Tag Archive: காந்தியின் கண்கள்

காந்தி இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் காந்தியின் கண்கள் படித்த பிறகு சத்திய சோதனை மீண்டும் படிக்கத் தொடங்கினேன். நீங்கள் சொல்வது மிகவும் சரி. இதை முன்பொரு முறை படித்ததாக நினைவு கூட இல்லை. காந்தி ஒவ்வொரு இடமாக சுற்றி அலைகிறார். வெளி உலகம் மற்றும் அவர் உள்ளுலகம் மெல்ல அவருக்குப் புரிபடுகிறது. ஒரு ஒழுக்க நெறி நோக்கிக் குவிகிற காந்தி பின்பு எப்படி படிப்படியாகக் கனிகிறார் என்று பார்ப்பது அவரது பரிணாம வளர்ச்சி தெரிகிறது. வியப்பாகவும் அதே நேரம் சாதரணமாகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31285

காந்தியின் கண்கள்

இருபது ரூபாய்க்கு விற்கப்படுவதனாலேயே காந்தியின் சுயசரிதையான சத்தியசோதனை பரவலாக அறியப்படும் நூலாக இருக்கிறது. எல்லாப் பள்ளிகளிலும் அதைத்தான் அடுக்கடுக்காக வாங்கிப் பரிசுகளாகக் கொடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர்கள் இளமையில் வாசித்த முதல் நூலாக அது திகழ்கிறது. அந்த வயதில் அவர்களிடம் அது ஆழமான செல்வாக்கை செலுத்துகிறது. இலட்சியவாழ்க்கை ஒன்றைப்பற்றிய இனிய கனவொன்றை நம் மனதில் உருவாக்கக்கூடிய வல்லமை அந்நூலுக்கு உண்டு பின்னர் நம் சூழலில் பரவி மிதக்கும் காந்திக்கு எதிரான அவதூறுகள் வசைகள் ஆகியவற்றால் மூடப்பட்டு அந்த இலட்சியவாதக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30923