Tag Archive: கல்கத்தா

வடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா

பாரோவிலிருந்து இரவோடிரவாகத் திரும்பினோம். இனி நேராக ஊர் திரும்புதல்தான் என்ற எண்ணம்,மனதை நிறைவும் கனமும் கொள்ளச்செய்தது. ஆனால் ஊர் மிகத்தொலைவில் இருந்தது. பல மாநிலங்களுக்கு அப்பால். இருளில் சுழன்று மறைந்த மலைகளைப்பார்த்துக்கொண்டே பயணம் செய்தோம். பூட்டானின் பழைய மாளிகைகளில் ஒன்று வரும் வழியில் பார்த்த பாலம் இருளிலேயே மறைந்தது. அதற்கும் முன்னால் ஒரு பழைய இடிந்த பூட்டானிய வீட்டைச் சென்று பார்த்தோம். மண்ணால் கட்டப்பட்ட அடித்தள அமைப்பு மட்டுமே இருந்தது. உள்ளே நீர் தேங்கியிருந்தது. ஒரு பூட்டானிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16792

வடகிழக்கு நோக்கி 2 – நெடும் பயணம்

இந்த பயணத்தின் மிக முக்கியமான அம்சமே பயணம்தான். பார்த்த நாட்களை விட பயணம் செய்த நாட்களே அதிகமென்ற பிரமை. கல்கத்தாவில் இருந்து சிலிகுரி வரை ரயில் இருக்கை முன்பதிவு செய்திருந்தோம், இரண்டு மாதம் முன்னரே. இருக்கை உறுதியாகவில்லை. ஆகவே பேருந்து முன்பதிவு செய்தோம். அரசு பேருந்து. ஆனால் எங்களிடம் அதற்காக பணம் வாங்கியது தனியார். அவர் அந்த விற்பனையை இன்னொருவருக்கு விற்றார். அவர் இன்னொருவருக்கு விற்றார். கடைசியாக இருக்கையை பதிவுசெய்தவருக்கு எங்களை தெரியாது. முதலில் பணம் வாங்கியவருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16771