Tag Archive: கலை

கலையில் அதிவன்முறை

  மதிப்பிற்குரிய ஜெயமோகன், மனிதர்களைக் கொடுமைப்படுத்துவதை ஒரு மையமாக வைத்து பல ஆங்கில மற்றும் இதர மொழித் திரைப்படங்கள் எடுத்து வருகிறார்கள். இப்போதெல்லாம் torture-porn என்றே இதனை அழைக்க ஆரம்பித்து விட்டனர். ஹாஸ்டல் என்ற திரைப்படம் ஓரிரு ஆண்டுகள் முன்பு வந்தது – அதில் சித்திரவதைக் காட்சிகள் தத்ரூபமாகக் காட்டப் படுகின்றன. ஒரு வகையில் சித்திரவதை நிகழ்த்துபவர்களுடன் படத்தைப் பார்க்கிறவர்களும் சேர்ந்து உட்கார்ந்து கிடைத்த மனிதனை சித்திரவதை செய்வதை ரசிக்கட்டும் என்று படம் எடுக்கிறார்களோ என்று ஐயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35624

கலை இலக்கியம் எதற்காக?

  அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த என்னால் இயலாமல்போகலாம். நான் பேச்சாளனல்ல, எழுத்தாளன்.என் ஊடகம் எழுத்து. ஆகவே சில சொற்களை இங்கே சொல்லி விடைபெறலாமென என்ணுகிறேன் சிங்கப்பூருக்கு நான் வந்து சில நாட்களாகின்றன. இங்கே சுப்ரமணியன் ரமேஷ் என்ற நண்பரின் இல்லத்தில் தங்கியிருந்த போது அங்கு வந்த இந்திரஜித் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46

பொம்மையும் சிலையும்

அன்புள்ள ஜெயமோகன், இந்து மதத்தின் வழிபாட்டுச் சிலைகளை ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றியபடி விளக்கிக்கொள்ளலாம் என்று நீங்கள் சொல்கிறீர்களா? அவ்வாறு ஆளுக்காள் அதை மாற்றுவார்கள் என்றால் அதன் பின்னர் நம்முடைய விக்ரகங்கள் எப்படி இருக்கும்? வழிபடுவதற்கு சாமிகளே இருக்காதல்லவா? ஒருமதத்தின் அடிப்படைகளை மாற்றிக்கொண்டே இருப்பது எப்படி சரியானதாக ஆகும்? நா.ஸ்ரீதர் அன்புள்ள ஸ்ரீதர் கொஞ்சநாள்முன்னர் மாலை வீட்டில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்தேன். அருகே பிள்ளைகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.சமையலறையில் அருண்மொழி சமையல்செய்துகொண்டு, காய்கறி நறுக்கிக்கொண்டு, பாட்டுகேட்டுக்கொண்டு, செல்போனை காதில் இடுக்கியபடி ‘டெலிவரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5121

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23

பகுதி ஐந்து : முதல்மழை [ 2 ] இளஞ்சிவப்புத்திரைகள் போடப்பட்ட பன்னிரண்டு சாளரங்களைக் கொண்டதும் மெல்லிய மரப்பட்டைகளாலும் கழுதைத்தோலாலும் கூரையிடப்பட்டதும் பன்னிரு சக்கரங்கள் கொண்டதும் நான்கு குதிரைகளால் இழுக்கப்பட்டதுமான கூண்டுவண்டியில் பத்து இளவரசிகளுடன் காந்தாரி அஸ்தினபுரிக்குப் பயணமானாள். இளமையிலேயே வளைத்துக் கட்டப்பட்டு அவ்வண்ணமே வளர்ந்து முழுமைபெற்ற எட்டு மூங்கில்விற்களின் மேல் அந்த வண்டியின் உடல் அமைக்கப்பட்டிருந்தமையால் சாலையில் சக்கரங்கள் அறிந்த அதிர்வுகள் வண்டியை அடையவில்லை. வண்டியின் மேல் அஸ்தினபுரியின் கொடி பறந்துகொண்டிருந்தது. வண்டியைச்சுற்றி காவல்வீரர்கள் விற்களுடனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46375

ரசனை கிடைக்கப்பெறுவதா ?

ஆசிரியருக்கு, நீங்கள் எனக்கு சிற்பக்கலையை அறிமுகப்படுத்திய அந்த அம்பை கோயில் கணங்கள் மறக்க முடியாதவை , பின் முண்டந்துறை செல்லும்போது ஓவியத்தையும், பின் ஓரிரு ஆண்டுகளில் சிதம்பரத்தில்  நடனத்தையும், கடுமையான எதிர்விசை இருந்தும் மெல்ல மெல்லக்  கர்நாடக இசையையும் என சம வீச்சுடன் இவைகள்  அறிமுகமானது , பின் நமது திருவையாறு பயணமும் என இப்போது திரும்பிப் பார்க்கையில் எனக்குக் கிட்டத்தட்ட எல்லாக் கலைகளையும், அதன் அடிப்படைகளையும் நீங்கள்தான் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்.  இன்று அந்த சூடு தணிந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20746

கலை உலகை சமைத்த விதம்

கலைகள் எவ்வாறு தோன்றின? கலைகளில் மிகைப்படுத்துதல் ஏன்? கலை காலப்போக்கில் எவ்வாறு மாறி வந்துள்ளது? கலை அதிகாரத்தை நிலை நிறுத்த எவ்வாறு பயன்பட்டது, பயன்படுகிறது? -உட்பட இன்னும் பல கேள்விகளுக்குப் பதில் தர முயல்கிறது இந்த ஆவணப்படம். நமக்குத் தெரிந்த விலையனூர் ராமச்சந்திரன் மற்றும் தெரியாத இன்ன பிற முன்னணி ஆராய்ச்சியாளர்கள் பலரின் விளக்கங்களுடன். இரண்டு குறுந்தகடுகள். நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். http://www.pbs.org/howartmadetheworld/ வேணு

Permanent link to this article: https://www.jeyamohan.in/18124

மெய்ஞானம் சில்லறை விற்பனை

சமீபத்தில் நண்பர்கள் அனுப்பிய இணைப்புகள் அரசியல்… http://www.youtube.com/watch?v=ohpo2xDabqg&feature=player_embedded#! அறிவியல் ஆன்மீகம் கலை கரிஸ்மாட்டிஸம் பதிலடி கடைசியாக http://vhtv.in/index.asp?fl=paavainonbu அல்லேலூயா! ஹரிஓம்!

Permanent link to this article: https://www.jeyamohan.in/11644