Tag Archive: காசி

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-3

முஞ்சவானின் உச்சிமுனையில் சிவக்குறியருகே ஊழ்கத்தில் அமர்ந்திருந்த யமன் அந்தச் சிறகொலி கேட்டு விழிதிறந்து சினத்துடன் எழுந்தார். அவர் அருகே இருட்குவையெனக் கிடந்த எருமை விழிமணிகள் மின்ன முக்ரையோசை எழுப்பி தலைகுனித்து பாய்ந்தது. நாரதர் தன் வீணையை மீட்டியபடி அசையாமல் நின்றிருந்தார். அந்த இசையைக் கேட்டு மெல்ல விசையழிந்து தலை தாழ்த்தி அமைதி கொண்டது எருமை. சினம் தணிந்த யமன் “நாரதரே, நீர் ஏன் இங்கு வந்தீர்? என் தவம் முழுமைகொள்வதை தடுக்கிறீர். விலகிச்செல்க!” என்றார். நாரதர் “உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107441

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 1 திருஷ்டத்யும்னன் புரவியை இழுத்து சற்றே முகம் திருப்பி தொலைவில் விடிகாலையின் ஒளியற்ற ஒளியில் எழுந்து தெரிந்த துவாரகையின் பெருவாயிலை நோக்கினான். அதன் குவைவளைவின் நடுவே மாபெரும் கருடக்கொடி தளிரிலைபோல படபடத்துக் கொண்டிருந்தது. அதன் நீள்அரைவட்டம் வெட்டி எடுத்த வான்துண்டு நிலைஆடி போல தெரிந்தது. எதையும் காட்டாத ஆடி. ஒவ்வொருமுறையும் போல அவன் அக்காட்சியில் தன்னை இழந்து அங்கு நின்றிருந்தான். கடிவாளம் இழுக்கப்பட்ட குதிரை தலையைத் திருப்பி மூக்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76793

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 37

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 3 துவாரகையிலிருந்து கிளம்பி தேர்களிலும் பின் படகுகளிலும் பயணம் செய்து ஐந்தே நாட்களில் மதுராவை வந்தடைந்தனர். பயணம் முழுக்க அக்ரூரர் தன் தாக்குதலுக்கான திட்டங்களை வகுத்து பறவைச் செய்திகளாக மதுராவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். மதுராவில் பலராமர் இல்லை, அஸ்தினபுரியில் துரியோதனனுக்கு கதாயுதப் பயிற்சி கொடுக்கும் பொருட்டு சென்றவர் அங்கிருந்து அவனுடன் காட்டுக்குச் சென்றுவிட்டதாக செய்தி வந்திருந்தது. எங்கிருக்கிறார் என்பதை முறையாகத்தெரிவிக்கும் இயல்பு அவருக்கு இல்லை என்பது அனைவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76633

வடகிழக்கு- ஒரு கடிதம்

அன்பிற்கினிய ஆசிரியருக்கு, நாகர்கோயில் சென்று சேர்ந்துவிட்டீர்கள் என்று தெரிந்துகொண்டேன். மேகாலயாவைப்பற்றி சில தகவல்கள் தங்களுடன் பகிர எண்ணுகிறேன். மேகாலயா ஒரு சுவாரசியமான மாநிலம். அங்குள்ள மூன்று வாசிகளான காசி, ஜைந்தியா மற்றும் காரோக்கள் அவரவர் பாணியில் வேறுபட்டவர்கள். இதில் காசி மற்றும் ஜைந்தியா குழுவினர் கிட்டத்தட்ட தங்கைகள் என்று கூறலாம். பெண் கொடுத்து எடுக்கும் வழக்கம் கூட எளியதே. காசி இனத்தவர்கள் எண்ணிக்கையில் பத்து லட்சமாக இருப்பார்கள் ( மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை முப்பத்தைந்து லட்சம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72240

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 53

பகுதி பத்து : அனல்வெள்ளம் [ 6 ] விதுரன் சத்யவதியின் அறைக்குள் நுழைந்து தலைவணங்கினான். சத்யவதி கைகாட்டியதும் சியாமை கதவைமூடிவிட்டு வெளியே சென்றாள். “அமர்ந்துகொள், களைத்திருக்கிறாய்” என்றாள் சத்யவதி. விதுரன் பீடத்தில் அமர்ந்துகொண்டு “ஆம், காலைமுதல் வெளியேதான் இருக்கிறேன்” என்றான். “சகுனியின் படையும் பரிவாரங்களும் அமைந்துவிட்டனரா?” என்றாள் சத்யவதி. “அவர்கள் கூட்டமாக புராணகங்கைக்குள் புகுந்து குடில்களை அமைத்துக்கொண்டே முன்னேறி நெடுந்தூரம் சென்றுவிட்டனர். இப்போது நம் வடக்குவாயிலில் ஏறி நின்றால் அப்பால் நகருக்கு ஒரு சிறகு முளைத்திருப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48517

