Tag Archive: காந்தி டுடே

வெறுப்பும் கனிவும்

  காந்தி டுடே இதழில் சுநீல்கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்தக்கட்டுரை காந்தியைப்பற்றி தொடர்ந்து காழ்ப்பாளர்கள் முன்வைத்துவரும் அவதூறுக்கான விரிவான பதில் வெறுப்பதும் கொந்தளிப்பதும் ஒன்றும் அத்தனை கடினமல்ல. ஆனால் உண்மையிலேயே அதற்கப்பால் செல்வதும், நேசிப்பதும் அத்தனை சுலபமல்ல என்ற வரியை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த உச்சம் வரை வந்துசேர சுனீல் கிருஷ்ணனின் தவம் அவருக்கு உதவியிருக்கிறது

Permanent link to this article: https://www.jeyamohan.in/81945

காந்தியின் சனாதனம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, காந்தியின் சனாதனம் கட்டுரைத் தொடர் மிக அருமை. இவ்விஷயங்களில் உள்ள மிக சிக்கலான உள்ளோட்டங்களை மிக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். குறிப்பாக மத அடிப்படைவாதம் பழமைவாதத்திற்கு எதிரானது என்பது எவ்வளவு பெரிய புரிதல். அதைப் படித்ததும் சிறிது அயர்ந்துவிட்டேன். காந்தி எவ்வளவு குறிப்பாக இதை அறிந்திருக்கிறார். இந்தக் கிழவர் வந்தது நமது நல்லூழ் ஒன்றே. நன்றி இ.ஆர்.சங்கரன் ஆசிரியருக்கு, மேலை நாடுகள் கிறித்துவ ஒற்றைத் தலைமையிடம் இருந்து விடுவித்துக் கொள்ளும் காலத்தில் அங்கும் மன்னர் ஆட்சி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26017

காந்தியின் சனாதனம்-5

இந்தியாவின் இன்றைய மையமான அரசியல் பண்பாட்டு விசைகளில் ஒன்றாக ஆகியிருக்கும் இந்து அடிப்படைவாதத்தின் விதைகள் எங்கிருந்து வந்தன? வழக்கமாக நம் மனதில் வருவது, இங்கிருந்த ஆசார இந்துமதத்தின் நம்பிக்கைகளிலும் சடங்குகளிலும்தான் அவை உள்ளன என்ற பதில்தான். காந்தியின் சனாதனம் பற்றி காந்தி டுடே இணைய இதழில் எழுதிவரும் கட்டுரையின் ஐந்தாம் பகுதி.

Permanent link to this article: https://www.jeyamohan.in/25995

காந்தியும் சனாதனமும்-1

கோராவின் வாதங்களை நான் முதலில் வாசித்தபோது அடைந்த அதே ஆழமான அதிர்ச்சியை காந்தி தன்னை ஒரு சனாதன இந்து என்று சொன்னதை வாசித்தபோதும் அடைந்தேன். ஏன் அவர் அதைச் சொன்னார். சனாதன என்ற சொல்லை அவர் கையாண்டதன் காரணம் என்ன? வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அதைச் சொன்னாரா? இல்லை அதற்கு அப்பால் செல்லும் ஆழமான சிந்தனை ஏதும் அவரிடமிருந்ததா? காந்தி டுடே இதழில் நான் எழுத ஆரம்பித்திருக்கும் நீள்கட்டுரை:  காந்தியும் சனாதனமும் – காந்தி டுடே

Permanent link to this article: https://www.jeyamohan.in/25923

காந்தியாயணம்

அன்புள்ள ஜெ, உங்கள் எண்ணங்களை ஒத்து ஒருவர் எழுதியிருக்கிறார். எதேச்சையாக வாசித்தேன். எஸ்.என்.நாகராஜனைப் பற்றிக்கூடக் கூறி இருக்கிறார். பார்க்க காந்தியாயணம் நேரம் கிடைக்கும்போது பார்க்கவும். சுநீல் கிருஷ்ணன் காந்தி டுடே

Permanent link to this article: https://www.jeyamohan.in/23781

காந்தியும் மேற்கும் -குகா

ராமச்சந்திர குகா அவரது தெளிவுக்காகவும் சுயநோக்குக்காகவும் நான் எப்போதுமே மதிக்கும் சிந்தனையாளர். அவர் எழுதிய ஒரு நல்ல கட்டுரையின் தமிழாக்கம் காந்தி டுடே இணைய இதழில் இந்தியாவின் வருங்கால அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய சந்திப்புக்காக 1931 ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் காந்தி.அங்கு ஒரு பத்திரிகையாளர் மேற்குலக நாகரீகத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று வினவினார் .அதற்கு காந்தி “அது ஒரு நல்ல யோசனை என்றே நான் எண்ணுகிறேன் ” என்றார் . சரளமாக மொழியாக்கம் செய்திருக்கிறார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21410