Tag Archive: காடு

கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்

  காடு அமேசானில் வாங்க காடு வாங்க குட்டப்பனின் வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற ஆசை கொண்டதனாலேயே கிரிதரன் தன் வாழ்வை தொலைக்கிறான் என்கிற எண்ணம் வந்தபோது காலை தூக்க கனவிலிருந்து எழுந்தமர்ந்தேன். உண்மைதானா என்கிற எண்ணம் நாள் முழுவதும் தொடர்ந்தது. அப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது இஞ்சினியர் அய்யரையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். குட்டப்பனின் தெளிவு, எல்லாவற்றிற்கும் தீர்வு காணும் குணம், சோர்வேயறியாத உடல்பலம், எல்லோருக்கும் பயன்படும் அவன் சேவைகள் கண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126681/

காடு இரு கடிதங்கள்

    காடு அமேசானில் வாங்க காடு வாங்க ,அன்புள்ள ஜெ   வணக்கம். நான் மாதவி,   வயது 25. சில மாதங்களாக தங்கள் இலக்கியங்களை வாசித்து வருகிறேன். சமீபத்தில் தங்கள் காடு நாவலை முழுவதுமாக படித்தேன். பல நாட்களாக அதிலிருந்து மீள முடியவில்லை. கிரிதரன் போல நானும் முதலில் காடு கண்டு பயந்தேன். பின்பு காடு எனக்குள் மெல்ல விரிவடைய ஆரம்பித்தது.காடு என்பது குறுகிய எல்லைகளுக்குள் அடைக்க முடியாது,நம் மனமும் அப்படியே.   பருவ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126388/

காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி

காடு அமேசானில் வாங்க காடு வாங்க   இருவாசிப்புகளுக்கு இடைப்பட்ட காலம் கிட்டத்தட்ட நான்காண்டுகள். இந்த நான்காண்டுகளில் நிறைய புத்தகங்கள் வாசித்தாயிற்று. நிறைய எழுதியுமிருக்கிறேன். இடையில் நகர்ந்த காலங்களுக்குள் என்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள தோன்றுகிறது. பொதுவாக ஆழ்ந்த வாசிப்பு அல்லது தன்னை ஒப்புக்கொடுக்கும் வாசிப்பு நேரும்போதெல்லாம் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அல்லது பின்பக்கத்திலிருக்கும் வெற்றுத்தாளில் யார் யாருக்கு உறவு, அவர்களின் பெயர்கள், பிடித்தமான அல்லது கவனம் கோரும் பக்கங்கள் குறித்த பென்சில் குறிப்புகள் போன்றவற்றறை எழுதிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126386/

காதலைக் கடத்தல்

  அன்புள்ள ஜெயன் அவர்களுக்கு, நலமா? வீட்டில் அனைவரும் நலம் தானே? எங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26 வயது. நல்ல வேலை. நல்ல நண்பர்கள். ஆனால், ஒரு இழந்த காதல். வாழ்வின் மிகவும் குழப்பமான கட்டத்தில் இருப்பது போல் இருக்கிறது. நான் தற்போது வாசித்துகொண்டிருக்கும் ‘இரவு’ நாவலும் சரி, என்னை மிகவும் பாதித்த ‘காடு’, ‘அனல்காற்று’ நாவலிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21281/

காடு, நிலம், தத்துவம்

அன்புள்ள ஜெ., நலமாயிருக்கிறோம். இசையும் மொழி தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கம் தருகின்றன. நனி நன்றி. கடந்த இரு மாதங்களாகத் தங்கள் எழுத்துக்களுடன் அல்லது தங்கள் எழுத்துக்கள் வழி உங்கள் அகத்துடன் நான் கொண்டிருக்கும் தொடர்பு அற்புதமான ஒன்று. ஏப்ரல் இறுதியில் ”காடு” படித்தேன். இன்னமும் அந்த ‘வறனுறல் அறியாச் சோலை’யை விட்டு நான் வெளியே வந்ததாகத் தெரியவில்லை. மிக நுட்பமாக என் மனத்தையே ஒரு பெருங்காடாக விரித்துக் கொடுத்த வியத்தகு பனுவல் அது. அதன் பாயிரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99910/

