Tag Archive: கல்கி

மாலை விருந்தில்…
நான் எழுத்தாளர் டாப்னியுடன் இரவுவிருந்துக்குச் சென்றபோதுதான் பாட்டியை சந்திக்க நேர்ந்தது.  கூடவே எங்கள் நண்பர் லயனலும் வந்திருந்தார். இல்லத்தலைவரான மூத்தசீமாட்டியைச் சந்தித்தது எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அறிமுகம்செய்து வைத்தேன். ”நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று கேள்விப்பட்டேன்” திருமதி வேய்ன் சொன்னாள் ”எனக்கு எப்போதுமே இலக்கியவாதிகளைப் பிடிக்கும். பல வருடங்களுக்கு முன்பு நான் மிஸ்டர் தாக்கரேயையும் மிஸ்டர் டிக்கன்ஸையும் சந்தித்திருக்கிறேன்…” அது பாட்டி தன் பேச்சைத்தொடங்கும் முறையாக இருக்கலாமென்று எண்ணிக்கொண்டேன். எழுத்தாளர் டாப்னே தன் ஆர்வத்தை வெளிக்காட்டினார்.கிழவி சொன்னாள். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/1604

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?
[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/79847

கல்கி, பு.பி.- அஸ்வத்
கல்கி போன்ற எழுத்தாளர்களின் இடத்தைத் தாங்கள் அங்கீகரிக்கும் போதிலும் அவரைப் பற்றி யாராவது கேட்கும் போது நீங்கள் அடையும் எரிச்சல் எனக்கு சற்று அதீதமாய்ப் படுகிறது. அவர் போன்ற எழுத்தாளர்கள் அடுக்கி வைத்த செங்கல்லின் மீது ஏறி நின்று கொண்டு தானே நம் போன்றவர்கள் கட்டிடம் எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.உங்களின் அலர்ஜியை எனக்கு சுந்தர ராமசாமியின் ‘சிவகாமி சபதத்தை முடித்து விட்டாளா?’வுடன்தான் (ஜெ ஜெ சில குறிப்புகள்) ஒப்பிடத் தோன்றுகிறது. இன்னொன்று எழுத்தையும் மீறிய எழுத்தாளனின் மனம் எப்படியாவது …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/77200

புதுமைப்பித்தனின் வாள்
கல்கியின் எழுத்தை இலக்கியத்தின் உச்சமாக கருதி அதையொட்டி சிந்தனைசெய்தால் நாம் நல்ல இலக்கியங்களை உருவாக்க முடியாதென்று சொன்னார் க.நாசு. உலக இலக்கியங்கள் மீதும், இந்தியப்பேரிலக்கியங்கள் மீதும், நம் தமிழ் பண்டை இலக்கியங்கள்மீதும் உள்ள வாசிப்பே நம் ரசனையை உருவாக்கும் என்றும் நல்ல இலக்கியங்களை ரசிக்கவும் உருவாக்கவும் அதுவே அவசியம் என்றும் வாதிட்டார்.Permanent link to this article: https://www.jeyamohan.in/7798

பாரதியின் இன்றைய மதிப்பு
ஜெ, பாரதியின் பாடல்களுக்கு இந்திய சுதந்திரம் என்ற பின்னணி இல்லாமல் பொருள் இருக்கிறதா? நான் பாரதி படித்திருக்கிறேன். சுதந்திரப்பாடல்கள் என்பவை ஒரு பிரிவே. அதைத்தாண்டி அவர் வசனக்கவிதை, கண்ணன் பாட்டு குயில் பாட்டு என பல வகைகளில் எழுதியுள்ளார். நீங்கள் சொல்லுங்கள், அவர் முன்னோடி என்பது ஒப்புக்கொள்ளக்கூடியதே. ஆனால் அதையும் தாண்டி சமகால இலக்கிய உலகில் அவரது இடம் என்ன? -ராம் ராம், முதன்முதலாக 1995ல் இலங்கையில் ஹட்டன் நகரில் இருந்து வந்த ஒரு இதழில் பாரதி பற்றிய என் கருத்தை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/21383

கல்கியின் சமணம்
அன்புள்ள ஜெ கல்கியின் சமணம் பற்றிய என் கட்டுரை உங்கள் கவனத்துக்காக  அன்புடன் நமதன் அன்புள்ள நமதன், உங்கள் கட்டுரை வாசித்தேன் சமணம் மற்றும் பௌத்தம் பற்றி மரபான ஒரு சைவ நோக்கு உள்ளது. அது சைவ பக்தி இயக்கத்தால் உருவாக்கப்பட்டு மடங்கள் வழியாக நிலைநாட்டப்பட்டது. சைவமதம் சமண பௌத்த மதங்களுடன் விவாதித்துப் போட்டியிட்டு உருவானதாகையால் அந்த மனவிலக்கமும், எதிர்மறை நோக்கும் அதனிடம் இருந்தது. சிவகாமியின் சபதத்தில் பௌத்த பிட்சு நாகநந்தி  காமகுரோதமோகங்களின் குவியலாகவே வருகிறார் இல்லையா? …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/20677