Tag Archive: காந்தியும் தலித் அரசியலும்

காந்தியும் தலித் அரசியலும் – 7

  October 9, 2009 – 12:03 am                                     7.  இரு நாயகர்கள் காந்தியையும் அம்பேத்காரையும் ஒப்பிட்டு குறைவாகவே ஆய்வுகள் வந்துள்ளன. பெரும்பாலான ஆய்வுகள் ஏதேனும் ஒருபக்கம் சாய்ந்தவை, மறுபக்கத்தை காண மறுப்பவை. சமீபகாலமாக மறுபக்கத்தை வசைபாடக்கூடிய ஆய்வுகள் அதிகமாக வந்துகோண்டிருக்கின்றன. காந்திதான் அதன் களப்பலி. அரசியல் உள்நோக்கத்தை தவிர்த்துப் பார்த்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4367/

காந்தியும் தலித் அரசியலும் – 6

6. இறந்தகாலத்தை மாற்றி எழுதுதல்   தலித்துக்கள் இன்று ஓர் அரசியல் சக்தியாக திரள்வதற்கு அச்சமூகத்தின் உள்ளே உள்ள பலநூறு சாதி ஏற்றத்தாழ்வுகளும் பேதங்களுமே காரணமாக இருக்கின்றன. அத்துடன் அரசியலில் இன்று உருவாகியிருக்கும் ஊழல் என்ற மாபெரும் தொற்றுநோய். ஆகவே அவர்கள் எண்ணும் இலக்குகள் வெகுதூரத்திலேயே உள்ளன.   தங்கள் இன்றைய நிலைக்குக் காரணமாக இறந்தகாலத்தில் வந்து நழுவிய ஒரு வாய்ப்பைச் சொல்லி ஆறுதல் செய்துகொள்வதற்காகவே பூனா ஒப்பந்தம் இன்று மிகைப்படுத்தப்படுகிறது. அந்த நோக்கத்துக்காக மொத்த இறந்தகாலமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4363/

காந்தியும் தலித் அரசியலும் – 5

காந்தியும் தலித் அரசியலும் 5 October 7, 2009 – 12:02 am5. உரிமை என்னும் அதிகாரச் சமநிலை     தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை குறித்து இன்று உருவாக்கப்படும் பிரமைகளில் கடைசியானது இந்திய தலித்துக்களின் வாழ்க்கையில் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியை உருவாக்கி அவர்களை எங்கோ கொண்டுபோயிருக்கக் கூடிய ஒரு மாபெரும் திட்டம் அது என்பதாகும். அதை காந்தி கெடுத்ததனாலேயே இன்றும் தாழ்த்தப்பட்டவர்கள் கீழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் படும் எல்லா துயரங்களுக்கும் காரணம் காந்தியே என்று சொல்ல அதுவே அடிப்படை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4354/

காந்தியும் தலித் அரசியலும் – 4

 காந்தியும் தலித் அரசியலும் 4   4. அதிகாரப்பகிர்வின் பின்னணி    பூனா ஒப்பந்தத்தைப்பற்றி இன்று பேசப்படும் பக்கம் பக்கமான பேச்சுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றின் வாதங்களை ஒவ்வொன்றாக மறுப்பதென்பது மணலை எண்ணி கணக்கிடுவதைப்போன்ற வீண்வேலை. பல ஆய்வுகள் ஏராளமான தரவுகள் கொண்டவை. ஆனால் அவற்றின் நோக்கம் முன்னரே வகுக்கப்பட்டிருக்கிறது. காந்தி அல்லது அம்பேத்காரின் உத்தேசங்களை  தங்கள் தேவைக்கு ஏற்ப முன்னரே தீர்மானித்துவிட்டு தரவுகளை அதன் அடிப்படையில் தொகுத்து வைத்து விளக்கம் அளிக்கும் முயற்சிகள் அவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4335/

காந்தியும் தலித் அரசியலும் – 3

3 வரலாறு வகுத்த மறுதரப்பு   அம்பேத்காரையும் காந்தியையும் குறித்த விவாதங்கள் எல்லாமே அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை ஒட்டியே இருப்பதென்பது கடந்த ஐம்பதாண்டுக்காலமாக உருவாக்கப்பட்ட அரசியல் சொல்லாடலின் விளைவே.  அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒப்புமையும் உறவும் இங்கே கவனிக்கப்பட்டதில்லை. காந்தியை சரிவரக் கவனிக்காதது போலவே அம்பேத்காரையும் சரியாக கவனிக்காமல் குத்துமதிப்பாகவே இந்த வாதகதிகள் முடையப்பட்டன     வரலாற்று எதிரியைக் கட்டமைத்தல்   வரலாறுகள் எல்லாமே முக்கால்நூற்றாண்டைத்தாண்டிவிட்ட இன்று அதற்குப்பின்ற பிறந்த தலைமுறையினரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4327/

காந்தியும் தலித் அரசியலும் – 2

 2.காந்தியின் வரலாற்றுப்பாத்திரம் பூனா ஒப்பந்தம் மற்றும் தலித் அரசியலைப்பற்றிபேசுவதற்கு முன்னர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பெரிய வரைவில் அந்த சந்தர்ப்பத்தைப் பொருத்திப் பார்க்கவேண்டும். இந்தியா என்ற பெருநிலத்தின் பற்பல பிரிவுகள் கொண்ட பலகோடி மக்களின் நலன்களுடன் சம்பந்தப்பட்டதாகவும் வல்லமை வாய்ந்த ஒரு பேரரசின் மகத்தான ராஜதந்திர விளையாட்டுக்களுடன் சம்பந்தமுள்ளதாகவும் அச்சித்திரத்தை அணுக வேண்டும். தலைவன் வருகை இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றைப் பார்த்தால் சுதந்திரம் குறித்த காங்கிரஸின் கருத்துக்கள் படிப்படியாக மாறிவருவதைப் பார்க்கலாம். 1885 ல் காங்கிரஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4311/

காந்தியும் தலித் அரசியலும் 1

திருவாளர் செயமோகன் அவர்களே, நீங்கள் காந்தியாரைப்பற்றி எழுதிய சப்பைக்கட்டுகளையும் மோடிமஸ்தான் வேலைகளையும் கவனித்து வருகிறேன். காந்தியார் இந்திய தலித்துக்களுக்கு இழைத்த அவமானத்தை வரலாறு குறித்து வைத்திருக்கிறது. இந்த பேராசான்,சட்டமாமேதை அம்பேத்கர் அவர்கள் விரிவாக பதிவுசெய்திருக்கிறார்கள். அதையெல்லாம் எந்த சக்தியாலும் மறைத்துவிட முடியாது. காந்தியார் தலித்துக்களுக்குச் செய்த கொடுமைகள் என்னென்ன?  அவர் தலித் ஒற்றுமை உருவாகிவந்ததை சீரழித்து தலித்துக்கள் ஒருகுடைக்கீழ் ஒரே சக்தியாகத் திரள்வதை தடுத்தார். அவரது முயற்சி இல்லாவிட்டால் தலித்துக்கள் இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ஆகியிருப்பார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4307/