Tag Archive: கல்பற்றா நாராயணன்

நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?

  நெடுஞ்சாலைப் புத்தர்  நேற்று நான் நெடுஞ்சாலையைக் குறுக்கே கடக்கும் புத்தனைக்கண்டேன் சாயங்காலப் பரபரப்பில் கடக்க முடியாமல் இப்பக்கம் வெகுநேரமாக நின்றிருந்தேன் ஐம்பதோ அறுபதோ எழுபதோ வருடம் நீளமுள்ள வாழ்வில் எப்படிப் பார்த்தாலும் ஒரு ஒன்றரை வருடம் நாம் இப்படி கடக்க முடியாமல் காத்து நிற்கிறோம் என்று எண்ணியபடி … அப்போது ஒருவன் சற்றும் தயங்காமல் மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக் கண்டேன் அவனைப் பின் தொடரத் தொடங்குகையில் ஒரு வண்டி குரோதத்துடன் என்னை நோக்கி வந்தது எந்த வண்டியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/340

நிம்மதி

அம்மா இறந்தபோது ஆசுவாசமாயிற்று இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும் எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள் இனி என்னால் காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும் முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம் ஓடிவரும்  அலறல் என்னை திடுக்கிடச்செய்யாது இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதிகசிய செத்த பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம் நேற்றோடு இல்லாமலாயிற்று இனி நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34831

இ.எம்.எஸ்ஸும் தமிழும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு மலையாள மொழியை சமஸ்கிருத மயமாக்கியதாக கூறியிருந்தார்கள். அதற்கு காரணம் ஈ.எம்.எஸ் ஒரு ஆரிய பார்பனர் என்பதுதான். இதுபோன்ற உள் நோக்கம் ஏதேனும் அவருக்கு இருந்ததா? இதன் முழு பின்ணனி என்ன? சிவகுமார் சென்னை அன்புள்ள சிவக்குமார், நானும் யாரோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57014

அம்மையப்பம், நிம்மதி – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கோவையில் பேசும்போது கல்பற்றா சொன்னார், “கவிதையில் ஒரு wit இருக்கவேண்டும்” இதைக் கேட்ட பிறகு வாசிப்பவற்றில் எல்லாம் ‘wit’ ஐ தேடிக்கொண்டிருக்கிறேன். அவரது ‘நிம்மதி’யை வாசித்த போது, படைப்பில் உள்ள ‘wit’ ஐ ரசித்துக் கொண்டிருக்கும்போதே காலடியில் உலகம் நழுவி நம் நிம்மதியை தொலைக்கும் கணங்களே கவிதைக் கணங்கள் என்று கண்டுகொண்டேன். என்ன மாதிரியான ஒரு கவிதை!! புன்னகைக்க வைத்து சாகடிக்கும் ஒரு கவிஞன் !! — ஸ்ரீனிவாசன் அன்புள்ள ஸ்ரீனிவாசன், கல்பற்றா நாராயணனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34937

சுமித்ரா

கல்பற்றா நாராயணனிடமும் டி.பி.ராஜீவனிடமும் எட்டுவருடம் முன்பு ஊட்டி கவியரங்கில் சொன்னேன், நவீன காலகட்டத்தில் கவிஞன் எழுதவேண்டியது நாவல்தான் என. கவித்துவம் முழுமையாகவெளிப்படுவதற்குரிய கலைவடிவம் நாவலே. கட்டற்றது, மொழியின் எல்லா மடிப்புகளுக்கும் இடமளிப்பது. டிபி.ராஜீவன் சிலவருடங்கள் கழித்து அவரது முதல்நாவலை எழுதினார். ‘பாலேரிமாணிக்யம் ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கதா’ என்ற அந்நாவல் பெரும்புகழ்பெற்றது. ரஞ்சித் இயக்கத்தில் அது திரைப்படமாகவும் வெளிவந்தது. ராஜீவனின் இரண்டாவது நாவலான கோட்டூர் எழுத்தும் ஜீவிதமும் சென்றமாதம் திருவனந்தபுரத்தில் முதல்வர் உம்மன் சாண்டி வெளியிட நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34873

கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2

தற்செயல் ======== வீடு முழுக்க ஆட்கள் உள்ள அந்தப் பண்டிகைநாளில் ஒர் அறையிலிருந்து மற்றொரு அறைக்கும் ஓடும்வழியில் நொடிநேரம் அவள்முன் வந்தீர்கள். எங்கிருந்தோ வந்த ஒரு முத்தத்தை அவளுக்கு அளித்தீர்கள். பிறகு எல்லா பரபரப்பும் முடிந்தபின்னர் படுக்கையில் குப்புறவிழுந்து கண்ணீர்வடிக்கிறாள். திடுமென வந்துசேரும் இனிமையை எண்ணி. எதன்மீதும் தனக்கு ஒரு அதிகாரமும் இல்லையே என்று எண்ணி. ********* முரண்டு ====== இறந்தவர்கள் பிடிவாதக்காரர்கள். கங்கைநீர் வாயில் விட்டாலும் விழுங்க மாட்டார்கள். நாம் சுவரில் தலைமுட்டி உடைத்துக் கொண்டாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/380

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

கவிஞன் ====== பேருந்துக்கு அடியில் விழும் மகனை பிடித்து விலக்க முடியாமல் நின்று பரிதவிக்கும் அவனைபெற்றதுமே இறந்த அன்னையைப்போன்றவன் நான். எனக்கில்லை அதற்கேற்ற கையோ பலமோ. ******** உறுதியான நிலமல்லவா பயங்கரம்! ========================= மண்ணை நோக்கி பயந்து அலறுவதுண்டு ஒரு பைத்தியக்காரி. மேலிருந்து கீழே விழுகின்றவள் நிலத்தில் மோதித் தலைசிதறித்தானே இறக்கிறாள்? நிலத்தை அடைவதுவரை அவளுக்கு ஒன்றும் நிகழ்வதில்லையே? பின்னுக்கு சென்ற உயரமல்ல பின்னுக்குச்செல்ல மறுத்த நிலமல்லவா அவளைக் கொன்றது? உயரத்தின் சதுப்பல்ல நிலத்தின் உறுதியல்லவா அவளுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/331

சுமித்ரா- கடலூர் சீனு

நண்பர்களே , பொதுவாக என் இரவுகள் வாசிப்பில் கரையும் . இப்போதெல்லாம் இங்கு கடலூரில் , மாலை ஆறு மணி துவங்கி இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒருமணிநேரம் மின்சாரம் வருகிறது . கொசுக்கடி . வாசிப்பு இன்பத்திற்கான முதல் வாசிப்பைக்கூட , அறுபடாமல் நிகழ்த்தி முடிக்க இயலாத சூழலில் இரு இரவு இழந்து , கல்பற்றா நாராயணனின் முதல் நாவலான ”சுமித்ரா ” முதல் வாசிப்பு முடித்தேன் நவீனத்துவத்தை எனக்குள் இப்படி வரையறை செய்து வைத்துள்ளேன் . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34339

உறவுகளின் ஆடல்

ச. முத்துவேல் அவரது  இணையதளத்தில் எழுதியிருந்த இந்தக் கவிதை என்னை கவர்ந்தது. எளிமையான நேரடியான படிமம். உறவுகளில் புழங்குவதை ஒரு கச்சிதமான விளையாட்டாக முன்வைக்கிறது இந்தக்கவிதை. எதையும் தொடாமல் எதையும் வெல்லாமல் எதையும் இலக்குகொள்ளாமல் ‘ஆடி’த்திரும்பும் ஒரு வட்டு.     [இடப்பக்கம் ச.முத்துவேல். வலப்பக்கம் கவிஞர் உமா சக்தி]   நீ-யும் கேரம் போர்டில் இப்போது உன்முறை நீ வெற்றிகளை அடுக்கவில்லை வெற்றியை நோக்கி முன் நகரவில்லை எதிராளியின் வெற்றிக்கு தடைபோடவில்லை துணை போகவில்லை ஒருமுறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16871

ஈரோட்டில் கல்பற்றா நாராயணன்

நாளை நானும் ஈரோட்டு நண்பர்களும் வசந்தகுமாரும் கல்பற்றா நாராயணனும் சின்னமனூர் வழியாக மேகமலை செல்வதாக இருக்கிறோம். அதன்பொருட்டு இன்று மதியம் கல்பற்றா நாராயணன் ஈரோட்டுக்கு வருகிறார். ஈரோட்டு நண்பர்களுக்காக கிருஷ்ணன் கல்பற்றா நாராயணனுடன் ஓர் உரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஈரோடு அருகே உள்ள வள்ளிபுரத்தான்பாளையம் என்ற கிராமம் நாங்கள் சென்று மர்ந்து இயற்கைச்சூழலில் பேசிக்கொண்டிருக்கும் இடம். அங்கேதான் சந்திப்பு. கல்பற்றா நாராயணன் கவிதை, படிமங்கள் குறித்து பேசுவார். ஆர்வமுள்ளவர்கள் கிருஷ்ணனை 9865916970 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/5310

Older posts «