Tag Archive: காண்டீபம்

வல்லவன் கை வில்

  வர்த்தமான மகாவீரர் என்னும் சொல்லும் அதனுடன் இணைந்த ஓவியமும் என் சிற்றிளமையில் எழுப்பிய திகைப்பை நினைவுகூர்கிறேன். உடையையும் துறந்து தானன்றி பிறிதின்றி அமர்ந்திருந்த மானுட வடிவம். வெல்வதற்கு இவ்வுலகில் இலக்குகள் அற்றது. அடைவதற்கு வெற்றிகளும் அறியாதது. ‘இறுதிவெற்றி என்பது தன்னைக் கடத்தலே. அதை அடைந்தவனே முழுமையான வீரன். அருகர்களன்றி பிறர் வீரர்கள் அல்ல என்பதே சமணம் தெளிந்த உண்மை’ என பின்னர் அறிந்தேன். யுலிஸஸும் ஹெர்குலிஸும் வெறும் வீரர்கள் மட்டும் அல்ல. அவர்கள் வென்றது அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85250

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74

பகுதி ஆறு : மாநகர் – 6 மாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்!” என்றான். செவிலி கண்களால் நகைத்துவிட்டு முன்னால் சென்று “வணங்குகிறேன் இளவரசி” என்றாள். சுபத்திரை வெண்பட்டாடை அணிந்து இளநீல பட்டை மேலாடையாக போட்டிருந்தாள். குறைவான அணிகளும் சற்றே கலைந்த குழலுமாக இருந்தாள். “மேலே வருவீர்கள் என்று எண்ணினேன்… காத்திருந்தபின் நானே வந்தேன்” என்றாள். “வரத்தான் எண்ணினேன். மைந்தருடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81127

‘வெண்முரசு’ – நூல் எட்டு- காண்டீபம்

வெண்முரசு நாவல் தொடரின் எட்டாவது நாவலாக காண்டீபம் என்னும் தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன். செப்டெம்பர் 15 அன்று வெளிவரத்தொடங்கும். அதன் கதைமையம் அர்ஜுனன். அவனுடைய பயணங்கள். எவ்வகை நாவலாக இருக்கும் என இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால் குழந்தைத்தன்மை கொண்ட மிகைகற்பனைகள் நிறைந்த ஒரு நாவலாக அமையவேண்டுமென விரும்புகிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/78237