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28

பகுதி ஆறு : தீச்சாரல் [ 2 ] காலையொளி நீரில்விரியும் வரை பீஷ்மர் தாராவாஹினியின் கரையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தார். ஹரிசேனன் பலமுறை சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது. நீரில் விண்மீன்கள் இடம் மாறின. விடிவெள்ளி உதித்து செவ்வொளியுடன் அலைகளில் ஆடியது. காலையில் அஸ்தினபுரியில் இருந்து தூதன் குதிரையில் வந்து சேர்ந்தான். குடில்முற்றத்தில் வேங்கைமரத்தடியில் அவன் நின்றான். ஹரிசேனன் ஏதும் கேட்கவிருக்கவில்லை. பீஷ்மர் அருகே சென்று நின்றுகொண்டான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44579

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10

பகுதி மூன்று : எரியிதழ் [1] காசியில் வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்திருந்த படித்துறையில் அந்தியில் ஏழுதிரிகள் கொண்ட விளக்கின் முன் அமர்ந்து சூதர்கள் கிணையும் யாழும் மீட்டிப் பாடினர். எதிரே காசிமன்னன் பீமதேவனின் மூன்று இளவரசிகளும் அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்தனர். செந்நிற ஆடையும் செவ்வரியோடிய பெரிய விழிகளும் கொண்டவள் அம்பை. நீலநிற ஆடையணிந்த மின்னும் கரியநிறத்தில் இருந்தவள் அம்பிகை. வெண்ணிற ஆடையணிந்து மெல்லிய உடல்கொண்டவள் அம்பாலிகை. முக்குணங்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44027

புறப்பாடு II – 9, காலரூபம்

காசியில் ஒரு படகில் ஏறி மறுகரையில் இருக்கும் காசிமன்னரின் அரண்மனைக்குச் சென்றேன். படகில் நான்மட்டும்தான் போகப்போகிறேன் என்ற பிரமையில் இருந்தேன். சின்ன படகுதான். ஆனால் அந்த குகா இளைஞன் தொடர்ந்து ஆட்களை கூவிக்கூவி ஏற்றிக்கொண்டிருந்தான். ஒருகட்டத்தில் படகின் விளிம்புக்கும் நீருக்குமான இடைவெளி நான்கு இஞ்ச்தான் இருந்தது. ஒரு மார்வாடி குண்டு மனிதர் ஏறியபோது என்பக்கம் படகு மேலெழுந்து அவர் அருகே நீர் உள்ளே கொட்டியது. இறங்கிவிடலாமா என்று நினைத்தேன். அதற்குள் அவன் மோட்டாரை இணைத்திருந்த கயிற்றைப்பிடித்து இழுத்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40010

பயணம் இருகடிதங்கள்

அன்புள்ள ஜெ, என்னுடைய காசிப் பயணத்தின் போது உங்களோடு உரையாடியது பின் இப்போதுதான் உரையாடுகிறேன்.அங்கே சடங்குகளில் மாட்டிக்கொண்டு தத்தளிப்பவர்களை பக்தி ஏஜெண்ட்கள் அழகாகக் கையாள்கிறார்கள்.அனைத்துத் தவறுகளும் அரங்கேறுகிறது.ஆனால் கங்கையின் முன்பு நிற்கும்போது என்னையே மறந்துவிட்டேன்.அதில் மிதந்து செல்லும் படகுகளைக் காணும் பொழுது கிருஷ்ணார்ஜுனர்களும்,துறவிகளும் கடந்த நதி, நம் பெரும் வரலாறு அதன் முன்பு எழுதப்பட்டது என்று நினைக்கும் போதே ஒரு பெருமிதம்.காசியின் சின்ன வீதிகளில் அவ்வளவு நெரிசலிலும் ஏதோ ஒரு ஒழுங்கு இருந்தது.எரியும் பிணங்கள் அவ்வுடல்களை மட்டுமல்லாது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37329

காசி

அன்புள்ள ஜெ. நான் 2011 பிப்ரவரி 18 அன்று உங்களின் பார்வதிபுரவீட்டில் என் மாமாவோடு வந்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அந்தசந்திப்பு என்னை மேலும் தீவிர இளைஞனாக மாற்றியது என்று சொல்லலாம். ஒருஇலக்கியவாதியின் சந்திப்பு அதைத்தான் செய்ய வேண்டும். தமிழ் இலக்கிய காலவரையறைகளைப் பற்றி நீண்டது நம் உரையாடல். பல திறப்புகளை அன்று முன்வைத்தீர்கள். பின் தங்களின் ‘சங்கச் சித்திரங்கள்’ புத்தகத்தைக் கொடுத்துப்படிக்கச் சொன்னீர்கள். இவை அனைத்தையும் என் அறிமுகத்திற்காகசொல்லியுள்ளேன். மன்னிக்கவும்.   நான் வரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31155