Tag Archive: காண்டவம் நாவல்

காண்டவம் நாவல்

நான் எழுதும் விதம் நண்பர்களுக்குத் தெரியும். அதை அராஜகமான படைப்பூக்கம் என்றுதான் சொல்வேன். திட்டமிடுவது, தகவல்சேகரிப்பது என்பதெல்லாம் மானசீகமான தயாரிப்புகள் மட்டுமே. நாவல் எங்கோ ஒரு புள்ளியில் தற்செயலாக தொடங்கவேண்டும். அதுவே ஒரு கனவுபோல விரிந்து விரிந்து சென்று முடியவேண்டும். அவ்வாறு அகத்தூண்டல் கொண்டு நான் எழுதும் எல்லா நாவல்களும் அதற்கே உரிய ஒருங்கமைவை சில அத்தியாயங்களிலேயே கொண்டுவிடும். அது சிந்தனை அல்லது மேல்மனம் சார்ந்தது அல்ல. முழுக்கமுழுக்க ஆழ்மனம் சார்ந்தது. தன்னிச்சையானது. அதனாலேயே எழுதிமுடிக்கையில் நானே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75399