காடு– ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்களது ‘காடு’ நாவலை இரண்டாவது முறையாக, ரசித்து வாசித்து முடித்தேன். முதல் முறை படித்த போது காட்டிற்குள் வழி தவறி வெளியே வந்தால் போதும் என்றாகி விட்டது. மனதிற்குள் எப்பொழுதும் உங்களுடன் விவாதித்து கொண்டு தான் இருக்கிறேன். வாசகன் ஒரு எழுத்தாளருக்கு கடிதம் எழுதுவது போல் தர்மசங்கடம் ஏதும் இல்லை. கிரிதரன் நாவல் முழுதும் ஒரு இடத்தில் கூட, நான் உன்னை காதலிக்கிறேன் என்று நீலியிடம் சொல்லவில்லை. என்னுடைய மிகக்குறைந்த வாசிப்பனுபவத்தில் இந்தளவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97324/

காடு – பிரசன்னா

  நாவலைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டுவிட்டதால் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ஒரு இழையை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன் – சடுதியில் முடிந்துவிடும் வாழ்க்கை, அதன் நிலையாமை, உண்மையில் இந்த அம்சத்தை இப்பொதெல்லாம் நான் காணும், படிக்கும் அத்தனை விஷயங்களிலும் பாம்புத்தொடுகை போல் உடனே பிடித்துவிடுகிறேன் அல்லது அதை மட்டும் அதீதமாக கவனிக்கிறேன்.   ‘அவ்வளவேதானா இளமை?’ என்பது போல் அவ்வளவேதானா வாழ்க்கை என்று ஒவ்வொரு தினமும் தவிப்படைகிறேன். அப்படி கேட்டுக்கொள்ளாதவர்கள் யார் என கதையில் வருகிறது. இருந்தாலும் முப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94788/

என்னை வாசிக்கத் தொடங்குதல்

  அன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது எழுத்துக்களை வாசிக்கவில்லை. ஆனால் நாற்பது வயதைக்கடந்த பின்னால்தான் சிறிதுசிறிதாக உங்களது எழுத்துக்களை வாசிக்கத்தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு எழுத்துக்களும் எனக்குள்இருந்த,இருக்கிற சந்தேகங்களை தீர்ப்பது போல இருக்கிறது. அதனால் உங்களது நாவல்களைப் படிப்பது என்று இருக்கிறேன் .ஆனால் எதனை முதல்வாசிப்பது என்று யோசிக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80644/

அகக்காடு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், ‘காடு’ நாவல் வாசிப்பின் அனுபவத்தை நான் பின்வருமாறு தொகுத்துள்ளேன். ‘காடு’ நாவல் படிக்க ஆரம்பித்ததுமே மிளா என்ற பெயர் என்னை வசீகரித்து உள் இழுத்தது. மிளா என்ற ஒரு விலங்கின் பெயரை முதன் முதலாகக் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு அத்தியாயமாகப் படிக்கப் படிக்க காடு எனக்குள் விரிந்து கொண்டே சென்றது. காட்டிற்குள் என்னை இழுத்துச் சென்று வீசியது காஞ்சிர மரம் மற்றும் அதில் வாழ்ந்த வன நீலியின் கதை. அந்த அத்தியாயம் ஒரு அடர்த்தியான, கனமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78965/

காடு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், அன்றும் இன்றும் என்னை ஈர்ப்பது காடு நாவலின் சூழல்தான். அயனி மரம், மிளா, வேங்கை மரம், பாறை, குட்டப்பன், சிநேகம்மை, ஜோடி எருமை, தேவாங்கு, நீலி…. இப்படி சூழலிலிருந்து ஒரு விலகல் என்னிடம் இல்லை. என்னை உள்ளிழுப்பதாகவும், நான் விரும்பி உள் நுழைவதாகவும் உள்ளது. மறு பக்கம் நகர்- கிரியின் அம்மா, அப்பா, மாமா, வேணி, மாமி, போத்தி, கண்டன் புலையன், அம்பிகா அக்கா….நாவல் நிகர் வாழ்க்கைதானே! நாவலின் பல இடங்கள் பக்கம் புரளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78346/

Older posts «