Tag Archive: கவிஞர் அபி

இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்

    கவிஞர் அபிக்கு 2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி வெளியிடப்படும் விமர்சன நூல் இரவிலிநெடுயுகம். விஷ்ணுபுரம் இலக்கியவட்ட வெளியீடு இது     முன்னுரை கவிஞர் அபி அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுவதை ஒட்டி இந்த நூல் வெளியிடப்படுகிறது. அபி தமிழ்க்கவிதையில் அருவக்கவிதையின் முன்னோடி என்ற கூறலாம். அகவயமான உணர்வுகளையும் தரிசனங்களையும் புறவயக் காட்சித்தர்க்கம் அற்ற படிமங்களினூடாக வெளிப்படுத்திய கவிஞர் அவர். இலக்கிய முன்னோடிகளை மதிப்புறுத்தும் நோக்குடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128310/

அபியின் அருவக் கவியுலகு-5

பகுதி ஐந்து- அறாவிழிப்பு அபியின் கவிதைகளின் முதன்மையான பலவீனம் ஒன்றைச்சுட்டி இக்கட்டுரையை முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். ஒரே ஒரு மையப்புள்ளியைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் எய்யப்படும் அம்புகள்அவை என்பதே அவற்றின் பலவீனம். அந்த மையப்புள்ளி தவிர பிற திசைதிரும்புதல்கள் இல்லை. பொருளற்ற முயற்சிகள், சரிவுகள் மிகவும் குறைவு என்பதும் அப்புள்ளியைத் தீண்டும்போதெல்லாம் அவர் கவிதைகள் சிறந்த மொழிநிகழ்வுகள், மெய்மையறிதல்கள் ஆகின்றன என்பதும் உண்மையே. ஆயினும் கவிதை என்பது தியானம் மட்டுமல்ல. கவிஞன் என்பவன் யோகி மட்டுமல்ல. அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127847/

அபியின் அருவக் கவியுலகு-4

அபியின் அருவக் கவியுலகு-1 அபியின் அருவக் கவியுலகு-2 அபியின் அருவக் கவியுலகு-3 பகுதி நான்கு- மெத்திடும் மாலை   தமிழிலக்கியத்தில் அபியை முக்கியமானவராக ஆக்கும் இரண்டு சாதனைகள் தன் கவிவாழ்வின் பிற்பகுதியில் அவர் எழுதிய இரு கவிதை வரிசைகளான காலம், மாலை ஆகியவை. இவற்றில் காலம் ஒரு தொடக்க முயற்சியாக பல பகுதிகள் கொண்ட ஒரு நீள்கவிதைத் தன்மையுடன் உள்ளது. மாலை ஒரு வகையான நவீன காவியம்.   தத்துவம், அறிவியல், இலக்கியம் ஆகிய மூன்றிலும் எப்போதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127843/

அபியின் அருவக் கவியுலகு-3

  பகுதி மூன்று -இரவிலி நெடுயுகம்   அபியின் கவிதைகளின் முழுத்தொகுப்பு 2003ல் கலைஞன் பதிப்பகத்தால் (பிரம்மராஜனின்  முன்னுரையுடன்) வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் அபி தன்னுடைய தொடக்க காலக்கவிதைகளில் பெரும்பாலானவற்றை நிராகரித்திருப்பது காணக்கிடைக்கிறது. அவரது முதல் தொகுதியான “மெனத்தின் நாவுகள்’ தொகுப்பிலிருந்து ஒருசிலகவிதைகள் இறுதியில்தரப்பட்டுள்ளன. அவ்வகையில் இக்கட்டுரையின் முதல் பகுதியில் நான் எழுதிய விமரிசனம் காலத்தின்ஒரு பகுதியாக நிற்கவேண்டிய ஒன்றுமட்டுமேயாகும். நாளை அக்கவிதைகள் வாசகனுக்கு கிடைக்காமலே ஆகக்கூடும்.தமிழின் அருவக் கவிதையின்தலைசிறந்த மாதிரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது அபியின் இக்கவியுலகம்   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127840/

‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்

  2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் அபி குறித்த ஆவணப்படம். விஷ்ணுபுரம் விழாவில் இது வெளியிடப்படும். பின்னர் யூடியூபில் வெளியாகும்.   ஒளிப்பதிவு – பிரகாஷ் அருண் படத்தொகுப்பு – குமரேசன் படத்தொகுப்பு மேற்பார்வை – மனோகரன் ஒலிப்பதிவு – சுஜீத் ஹைதர் ஒலிப்பதிவுகூடம் – ஆக்டேவ்ஸ் வரைச்சித்திரம் – ஹாசிஃப் கான்   தயாரிப்பு& தொழில்நுட்ப ஆலோசனை – குரல் – ராஜா சந்திரசேகர்   இசை  ராஜன் சோமசுந்தரம்   இயக்கம் கே.பி.வினோத்குமார்    

