Tag Archive: காந்திடுடே

இணையமும் நூல்களும்

இணையத்தில் வரும் எழுத்துக்களைப்பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வலைப்பூ எழுத்துக்கள் மிகமிகக் குறைந்துவிட்டன என்று சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் ஃபேஸ் புக் எழுத்தாளர்களாக ஆகிவிட்டனர். ஃபேஸ்புக்கில் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்றேன். பெரும்பாலும் விவாதத்தைக் கோரும் சுருக்கமான குறிப்புகள், கவன ஈர்ப்பு கருத்துக்கள் மட்டுமே என்றார்கள். அதில் உள்ள உடனடி எதிர்வினைதான் அவ்வெழுத்தை வடிவமைக்கும் தூண்டுதல் என்றனர். எழுதுபவர்கள் கொஞ்சநாள் அந்த எதிர்வினையை முழுமையாகவே கவனிக்காமலாகிவிடவேண்டும். எத்தனை வாசகர்கள் என்பதை முற்றிலுமாக உதாசீனம் செய்துவிடவேண்டும் என நான் சொல்வேன். சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48646

காந்தியின் சனாதனம்-6

இந்தியா இன்னும் அடிப்படைவாதத்தின் பிடியில் விழாமலிருக்கக் காரணம் இங்கே இந்துக்களிடமும் இஸ்லாமியரிடமும் காலங்காலமாக நிலவிவரும் ‘பழைமையான’ மானுட விழுமியங்கள்தான்.. சீர்திருத்தவாத தோற்றம் கொண்டுவரும் அடிப்படைவாதத்தை எதிர்த்து நிற்பது அந்த ஆற்றலே. அந்த விழுமியங்களின் அடையாளம் காந்தி. நிறைவுப்பகுதி

Permanent link to this article: https://www.jeyamohan.in/26015

காந்தியின் சனாதனம்-4

சீர்திருத்தவேகம் எங்கே தேசியவெறியாக இனவெறியாக உருவம் கொள்கிறது? நான் இவையனைத்திலும் இருக்கும் ஐரோப்பிய அம்சத்தையே பொதுவான காரணமாகக் கொள்வேன். அந்தக் காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய மைய ஓட்டச் சிந்தனை என்பது சில அடிப்படையான கூறுகளைக் கொண்டது. அதில் தேசியவெறியையும் இனவெறியையும் உருவாக்கும் சில ஆதாரமான மனநிலைகள் கலந்திருந்தன. ஒரு மாற்றானைக் கட்டமைத்து அவனைக்கொண்டு தன் சுயத்தை தொகுத்துக்கொள்ளும் போக்கு உள்ளுறைந்திருந்தது. காந்தி டுடே இதழில் எழுதும் கட்டுரையின் நான்காம்பகுதி

Permanent link to this article: https://www.jeyamohan.in/25947

காந்தியின் சனாதனம்-3

காந்தி எந்த அளவுக்குச் சனாதனி? சனாதன இந்துக்கள் என்று சொல்லப்படும் வரிசையில் காந்தியை எங்கே வைக்க முடியும்? இந்த வினாவுக்குப் பல கோணங்களில் பதில்கள் சொல்லப்பட்டுள்ளன. காந்தி தன்னை சனாதன இந்து என்று அவரே சொன்னதை அடிப்படையாகக் கொண்டு இந்திய முற்போக்கினரும் இந்து மரபின் எதிரிகளும் அவர்கள் சனாதன இந்துமதம் மீது சொல்லும் எல்லா குற்றச்சாட்டுக்களுக்கும் அவரை பாத்திரமாக்கி தங்கள் நோக்கங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். இன்னொருபக்கம் அவரை சனாதன இந்துமதத்தின் உண்மையான எதிரி என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25944

காந்தியின் சனாதனம்-2

காந்தி தன்னை சனாதன இந்து என்று சொன்னபோது ஏன் எனக்கு அதிர்ச்சியும் ஒவ்வாமையும் ஏற்பட்டது? அந்த வினாவிலிருந்துதான் இன்று நான் சிந்திக்க ஆரம்பிப்பேன். ஏனென்றால் நான் என்னை ஒரு ‘நவீன’ இந்து என எண்ணிக்கொண்டிருந்தேன். நவீன இந்துவாக இருப்பது கற்றோருக்குரிய இயல்பு என்றும், அதுவே சமகாலத்தன்மை கொண்டது என்றும் நம்பியிருந்தேன். காந்திடுடே இதழில் எழுதும் கட்டுரையின் இரண்டாம்பகுதி

Permanent link to this article: https://www.jeyamohan.in/25929