Tag Archive: காஞ்சனதுவஜன்

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 66

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 2 கர்ணன் காலையில் துரியோதனனின் மாளிகைக்குச் சென்றபோது கூடத்தில் சுபாகுவும் ஜலகந்தனும் அமர்ந்திருந்தனர். அவனைக்கண்டதும் எழுந்து வணங்கி “மூத்தவர் படைக்கலச்சாலையில் இருக்கிறார் மூத்தவரே” என்றனர். “அழைத்துச்செல்லுங்கள்” என்றான் கர்ணன். அவர்கள் அவனை அழைத்துச்செல்லும்போது மெல்லிய புன்னகையுடன் “நெடுநாட்களுக்குப் பின்னர் கதாயுதத்தை கையில் எடுக்கிறார் இல்லையா?” என்றான். “ஆம், மூத்தவரே. அவருக்கு என்ன ஆயிற்று என்றே எங்களுக்கு அச்சமாக இருந்தது. குடிப்பதும் உறங்குவதுமன்றி எதையுமே அவர் நீணாளாகச் செய்யவில்லை. இப்போது மீண்டுவிட்டார்.” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67278

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41

பகுதி ஏழு : கலிங்கபுரி [ 5 ] மூத்தயானையாகிய காலகீர்த்தி நோயுற்றிருப்பதாகவும் பீமன் அங்கே சென்றிருப்பதாகவும் மாலினி சொன்னதைக் கேட்ட அர்ஜுனன் அவளிடம் கிருபரின் ஆயுதசாலைக்குச் செல்வதாக சொல்லிவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டதும் “வடக்குவாயிலுக்கு” என்றான். “இளவரசே…” என்றான் ரதமோட்டி. “வடக்குவாயிலுக்கு…” என்று அர்ஜுனன் மீண்டும் சொன்னதும் அவன் தலைவணங்கி ரதத்தைக் கிளப்பினான். அர்ஜுனன் பீடத்தில் நின்றபடி தெருக்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். காவல்மாடங்கள் முன்னால் ஆயர்பெண்களுடன் சொல்லாடிக்கொண்டு நின்ற வீரர்கள் ரதத்தை வியப்புடன் திரும்பிப்பார்த்தனர். ரதம் அரண்மனையின் கிழக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57437

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16

பகுதி நான்கு : வெற்றித்திருநகர் [ 1 ] இருள்வேழங்கள் என எழுந்து நின்ற மூன்று மலைப்பாறைகள் சூழ்ந்த காட்டுக்கு காளஹஸ்தி என்று பெயர். அங்கே சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் நிறுவப்பட்ட சின்னஞ்சிறிய சிவக்குறியை வழிபட சித்தம் பாதமாகி அலைந்துதிரியும் இடநெறிச் சிவப்படிவர்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தனர். ஒருவேளை இரந்துண்டு, மயானங்களில் தங்கி, இல்லறத்தோர் மெய்தீண்டாது, சிவமன்றி சொல்லறியாது சென்றுகொண்டிருக்கும் அவர்களுக்கு பாரதவர்ஷம் முழுக்க நூற்றெட்டு மறைத்தலங்கள் இருந்தன. தென்னகத்தில் அண்ணாமலைக்குச் சென்றபின் அவர்கள் காஞ்சிக்குள் நுழையாமல் காளஹஸ்திக்குச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56448