Permanent link to this article: https://www.jeyamohan.in/128259/

அபியின் அருவக் கவியுலகு-2

அபியின் அருவக் கவியுலகு-1 பகுதி இரண்டு: யாருடையதென்றிலாத சோகம்   அபியின் இரண்டாம் கட்டத்தில் அவரது கவியுலகில் அருவமான படிமங்கள் செறிவான மொழியில் வெளிப்படுகின்றன. அதேசமயம் மிக அரிதாகவும் அவை உள்ளன. அலங்காரங்களும், செயற்கையான ஒலி அழகுகளும் முற்றாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன உண்மையான அனுபவப் பின்புலம் உடையதாகவும் உள்ளன   உறக்கங்களுக்குள் ஒளிக்கனவுகளுக்காய் பதுங்கிய பகலைத் தேடுகின்றதோ   என்று முந்தைய காலகட்டத்தில் எழுதிய அதே அருவமான அனுபவ நிலையையே   என்றைக்குமில்லாமல் இன்று பின்னணி ஓசைகள் இன்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127807/

அபியின் அருவக் கவியுலகு-1

பகுதி ஒன்று: காலொடிந்த நிமிடம்   கவிதையைப் பொறுத்தவரை முடிவே சாத்தியமில்லாத வினாக்கள் சில உண்டு.இலக்கியத்தின் பிற வடிவங்களில் உள்ள கவித்துவத்திற்கும் கவிதை எனும் வடிவத்தில் உள்ள கவித்துவத்துக்கும் என்ன வேறுபாடு? கவிதையின் வடிவத்துக்கும் அதன் சாரத்துக்கும் இடையே என்ன உறவு?(அதாவது வடிவமே கவிதை என்பது எத்த னை தூரம் உண்மை?) கவிதைக்கும் கருத்தியலுக்கும் இடையேயான உறவு என்ன? கவிதைக்கும் இசைக்குமான பொருத்தம் எப்படிப்பட்டது? கவிதைக்கும் சமகாலத்து சிந்தனையோட்டங்களுக்கும் இடையே உள்ள உறவு என்ன? ஒரு கவிதையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127805/

மகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு

  ஒன்று வட்டத்தின் சுழற்சியில் நடுவே தோன்றி வளர்ந்தது பேரொளி   அதற்குப் பேச்சுவரவில்லை சைகைகளும் இல்லை எனினும் அதனிடம் அடக்கமாய் வீற்றிருந்தது நோக்கமற்று ஒரு மகத்துவம்.   அபி. கேதார்நாத் நோக்கிய பயணத்தில், குளிர்காலை ஒன்றினில், இமயச்சரிவில் பசுமை வழிந்திருந்த கிராமம் ஒன்றின் மேட்டிலிருந்த மையச்சாலையோர தேநீர்க்கடையில் நின்றிருந்தேன். தூரத்து மலைவளைவின் சரிவுகளின் கிராமத்துப் பாதை வழியே மேலேறிக் கொண்டிருக்கும் பசுக்கூட்டம். காண்பவற்றை வெள்ளைக் கொசுவலைக்குள் நின்று காணும் காட்சியென மாற்றும் வெண்பனிப் புகைசூழ்கை, பின்புலச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127934/

அபி: ‘காலத்தின் மீது விழும் மெல்லிய வெயில்’ – யாழன் ஆதி

  வாழ்வின்மீதான அனுமானங்களில் எப்போதும் ஓர் ஏக்கத்தொனியோடுதான் படைப்புகள் தன்னளவில் உருக்கொள்கின்றன. குறிப்பாக மொழி மனித மனத்தின் தேடல்களை அதன் ஒளிவுமறைவுகளில் எப்போதும் ஒரு சுண்டெலியைப் போலவே சுரண்டிக்கொண்டிருக்கிறது. மொழியின்மீதான அவதானமும் அது தரும் நம்பிக்கையின் பேரொளியும் ஓர் ஆக்கவாளியைத் தொடர்ந்து அவர்போக்கில் இயங்கவைக்கிறது. ஓர் ஓவியர் தனக்கான வெளியை எங்கிருந்து உருவாக்குகிறார். ஒரு புனைவுக்காரர் தனக்கான ஆக்கத்திற்கான ஜீவனை எதிலிருந்து பிடுங்கிக்கொள்கிறார். எத்தகைய நல்லவை அணில்கள் தங்கும் இந்தக் கிளைகள் என்னும் சொற்றொடரின் இருப்பில் என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127232/

நீ எனும் தற்சுட்டு- அபி கவிதைகள் பற்றி…. இசை

வணக்கம், இத்துடன் எனது அபி கவிதைகள் குறித்த கட்டுரையின் தமிழினியின் இணைப்பை இணைத்துள்ளேன். தங்கள் தளத்தில் சுட்டியை பகிரலாம். கட்டுரை குறித்த நண்பர்களின் சொற்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. எழுதச் செய்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி !   இசை   அன்புள்ள இசை,   சிறந்த கட்டுரை. உங்கள் இயல்பான மென்னகையுடன், தனித்துவமான அவதானிப்புகளுடன்   நன்றி   ஜெ   “அரூபக் கவிஞர்” என்று பெயர் பெற்றவர் அபி. ரூபம் தான் அரூபமாகிறது. அபியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127240/

Older posts «