Tag Archive: கலிங்கபுரி

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48

பகுதி ஏழு : கலிங்கபுரி [ 12 ] “கலிங்கர்களுக்கு முன் இந்நகருக்கு கூர்மபுரி என்று பெயர்” என்றார் சூதரான அருணர். “கூர்மகுலத்து மன்னர்கள் நூற்றுவர் இந்நகரை ஆண்டிருப்பதாக இங்குள்ள காச்சபாமர்கள் என்னும் பழங்குடியினர் சொல்கிறார்கள். அவர்களின் மொழியில் இது காச்சபாமனூரு எனப்படுகிறது. வம்சதாராவின் பெருக்கு வந்துசேரும் கடல்முனையில் இருக்கும் இந்த நகரம்தான் கலிங்கக்கடற்கரையிலேயே தொன்மையானது. ஒருகாலத்தில் மிகஉயர்ந்த கயிறுகளுக்காக பீதர்கலங்கள் இங்கே வந்துகொண்டிருந்தன.” அவர்களின் படகில் இரண்டு பாய்கள்தான் இருந்தன. அதைச் செலுத்துபவர்களில் இருவர் பெரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57566

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 47

பகுதி ஏழு : கலிங்கபுரி [ 11 ] அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட உவகையை அர்ஜுனன் வியப்புடன் அறிந்தான். அந்நகரம் ஒருபோதும் அவனுக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. மிக இளமையில் அன்னையுடன் அந்த நகரின் கோட்டைவாயிலைக் கடந்து உள்ளே வந்தபோது அங்கே ஒலித்த முரசொலியும் முழவொலியும் கொம்புகளின் பிளிறல்களும் இணைந்து அவனை பதறச்செய்தன. அதன்பின் பிறந்ததுமுதல் அவன் அறிந்திருந்த சதசிருங்கத்துக் காட்டின் அமைதியையே அவன் எண்ணிக்கொண்டிருந்தான். அவனை ஏற்றிச்சென்ற அந்த ரதம், கைகளைவீசி கூச்சலிட்ட மக்கள்திரள், மலர்மழை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57523

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46

பகுதி ஏழு : கலிங்கபுரி [ 10 ] யானை ஒன்று பிறையம்பால் மத்தகம் பிளக்கப்பட்டு இறந்து கிடப்பதை அர்ஜுனன் கண்டான். அது ஒரு படுகளம். குருதி தெறித்த கவசக்கால்கள் சூழ்ந்து நின்றிருக்க அப்பால் அப்போதும் நடந்துகொண்டிருந்த பெரும்போரின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. யானை உடலின் கருமையில் மறைந்து வழிந்த குருதி சிவந்து சொட்டி மண்ணை நனைத்து ஊறிமறைந்து கொண்டிருந்தது. இறுதியாக எஞ்சிய துதிக்கைத் துடிப்பு அடங்கியபின்னர் அந்த சிவந்த சிறிய அம்புத்துளைகளில் ஈக்கள் சென்றமர்ந்தன. “அஸ்வத்தாமா, என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57514

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45

பகுதி ஏழு : கலிங்கபுரி [ 9 ] “புரவியின் முதுகில் ‘அமர்க’ என்னும் அழைப்பு அமர்ந்திருக்கிறது. யானையின் முதுகிலோ ‘அமராதே’ என்னும் அச்சுறுத்தல். குதிரைமேல் ஏறுவது கடினம், ஏறியமர்ந்தபின் அந்தப்பீடத்தை மானுட உடல் அறிந்துகொள்கிறது. ஒரேநாளில் குதிரை தன்மீது அமர்பவனை அறிந்துகொள்கிறது. அமர்ந்தவன் உடலாக அது மாறுகிறது. தன்மேல் எழுந்த இன்னொருதலையை குதிரை அடைகிறது. அதன் சிந்தனையை, சினத்தை, அச்சத்தை அதுவும் நடிக்கிறது. குதிரை மனிதனால் முழுமைகொள்கிறது. மாவீரர்கள் தங்கள் புரவிகளுடன் விண்ணுலகேறுகிறார்கள்” துரோணர் சொன்னார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57506

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 44

பகுதி ஏழு : கலிங்கபுரி [ 8 ] குடிலுக்கு முன் எரிந்த நெருப்பைச்சுற்றி மாணவர்கள் தரையில் அமர்ந்திருக்க நடுவே துரோணர் பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவரது காலடியில் அஸ்வத்தாமன் அமர்ந்திருக்க அவர் பிரமதத்தை விட்டு தான் வந்ததைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். இரவு சென்றுவிட்டபின்னரும் காற்றில் நீராவி நிறைந்திருப்பதுபோல புழுங்கியது. மரங்கள் அனைத்தும் ஓசையும் அசைவும் இன்றி இருளுக்குள் நின்றிருந்தன. “பீஷ்மபிதாமகரிடம் நான் பிரமதத்தில் எளிய ஆசிரியனாக இருந்ததையும், அங்கிருந்து வெளியேற நேர்ந்ததையும் பற்றிச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57486

