Tag Archive: காட்சன்

கதைகள் – கடிதங்கள்

காட்சன் அவர்களின் மொழி புரிந்து கொள்ள மூன்றுமுறை படிக்க வேண்டியிருந்தது.  ஜெ-வின் அத்தனை கதைகளையும் படித்திருந்தும் இந்த மொழி இன்னும் கடினமானதாகத்தான் இருந்தது. கதை க்ளைமாக்ஸ் வரை அருமை. ஒரு விஷயம், பல கோணம், பார்வையாளர் ஒருத்தி என தொடங்கிச் சென்ற கதை ஒரு பெரிய உச்சத்தில் முடிந்திருக்க வேண்டும். இன்னும் கதை வளர்ந்திருக்க வேண்டும். டபக்குன்னு முடிச்சிட்டாருன்னு தோணியது. அப்பாவின் குரல் எனக்கு தனிப்பட்ட முறையில் வலி நிறைந்த கதை. நம்மில் பெரும்பாலோர் கதை. நாயகனுடன் நம்மைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40995/

பூ, பரிசுத்தவான்கள் – கடிதங்கள்

அண்ணன்! விவாதத்தின் ஆரம்பமே அனல். எனினும் கற்றுக்கொள்ளுவதற்கு அதிகம் இருப்பதால் பொறுத்துக்கொள்ளலாம். உண்மைதான், பல வகைகளில் எழுத்து நமக்கு அறிமுகமான மொழியிலும் நடையிலும் களத்திலும் இருப்பது நமக்கு ஒரு அருகாமையைக் கொடுக்கும். உங்களோடு நான் ஒட்டிக்கொள்ளுவதற்கு அது ஒரு சிறப்புக் காரணம். எனினும் கொற்றவையின் தூய தமிழும், குமரி வட்டார வழக்குகள் தாண்டி உங்கள் எழுத்துக்கள் பயணம் செய்யும்போதும் பெற்றோருடன் வேகமாக நடக்க இயலாத குழந்தை ஓடி வந்து சேர்ந்துகொள்ளும் பரபரப்புடனே இருக்கிறேன். இம்மொழி கேட்டிராத ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40978/

நூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் – கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஐயா, அருள்திரு காட்சன் எழுதிய ‘பரிசுத்தவான்கள்’ ​​நெஞ்​சை ​தொட்டது. நி​னைவிலிருந்தபடி ​தொடர்ந்து உ​ரையாடக்கூடிய க​தை அது. இளம் ​நெஞ்​​சங்களின் ஆ​சைகள், விருப்பங்கள் ​பெரியவர்களால் சந்​தோஷத்​தோடு அனுமதிக்கப்பட்டு, கவனிக்கப்பட்டு மகிழத்தக்கன. ஆனால், தன்​னை பரிசுத்தமாக காட்டுவதற்காக இள​மொட்​டொன்றின் விருப்பத்​தை பறிக்கும் சமுதாயத்​தை படம் பிடித்துக் காட்டுகிறது க​தை. தன்​னை மற்றவர்க​ளைக் காட்டிலும் ஏதாவது ஒரு விதத்தில் உயர்வாக காட்டிக் ​கொள்ள, எண்ணிக் ​கொள்ள​வே மனிதன் விரும்புகிறான். உலகியல் விஷயங்க​ளைப் ​போல​வே ஆன்மீக விஷயங்களும் தற்​பெரு​மைக்கான, இறுமாப்புக்கான அளவு​கோல்களாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40976/

பரிசுத்தவான்கள் – ஒரு விவாதம்

Hi Jeyamohan Sir, I am an average reader of your blog. I read almost every one of your posts. I have read and liked almost all of the short stories by upcoming authors. When I read Parisuthavangal by Gatchan, I couldn’t help but feel a sense of anger. First of all, the language was difficult …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40881/

4. பரிசுத்தவான்கள் – காட்சன்

[மீண்டும் புதியவர்களின் கதைகள்] குழந்தைக்கு உணவு ஊட்டியபடி வாசலுக்கு வந்தேன். எங்கள் தெருவில் மினிபஸ் வருமென்றாலும் அந்த வேளையில் தெருவே அமைதலாயிருந்தது. எங்கள் தெருவே அப்படித்தான். வீட்டிற்கு பின்னால் ஒரு சிறிய சானல், அதைத்தாண்டினால் பேருந்து செல்லும் வழித்தடம். ஆகையினால் எல்லாரும் இறங்கி வீட்டின் பின்வாசல் வழியே செல்லவும், வீட்டிற்குள் நுழைந்துவிடவும் முடியும். பிள்ளை அழத்துவங்கிவிட்டான். வீட்டிற்கு திரும்பலாம் என்று நினைத்தபோதுதான் தெருவில் யாரோ ஓடுவதுபோல் இருந்தது. யாரு என்று பார்ப்பதற்குள் என்னை அவள் தாண்டிவிட்டிருந்தாள். “ஆ… …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40511/

காட்சன்

அருள்பணி. காட்சன் சாமுவேல் அருள் பணியில் நான்காம் தலைமுறையாக நான் பணியாற்றுவது கடவுள் அருளே.தற்செயலகவே பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பினைபெற்றேன். எனது பனை மரம் மீதான காதலை அவர்களே கூர்தீட்ட உதவினார்கள்.அதற்குப் பரிசாக, ஒரு பனைத்தொழிலாளி வேடமிட்டு எனது இறையியல் கல்லுரியின்உச்சபட்ச தேர்வாகிய “மாதிரி அருளுரையை” குருத்தோலை ஞாயிறு என்றதலைப்பில் வழங்கினேன். மார்த்தாண்டம் பனைத்தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் சார்பில் சுனமியால்பதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வும் மறு கட்டமைப்புகளும் செய்யும்பணியில் ஈடுபட்டிருந்தேன். பிற்பாடு மும்பையில் உள்ள லுத்தரன்திருச்சபையோடு இணைந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40718/

போதகரின் வலைப்பூ

எனக்கு மிகவும் பிடித்தமான பெயர்களில் ஒன்று காட்சன். [Godson] . எல்லா மனிதர்களும் அப்பெயருக்குப் பொருத்தமானவர்களே. மரபான பொருளில் அது மனிதகுமாரனையும் குறிக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு அப்பெயருள்ள இளைஞர் என்னை வந்து சந்தித்தார். அவர் அப்போது இறையியல் படித்து முடித்துவிட்டு கிறித்தவ அறக்கட்டளை ஒன்றால் நடத்தப்படும் பனைத்தொழில் பாதுகாப்பு அமைப்பு ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சர்ச்சில் கிறிஸ்துமஸ் உரை ஒன்றை நிகழ்த்துவதற்கான முதல்வரைவு ஒன்றை எழுதிக்கொண்டு வந்திருந்தார். அதைப் படித்து கருத்து சொல்லமுடியுமா என்று கேட்டார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/747/