Tag Archive: காத்யாயனி

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 33

[ 9 ] பாலென நுரைபொங்கும் தூத்மதியே மிதிலையை அணைத்து ஓடிய முதன்மை ஆறு. ஜலதையும் பலானையும் கமலையும் ராத்வதியும் அதில் மலைச்சேற்று நிறங்களுடன் பெருகி வந்து இணைந்துகொண்டன. அங்கு எப்போதும் இளஞ்சேற்றின் நுரைமணம் இருந்தது. வடமேற்கே எழுந்த மலையடுக்குகளின் குளிர் ஊறிவந்த அந்த ஆறுகளின் பெருக்கால் மிதிலையின் அனைத்துச் சுவர்களும் எப்போதும் பனித்திருந்தன. அங்குள்ள மக்களின் விழிகளும் சொற்களும்கூட குளிர்ந்தவையே என்றனர் கவிஞர். மலையுருண்டு வந்த கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட உயரமற்ற கோட்டையால் சூழப்பட்டிருந்தது மிதிலை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89891/

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 32

[ 7 ] பிருஹதாரண்யகத்தில் மைத்ரேயி இளைய அறத்துணைவியாகவும் காத்யாயனியின் ஏவல்பெண்டாகவும் வாழத்தொடங்கினாள். இருபதாண்டுகளாக பிருஹதாரண்யகக் கல்விநிலை வளர்ந்து பேருருக்கொண்டிருந்தது. ஒவ்வொரு கிளையிலிருந்தும் பறவைச்செய்திகள் வழியாகவே தொடர்புகள் நிகழ்ந்தன. வரும்செல்வத்திற்கு கணக்குகள் வைத்துக்கொள்வதும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவற்றை முறையாக பகிர்ந்தளிப்பதும், ஒவ்வொருநாளுமென வந்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான பூசல்களுக்கும் மனக்குறைகளுக்கும் தீர்வுகாண்பதும் ஓர் அரசு நடத்துவதற்கிணையான செயல்களாக இருந்தன. அப்பொறுப்பை தன் எட்டு மாணவர்களுக்கும் நான்கு மைந்தர்களுக்குமாக பகிர்ந்தளித்திருந்தார் யாக்ஞவல்கியர். ஆயினும் இறுதியில் அவரே அனைவரும் ஏற்கும் முடிவை எடுத்தாகவேண்டியிருந்தமையால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89875/

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 31

[ 5 ] அங்கிரீசரின் மைந்தர் கர்கரின் கொடிவழிவந்த வாசக்னு முனிவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு தன் முன்னோரின் பெயரைக்கொண்டு கார்கி என்று பெயரிட்டார் வாசக்னு. அன்னையின் கருவிலிருந்து அவள் வெளிவந்ததுமே கருவறைக்குள் எழுந்த பெண்களின் சேர்ந்தொலி மகிழ்வாலானதல்ல என்று அவர் உணர்ந்தார். கண்களை மூடி தன் அகவிழியால் அவர் அக்குழவியை பார்த்துவிட்டார். எனவே வளைந்த முதுகும் குறுகிய கைகளும் அவரைவிதைபோல நீண்ட தலையுமாக கொண்டுவந்து காட்டப்பட்ட பெண்குழந்தையைக் கண்டு அவர் வியப்புறவில்லை. அதை அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89853/

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30

[ 3 ] பிருஹதாரண்யகத்தை நோக்கிச் சென்ற பாதை மரப்பட்டைகளும் கற்பாளங்களும் பதிக்கப்பட்ட வண்டித்தடமாக இருந்தது. “ஒரு வேதக்காட்டுக்கு வண்டித்தடம் இருப்பதை இப்போதுதான் காண்கிறேன்” என்று தருமன் சொன்னார். “ஆம், இக்காடு மட்டுமே அவ்வாறு அரசர்களால் முற்றிலும் பேணப்படுகிறது” என்றான் அவர்களை அழைத்துச்சென்ற வைரோசனன் என்னும் மாணவன். அவர்கள் அவனை அப்பாதையில் அமைந்த முதல் அன்னச்சாவடியில் கண்டனர். தாழ்ந்த மரக்கூரை கொண்ட மையக்குடிலைச்சுற்றி வழிப்போக்கர் ஓய்வெடுப்பதற்கான கொட்டகையும் கொண்ட அச்சாவடியை கீர்த்திமான் என்ற அந்தணனும் துணைவியும் நடத்திக்கொண்டிருந்தனர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89820/