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43

பகுதி ஏழு : கலிங்கபுரி [ 7 ] கங்கைக்கரை புல்வெளியில் குறுங்காட்டின் விளிம்பில் நின்றிருந்த சிறிய குதிரைக்கூட்டத்தை சுட்டிக்காட்டி துரோணர் சொன்னார் “மண்ணிலுள்ள உயிர்க்குலங்களை கடல் என்று கொண்டோமென்றால் புரவி அதன் நுரை. உயிர்க்குலங்களை அனல் என்று கொண்டோமென்றால் புரவி அதன் புகை. உயிர்க்குலங்களை ஒரு விராடமானுட உடல் என்று கொண்டோமென்றால் புரவி அதன் கண்ணிமை. தேவர்கள் அமரும் பீடத்தை பிறப்பிலேயே தன் முதுகில்கொண்டு மண்ணுக்குவரும் ஒரே உயிர் அதுதான்.” எட்டு இளங்குதிரைகள் கொண்ட அக்குழுவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57469

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42

பகுதி ஏழு : கலிங்கபுரி [ 6 ] “தந்தையும் தாயும் நம் பிறப்பால் நாமடையும் குருநாதர்கள். அனல், ஆத்மா, ஆசிரியன் மூவரும் நாம் கண்டடையவேண்டிய குருநாதர்கள். குருநாதர்கள் வழியாகவே ஞானம் முழுமையடையமுடியும். ஏனென்றால் மானுடஞானம் என்று ஒன்று இல்லை. அது இயற்கையிலுள்ள விலங்குகள் புழுபூச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய மெய்ஞானமே. அந்தமெய்ஞானமோ ஏழுலகிலுமுள்ள ஞானங்களின் சிறுபகுதி. ஏழுலகங்கள் பிரம்மத்தின் துளிக்கணங்கள். மானுடஞானம் என்பது துமி. உயிர்களின் ஞானமென்பது துளி. பிரம்மாண்ட ஞானம் என்பது அலை. பிரம்மஞானமென்பதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57446

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41

பகுதி ஏழு : கலிங்கபுரி [ 5 ] மூத்தயானையாகிய காலகீர்த்தி நோயுற்றிருப்பதாகவும் பீமன் அங்கே சென்றிருப்பதாகவும் மாலினி சொன்னதைக் கேட்ட அர்ஜுனன் அவளிடம் கிருபரின் ஆயுதசாலைக்குச் செல்வதாக சொல்லிவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டதும் “வடக்குவாயிலுக்கு” என்றான். “இளவரசே…” என்றான் ரதமோட்டி. “வடக்குவாயிலுக்கு…” என்று அர்ஜுனன் மீண்டும் சொன்னதும் அவன் தலைவணங்கி ரதத்தைக் கிளப்பினான். அர்ஜுனன் பீடத்தில் நின்றபடி தெருக்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். காவல்மாடங்கள் முன்னால் ஆயர்பெண்களுடன் சொல்லாடிக்கொண்டு நின்ற வீரர்கள் ரதத்தை வியப்புடன் திரும்பிப்பார்த்தனர். ரதம் அரண்மனையின் கிழக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57437

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 40

பகுதி ஏழு : கலிங்கபுரி [ 4 ] அர்ஜுனன் அரண்மனைக்கட்டடங்களின் நடுவில் சென்ற கல்வேயப்பட்ட பாதையில் ஓடி மடைப்பள்ளிகள் இருந்த பின்கட்டை நோக்கிச்சென்றான். சரிந்து சென்ற நிலத்தில் படிகளை அமைப்பதற்குப்பதிலாக சுழன்றுசெல்லும்படி பாதையை அமைத்திருந்தார்கள். கீழே மரக்கூரையிடப்பட்ட மடைப்பள்ளியின் அகன்ற கொட்டகைகளின்மேல் புகைக்கூண்டுகளில் இருந்து எழுந்த புகை ஓடைநீரிலாடும் நீர்ப்பாசி போல காற்றில் சிதறிக்கரைந்துகொண்டிருந்தது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் உரசிக்கொள்ளும் ஒலியும் பேச்சொலிகளும் கலந்த இரைச்சல் கேட்டது. அவன் மடைப்பள்ளியின் மையக்கொட்டகையை அணுகி தயங்கி நின்றான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57425

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 39

பகுதி ஏழு : கலிங்கபுரி [ 3 ] பயிற்சிக்களம் புகுவதற்கான ஆடையுடன் அர்ஜுனன் கூடத்தில் வந்து காத்து நின்றபோது மாலினி “வில்வித்தையில் இனி தங்களுக்கு யார் பயிற்சியளிக்க முடியும் இளவரசே? பாவம் கிருபர், அவர் தங்களைப்பார்த்து திகைத்துப்போயிருக்கிறார்” என்றாள். அர்ஜுனன் “பயிற்சி என்பது கற்றுக்கொள்வதற்காக அல்ல” என்றான். மாலினி “வேறெதற்கு?” என்றாள். “நான் வேறெதையும் விளையாட விரும்பவில்லை” என்றான் அர்ஜுனன். “ஏன்?” என்று அவள் மீண்டும் வியப்புடன் கேட்டாள். “விளையாட்டு இரண்டுவகை. கைகளால் விளையாடுவது ஒன்று. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57309

Older posts «