிறது. இதன் மூலம் என்ன தெரிவிக்கிறார்கள்? கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தா மனம் அலைபாயும் இல்லீங்களா? பிறகு எப்பிடி முழு மனமும் தெய்வீகத்துல போகும். ஒரு வேளை காமமும் தெய்வீகம்னு சொல்ல வராங்களா? அப்பிடி இருந்தாலும், ரெண்டு பொண்ணுங்க மூணு ஆண்கள்னு இருக்கற சிற்பங்கள், அது எதை விளக்க வருது? இப்படிப்பட்ட சிற்பங்கள், வடக்கில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25629

ஜெயமோகனின் காடு:கரு. ஆறுமுகத்தமிழன்

  காமம் காமம் என்ப; காமம், அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின், முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே என்ற குறுந்தொகைப் (204 – குறிஞ்சித் திணை – மிளைப் பெருங்கந்தன்) பாட்டு ஒன்று ‘ ‘காடு ‘ ‘ புதினத்துக்குக் கட்டியம் கூறுவதாக முன்வைக்கப்படுகிறது. காமம் காமம் என்று சொல்கிறார்கள். காமம் என்பது அணங்கும் அன்று; பிணியும் அன்று. உள்ளும்போதெல்லாம் இன்பம் தருவதுதான் காமம். எதைப்போல என்றால், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/444