Tag Archive: கலைச்சொற்கள்

ஏன் தமிழ்ச்சொற்கள்?

அன்புள்ள ஜெமோ, வெண்முரசை தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் வரும் தூயதமிழ்ச் சொற்கள் பல நான் இதுவரை கேள்விப்படாதவை. அவை அகராதிகளிலும் இல்லை. நீங்கள் வேண்டுமென்றே இச்சொற்களைப்போட்டு எழுதுகிறீர்களா? இதனால் வாசிப்பு சரளமாக நடக்கவில்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். உதாரணமாக எரிகுளம், பிழையீடு, நிலைத்திகிரிக்களம்….இவற்றை எப்படித்தெரிந்துகொள்வது? நரசிம்மன் அன்புள்ள நரசிம்மன், நான் விஷ்ணுபுரம் எழுதியபோதும் இதே குற்றச்சாட்டு இருந்தது. விஷ்ணுபுரம் தத்துவம், சிற்பம் சார்ந்த கலைச்சொற்களை சம்ஸ்கிருதத்தில் முதலில் சொன்னபின் அவற்றின் தமிழ் வடிவங்களையே பின்னர் கையாண்டது. அவற்றில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47576

கல்வி – பதில்கள்

இந்து தமிழ் நாளிதழில் நான் எழுதிய கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கான என் பதில்களை ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிடலாமென நினைக்கிறேன். 1] என் கட்டுரை போதிய அளவு ஆய்வுசெய்யாமல் 23 பேரை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது, போதிய புள்ளிவிவரங்கள் இல்லை என்று சொல்லி சிலர் எழுதியிருந்தனர். 23000 பேரிடம் பேசி எழுதியிருந்தால் கூட அவர்கள் தமிழகத்தில் மிகச்சிறுபான்மையினர் அல்லவா என்று வாதிடமுடியும். நான் இங்கே கருத்துவாக்கெடுப்புடன் முடிவுகளை வெளியிடவில்லை. என் கட்டுரை opinion என்ற தலைப்பின்கீழ் வருவது. எண்ணப்பதிவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40885

கலைச்சொற்கோவை

அன்புடையீர், பின்வரும் கலைச்சொற்கோவை தளத்தை உங்களுக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். http://kalaichotkovai.blogspot.com/ தமிழ்ச் சொற்கோவைக் குழாம் [email protected]

Permanent link to this article: https://www.jeyamohan.in/28343

சோ

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, தங்கள் நூல்களை நான் படித்ததில்லையாயினும், தங்களின் இணையதளத்தில் வரும் பெரும்பான்மையான பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் நான். இரண்டு விஷயங்களைப் பற்றித் தங்களிடம் கேட்க வேண்டும் என்று ஒரு ஆவல். 1. “சோ” ராமஸ்வாமி எழுதியிருக்கும்/ எழுதிக் கொண்டிருக்கும் புத்தகங்களை வாசித்திருக்கிறீர்களா? அவற்றைப் பற்றி தங்கள் கருத்து என்ன? (முக்கியமாக வால்மிகி ராமாயணம், மஹாபாரதம் பேசுகிறது, எங்கே பிராமணன் மற்றும் ஹிந்து மஹா சமுத்திரம் ஆகியவற்றைப் பற்றி தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27559

சிற்பச்செய்திகள்

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நான் தங்களது விஷ்ணுபுரம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய கோயில் சார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு விமானம், பிரகாரம், முகமண்டபம் மற்றும் பல. இதுபோல சிற்பங்கள் குறித்த கலைச் சொற்கள். இவைகளை எப்படி புரிந்து கொள்வது? தயவுசெய்து வழிகாட்டவும். காட்டுவீர்களா? இப்படிக்கு பா.மாரியப்பன் அன்புள்ள மாரியப்பன் கோயில்சார்ந்த கலைச்சொற்கள் பொதுவாக வையாபுரிப்பிள்ளை பேரகராதியில் உள்ளன. தனியாக ஒரு கலைச்சொல்லகராதி இல்லை. இந்தப் பெருங்குறையை அ.கா.பெருமாள் அவர்களிடம் பேசியதுண்டு. பெருமாள், செந்தீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21461