Tag Archive: கலைகள்

உணர்ச்சிகளும் கலையும்

    ஓர் உரையாடலில் இன்றைய இலக்கியத்தில் உணர்வெழுச்சிகளுக்கான [emotions] இடம் என்ன என்று கேட்கப்பட்டது.  நாம் இலக்கியத்தில் இன்று மெல்லுணர்ச்சிகளை இழந்துகொண்டிருக்கிறோமா என்று ஐயம் தெரிவிக்கப்பட்டது. இனிமேல் வரவிருக்கும் இலக்கியம் என்பது உணர்வெழுச்சிகளுக்கு எதிரானதாக, அறிவார்ந்த கூர்நோக்கு மட்டும் கொண்டதாக இருக்கும் என்றும் ஆகவே பகடி, அங்கதம் ஆகியவையே இனி இலக்கியத்தின் மையப்போக்காக இருக்கும் என்றும் ஒருவர் சொன்னார் ஆனால் இந்த வரிகளை ஏறத்தாழ இதேபோல ஆரம்பகாலப் பின்நவீனத்துவர் சொல்லி இருபத்தைந்தாண்டுகளாகின்றன. தமிழிலும் அது எதிரொலித்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19538

கடிதங்கள்

அன்புள்ள ஜெ., ஒரு மேற்கோள் மொத்த ஆசிரியனையும் நம்மை நோக்கி இழுத்து வரும் என்பது சத்தியமான வார்த்தைகள். “தாயின் அன்பும் சுய நலம் சார்ந்ததே… உண்மையான அன்பு அதனினும் வேறுபட்டது” என்ற வரி ஓஷோவையும் “ஓயாமல் மனம் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பது அறிவின் அடையாளம் அல்ல…..” என்ற வரிகள் ஜேகே-வையும் என்னைக் கண்டடைய வைத்தது. ஆனால், மேற்கோள்கள் ஒரு கண்ணி வெடி என்பதையும் மறுக்க முடியாது. தீவிரவாதிகளைக் கூட உருவாக்கி விடும். நன்றி ரத்தன் அன்புள்ள ரத்தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18016